»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

அழகி படத்தில் சின்ன வயது நந்திதா தாஸாக வந்து நம் மனதைக் கொள்ளையடித்த மோனிகாவும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

ஷெரீன்கள், ரீமா சென்கள், கிரண்களுக்கு மத்தியில் இனி தான் மட்டும் சும்மா பாவாடை தாவணியிலும், சேலையிலும் வந்து போனால் சத்தியராஜுக்கு அம்மா வேடத்தில் நடிக்கக் கூப்பிட்டுவிடுவார்கள் என்று பயந்து போய் இருக்கிறார்.

இதனால் கவர்ச்சியில் குதிக்க முடிவு செய்துவிட்டார். முதலில் தேவயானி மாதிரி நடிக்க ஆசைப்பட்டவர் இப்போது உடைகளை குறைக்க முன் வந்துள்ளார். தனது கவர்ச்சி போஸ்களை ஆல்பமாகப் போட்டு தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்க ஆரம்பித்துள்ளார்.

கேட்டால், கவர்ச்சி காட்டாமல் தமிழ் சினிமாவில் நீடிப்பது கஷ்டம் என்கிறார். அழகிக்குப் பிறகு நல்ல ரோல்கள் வரும் என்று காத்திருந்தாராம். ஆனால், பந்தா பரமசிவம் படம் தவி வேறு எதுவும் வரவில்லை. அதிலும் கூட உப்புச் சப்பு இல்லாத அப்பாஸ் தான் இவருக்கு ஹீரோ. இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ விக் பிரபு.

அஜித், விஜய், சூர்யா என கண்களைப் பாய்ச்சி வரும் மோனிகா அவர்களுக்கு ஏற்றமாதிரி கவர்ச்சி ஹீரோயினாக முன்னேறுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

இவர் கவர்ச்சிக்குத் தாவ முடிவு செய்ததற்கு இன்னொரு காரணம் ஆந்திரத் திரையுலகம்.

அங்கு சில படங்களில் புக் ஆகியுள்ள இவரை பாடல் காட்சிகளில் கோழி உரிப்பது மாதிரி உரித்துவிட்டார்களாம்.

இதனால் மேலும் வாய்ப்புகள் வந்து சேர அதே டெக்னிக்கை தமிழிலும் டிரை பண்ண முடிவு செய்துள்ளார்.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டது இவரது குடும்பம். ஆனால், நான் ஒரு தமிழ்ப் பெண் என்று கூறிக் கொள்கிறார்.

இதைச் சொன்னாலே தமிழ் சினிமாவில் சான்ஸ் குடுக்க மாட்டாங்களே!.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil