»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

மணிரத்னத்தின் சூப்பர் ஹிட் படமான அலைபாயுதே, இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. மாதவனைஅறிமுகம் செய்த இந்தப் படத்தை இந்தியில் இயக்கப் போவது மணி ரத்னத்தின் முன்னாள் உதவியாளர் ஷாத்அலி. மாதவன் கேரக்டல் விவேக் ஓபராயும், ஷாலினி கேரக்டல் ராணி முகர்ஜியும் நடிக்கவிருக்கிறார்கள்.

சிம்ரனுக்கு வாய்ப்புகள் மிக வேகமாக குறைந்து வந்தன. பம்மல் வந்தாலும் வந்தது வாய்ப்புகள் குவிந்துவிட்டன.கமலின் ஆஸ்தான ஹீரோயினாக மாறிவிட்டதோடு மட்டுமல்லாமல் மேலும் பல படங்களில் புக் ஆகிவிட்டார்.இப்போது சிம்ரன் கைவசம் 9 படங்கள் இப்போது உள்ளதாம்.

நடிகர் சரவணன் (ஞாபகம் இருக்கிறதா?) ஒரு படத்தை இயக்கி, நடிக்கவுள்ளார். தாயுமானவன் என்று அதற்குப்பெயரிட்டுள்ளார். இதில் இரட்டை வேடமாம் அவருக்கு. யாரும் தன்னை நடிக்க அழைக்காததால் கோபத்தில்இப்படி ஒரு டேஞ்சரான முடிவாம்.

அழகியின சின்ன வயது நந்திதா தாஸாக நடித்த மோனிஷா தனது பெயரை மோனிகா என்று மாற்றியுள்ளாராம்.கார்த்திக்குடன் உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேனில் நடித்த கேரள நடிகை மோனிஷா விபத்தில் இறந்ததத்அந்த பெயர் வேண்டாமே என்று சில சினிமாகாரர்கள் சொன்ன யோசனை தான இதற்குக் காரணமாம்.

சின்னி ஜெயந்த் நாயகனாக நடிக்கும் ஒரு தடவை சொன்னா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போலவே பேசிநடித்துள்ளாராம். பாபா வெளிவர உள்ள நிலையில் இதெல்லாம் வேண்டாம் என்று ரஜினி கூறிவிட நொந்துபோய்அவரது வீட்டுக்கு ஓடிப் போய் படம் பாதி எடுக்கப்பட்டுவிட்டதை விளக்கினாராம். பெரிய மனது காட்டிய ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துவிட்டு ஓகே சொல்லிவிட்டாராம். இது எப்படி இருக்கு?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil