நான் அஜித்தை வைத்து படம் இயக்குவது யாருக்கும் பிடிக்கவில்லை..கொந்தளிக்கும் வெங்கட் பிரபு!

சென்னை: கலகலப்பான கலர்ஃபுல்லான கமர்சியல் வெற்றி படங்களை கொடுத்து வருபவர் இயக்குநர் வெங்கட் பிரபு

மாநாடு தமிழில் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தை இப்போது தெலுங்கில் இயக்கி வருகிறார்

இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் நான் அஜித் வைத்து படம் பண்ணுவது யாருக்கும் பிடிக்கவில்லை என பீல் செய்து பேசியுள்ள வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

 முழுக்க முழுக்க புதுமுகங்கள்

முழுக்க முழுக்க புதுமுகங்கள்

மிகப் பெரிய திரை குடும்பத்திலிருந்து ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த வெங்கட் பிரபு இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ளார். சென்னை 600028 என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்த படம் காமெடி மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு மிகவும் அருகிலேயே இருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார். வெங்கட் பிரபு தனது ஸ்டைலில் சென்னை 600028, சரோஜா, கோவா என தொடர் வெற்றி கொடுத்து வந்தார். இந்த நிலையில் பிரியாணி மற்றும் மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை

 வசூலை அள்ளியது

வசூலை அள்ளியது

இந்நிலையில் சிம்பு உடன் கூட்டணி அமைத்த வெங்கட்பிரபு மாநாடு என்ற படத்தை இயக்கினார். டைம் லூப் பாணியில் உருவாகி வந்த இந்தப் படம் நீண்ட காத்திருப்புக்கு பிறகு வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வசூலை அள்ளியது. தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற மாநாடு படத்தை இப்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க படத்தின் படபிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க உள்ளது

 அஜித்தின் 50வது படமாக

அஜித்தின் 50வது படமாக

வெங்கட்பிரபு அஜித்துடன் இணைந்து மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அஜித்தின் 50வது படமாக வெளியான இந்த படம் தமிழ் சினிமாவில் பென்ச் மார்க் ஆக உள்ளது. அஜித் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் கலக்கி இருப்பார். இந்த நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் நான் அஜித் கூட சேர்ந்து படம் பண்றது யாருக்கும் பிடிக்கவில்லை என்ற பகீர் தகவல் அளித்துள்ளார்.

 அஜித் வச்சி படம் பண்றது யாருக்கும் பிடிக்கல

அஜித் வச்சி படம் பண்றது யாருக்கும் பிடிக்கல

அஜீத்தின் 50வது படத்தை நான் இயக்க உள்ள செய்திகள் வெளிவந்த உடனேயே அஜித் ரசிகர்கள் உட்பட பலரும் அஜித் இவருடன் சேர்ந்து படம் பண்றதுக்கு கம்முனு பைக் ரேசிங்கே போகலாம் என அவ்வளவு நெகட்டிவாக பேசினார்கள். அவர்கள் யாருக்கும் நான் அஜித்துடன் சேர்ந்து படம் பண்ணுவது பிடிக்கவில்லை என வெங்கட்பிரபு ஃபீல் செய்து செய்து பேசியுள்ள வீடியோ இப்பொழுது இணையதளத்தில் வைரலாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X