For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிளாக் பஸ்டர் அடிக்கும் மலையாள படங்கள்.. தொடர்ந்து சாதிக்கும் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே”!

  |

  கொச்சி: மலையாளம் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் "ஜெய ஜெய ஜெய ஜெய ஹே" Cheers Entertainments இரண்டாவது தொடர் வெற்றிப்படமாக கொடி நாட்டியுள்ளது.

  Cheers Entertainments சார்பில் லக்ஷ்மி வாரியர் & கணேஷ் மேனன் தயாரிப்பில், விபின் தாஸ் இயக்கத்தில், பாசில் ஜோசப் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முதன்மை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் "ஜெய ஜெய ஜெய ஜெய ஹே".

  கடந்த மாதம் 28 ஆம் தேதி கேரளா மற்றும் GCC திரையரங்குகளில் வெளியான இப்படம், பார்வையாளர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் சமீபத்திய மலையாள சினிமாவின் சாதனைகளை தகர்த்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

  ஃபேமிலி மேன்3 வர அதிக வாய்ப்புகள் இருக்கு.. 2023ல நான் ரொம்ப பிஸி- ப்ரியாமணி ஓபன் டாக்! ஃபேமிலி மேன்3 வர அதிக வாய்ப்புகள் இருக்கு.. 2023ல நான் ரொம்ப பிஸி- ப்ரியாமணி ஓபன் டாக்!

  பல பிரபலங்கள்

  பல பிரபலங்கள்

  இயக்குநர் விபின் தாஸ், நஷித் முகமது ஃபாமியுடன் இணைந்து இப்படத்தை எழுதியுள்ளார். இத்திரைப்படத்தில் பாசில் ஜோசப், தர்சனா ராஜேந்திரன், ஆனந்த் மன்மதன், அஜீஸ் நெடுமங்காட், சுதீர் பரவூர் ஆகியோருடன், பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ஹீரோ பாசில் ஜோசப், மின்னல் முரளி இயக்கிய திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் மற்றும் நாயகி தர்ஷனா ஹிருதயம் படத்தின் மூலம் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

  குடும்ப படங்கள்

  குடும்ப படங்கள்

  அனைவரும் ரசிக்கும்படியான முழுமையான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள படம் தான் "ஜெய ஜெய ஜெய ஜெய ஹே". இப்படம் ராஜேஷ் ஜெயா தம்பதியினரின் திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவர்களுக்குள் நிகழும் கதையை சொல்கிறது. மிகவும் அவசியமான ஒரு சமூகப் பிரச்சினையை அசத்தலான நகைச்சுவையுடனும், அனைத்து தாக்கங்களுடனும் எடுத்துச் சென்றதில் இயக்குநர் மிகச் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது.

  சாதனை படைக்கும் மலையாள படங்கள்

  சாதனை படைக்கும் மலையாள படங்கள்

  இப்படம் இந்த ஆண்டில் மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறி சாதனை படைத்து வருகிறது. "ஜெய ஜெய ஜெய ஹே" திரைப்படம் கேரளா மற்றும் GCC யின் ஆரம்ப வெளியீட்டில் இருந்து மட்டும் ஏறக்குறைய 35 கோடிகளை வசூலித்துள்ளது. தற்போது மேலும் இப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படம் பிளாக்பஸ்டராக உருவானது மட்டுமல்லாமல், விமர்சகர்களிடமிருந்து அமோகமான விமர்சனங்களையும் பெற்றது.

  நல்ல டீம் ஒர்க்

  நல்ல டீம் ஒர்க்

  "ஜெய ஜெய ஜெய ஜெய ஹே" இந்தியாவின் பிற மாநிலங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. கேரளாவில் முதல் நாளிலேயே இப்படம் சுமார் 85 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தொழில் நுட்ப குழு ஒளிப்பதிவு பப்லு அஜு, இணை எழுத்தாளர் நஷித் முகமது ஃபேமி, எடிட்டர் ஜான்குட்டி, இசையமைப்பாளர அங்கித் மேனன், ஆக்சன் இயக்குநர் பெலிக்ஸ், கலை இயக்குனர் பாபு பிள்ளை.

  English summary
  Malayalam blockbuster movie “Jaya Jaya Jaya Jaya Hai” has flagged off Cheers Entertainments second consecutive hit. Released in Kerala and GCC theaters on 28th of last month, the film has been a huge hit with audiences and critics alike breaking records of recent Malayalam cinema.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X