Don't Miss!
- News
செவ்வாய் பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களின் காட்டில் பணமழைதான்!..என்ஜாய்!!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
என் படம் தமிழ்ல ஓடாதுன்னு சொன்னாங்க...நீங்க யாருய்யா தீர்மானிக்க?... கொந்தளித்த சுதா கொங்கரா!
சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா
தமிழில் சூரரைப்போற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்போது அதன் இந்தி ரீமேக்கை அக்ஷய்குமார் நடிப்பில் இயக்கி வருகிறார்
சிம்பு ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்து கொண்டே இருக்கும் சூழலில் என் படம் தமிழில் ஓடாதுன்னு என்கிட்டயே சொல்றாங்க என சுதா கொங்கரா கொந்தளித்து பேசியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது .
பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா கீர்த்தி சுரேஷ்.. புதிய லுக்கால் குழம்பிப் போன ரசிகர்கள்!

பெரிதாக கவனிக்கப்படவில்லை
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கொங்கரா தமிழ் சினிமாவிற்கு துரோகி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். விஷ்ணு விஷால்,ஸ்ரீகாந்த், பூனம் பாஜ்வா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படம் விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக வெளியானது. வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களால் பெரிதாக கவனிக்கப்படவில்லை. அதனால் ரசிகர்கள் மத்தியில் சுதா கொங்கரா அந்த அளவுக்குப் பிரபலமாக அறியப்படவில்லை.

மாதவனை பாக்ஸிங் கோச்சராக
இந்த நிலையில் அதுவரை சாக்லேட் பாயாக வலம் வந்துகொண்டிருந்த மாதவனை முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இறுதிச்சுற்று படத்தில் மாதவனை பாக்ஸிங் கோச்சராக நடிக்க வைத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி தமிழில் வெளியான படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்து பிரமாதப் படுத்தியிருப்பார் . அதுவரை சாக்லேட் பாயாக அமைதியான கதாபாத்திரங்களில் பார்த்த மாதவனை திடீரென முரட்டுத்தனமான பாக்ஸிங் கோச்சராக பார்த்ததால் ரசிகர்கள் வெறித்தனமாக ரசித்தனர் .

பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட்
இறுதிச்சுற்றில் ரித்திகா சிங் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். தமிழ் சினிமாவிற்கு மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தமிழ் மற்றும் ஹிந்தி என இரு மொழியிலும் ஒரே நேரத்தில் வெளியாகி இரண்டு மொழிகளிலும் வெற்றி கண்டது. பின் தெலுங்கிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. இறுதிச்சுற்று படத்தின் வெற்றிக்குப் பிறகு சுதா கொங்கரா ரசிகர்களால் கவனிக்கப்பட்டார் சூரரைப்போற்று வெற்றிக்கு பிறகு ஃபேவரட் இயக்குனராகவும் உள்ளார்.

தமிழ்ல படம் ஓடாதுன்னு சொன்னாங்க
இந்த நிலையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய சுதா கொங்கரா இறுதிச்சுற்று படம் தமிழில் ஓடாது ... கமர்சியல் கண்டெண்ட் எதுவுமே இல்லை இந்த படத்துல .. இது இந்தியில ஓடும் இந்தி கண்டெண்ட்ன்னு.. நீங்க யாரு இத டிசைன் பண்றதுக்கு.. இது தமிழ் கண்டெண்ட், இது இந்தி கண்டெண்ட், எது மலையாள கண்டெண்ட், இது தெலுங்கு கண்டெண்ட்ன்னு.. அப்புறம் இது A சென்டர் படம்.. B, C வாய்ப்பே இல்ல படம் ஓடாதுன்னு சொன்னாங்க என சுதா கொங்கரா பத்திரிக்கையாளர் சந்திப்பில் இறுதிச்சுற்று படத்திற்கு வந்த விமர்சனங்கள் குறித்து கொந்தளித்து பேசியுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.