மோகன்லால் வீட்டில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்: ரஜினி பங்கேற்பு

By Siva

சென்னை: 1980களில் பிரபலமாக இருந்த நடிகர், நடிகைகள் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வீட்டில் கூடினர். அவர்கள் அனைவருக்கும் மோகன்லால் அவரவர் ஓவியத்தை பரிசாக அளித்தார்.

1980களில் பிரபலமாக இருந்த நடிகர், நடிகைகள் ஆண்டுக்கு ஒரு முறை யார் வீட்டிலாவது சந்தித்து பேசி மகிழ்வதுண்டு. அப்படி இந்த ஆண்டுக்கான சந்திப்பு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த சனிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

இதில் ரஜினி, பிரபு, சிரஞ்சீவி, வெங்கடேஷ் உள்பட மொத்தம் 32 பேர் கலந்து கொண்டனர்.

நாயகிகள்

நாயகிகள்

1980களில் உங்கள் தூக்கத்தை கெடுத்த கனவுக் கன்னிகளுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்டோ எடுத்துக் கொண்டார்.

லால்

லால்

சுஹாசினி மணிரத்னம் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் மோகன்லாலுடன் பளிச் புன்னகையில்.

கோபமோ?

கோபமோ?

நதியா, லிசி பிரியதர்ஷன் பார்ப்பதை பார்த்தால் யாரையோ முறைப்பது போல் உள்ளது. சுஹாசினி மட்டுமே சிரித்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினி

ரஜினி

ஹவாய் தீம் டிரஸ் அணிந்து வந்த ரஜினிகாந்த். விருந்துக்கு வந்தவர்கள் அனைவரும் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஓவியம்

ஓவியம்

மோகன்லால் அருமையாக ஓவியம் வரைவார். அவர் தான் ரஜினியை ஓவியமாக வரைந்து அதை அவருக்கு பரிசளித்தார்.

ஆட்டோகிராப்

ஆட்டோகிராப்

லால் ஏட்டன் பார்ட்டிக்கு வந்தவர்கள் அனைவரையும் ஓவியமாக வரைந்து வைத்திருந்தார். அதில் தன் ஓவியத்திற்கு கீழே கையெழுத்திடும் ரஜினி.

சிரு

சிரு

மோகன்லால் சிரஞ்சீவியை அழகுற வரைந்து அதை அவருக்கு பரிசளித்து மகிழ்ந்தார்.

கலை

கலை

சிரஞ்சீவி தனது ஓவியத்திற்கு கீழ் கையெழுத்திடுகிறார். லால் ஏட்டன் என்னமா ஓவியம் வரைகிறார் என்று கூறுகிறாரோ?

அம்பரீஷ்

அம்பரீஷ்

கன்னட நடிகர் அம்பரீஷ் பார்ட்டியில் தனது மனைவி சுமலதாவுடன் கலந்து கொண்டார். அவருக்கு மோகன்லால் ஓவியம் பரிசாக அளித்தபோது எடுத்த படம்.

சின்ன தம்பி

சின்ன தம்பி

பார்ட்டிக்கு லேட்டாக வந்தாலும் உங்களுக்கும் ஒரு ஓவியம் வைத்திருக்கிறேன் என்று பிரபுவுக்கு பரிசளித்துள்ளார் மோகன் லால்.

எப்படி இருக்கு

எப்படி இருக்கு

இந்த போஸ் எப்படி இருக்கு என்று கேட்கிறாரோ பிரபு. மோகன்லாலுக்கு தான் எத்தனை திறமைகள் உள்ளன.

வெங்கி

வெங்கி

தெலுங்கு ஹீரோ வெங்கடேஷ் பார்ட்டியில் கலந்து கொண்டு பழைய நினைவுகளை அசைபோட்டார். அவரும் மோகன்லால் அளித்த ஓவிய பரிசை பெற்று மகிழ்ந்தார்.

பரிசு

பரிசு

பார்ட்டிக்கு வந்த நாயகிகள் அனைவரும் அருமையான விருந்து கொடுத்த மோகன்லாலுக்கு பரிசு அளித்தனர். அடுத்த ஆண்டு எங்கு எப்பொழுது சந்திப்பது என்பது முடிவு செய்யப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X