டுவிட்டரில் சினிமா பிரபலங்கள்… ஏ.ஆர்.ரஹ்மான் டாப்…

By Mayura Akilan

முன்பெல்லாம் சினிமா பிரபலங்களை அவர்களின் ரசிகர்கள் சந்திப்பது ஏதோ கடவுளைப் பார்ப்பது போல இருக்கும். இன்றைக்கு சினிமா பிரபலங்கள் பலரும் டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் எளிதாக சந்திக்க முடிகிறது.

தங்களைப் பற்றி தகவல்களை எளிதாக ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர் சினிமா பிரபலங்கள். ஏ.ஆர்.ரஹ்மான் முதல் டாப்ஸி, ஹன்சிகா, தனுஷ், ஜீவா என பல திரை உலக பிரபலங்கள் டுவிட்டரில் அக்கவுண்ட் வைத்துள்ளனர்.

இந்த திரை உலக பிரபலங்களில் ஏ.ஆர்.ரஹ்மான்தான் டாப் லிஸ்ட்டில் இருப்பதாக சொல்கிறது புள்ளிவிபரம். எந்த பிரபலத்தை எத்தனை லட்சம் ரசிகர்கள் பின்பற்றுகின்றனர் தெரிந்து கொள்ளுங்களேன்.

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை டுவிட்டரில் 23 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர். இவர்தான் டாப் 1ல் இருக்கிறார்.

ஜெனிலியா

ஜெனிலியா

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என கலந்து கட்டி அடிக்கும் ஜெனிலியாவிற்கு 14 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

சித்தார்த்

சித்தார்த்

நடிகர் சித்தார்த்தின் டுவிட்டரை 7.5 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர். சினிமா மட்டுமல்லாது அரசியல் பற்றியும் இவர் பகிர்ந்து கொள்கிறார்.

மாதவன்

மாதவன்

சாக்லேட் பாய் மாதவனின் டுவிட்டரை 6 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர்.

திரிஷாவின் ரசிகர்கள்

திரிஷாவின் ரசிகர்கள்

திரிஷாவை டுவிட்டரில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 5.40 லட்சம் பேராக உள்ளனர். இவர் தன்னுடைய படங்களை பற்றி மட்டுமல்லாது விலங்குகளைப் பற்றியும் கருணையோடு பகிர்ந்து கொள்கிறார்.

ஸ்ருதி ஹாசன் & சமீரா ரெட்டி

ஸ்ருதி ஹாசன் & சமீரா ரெட்டி

ஸ்ருதிக்கு டுவிட்டரில் 5.1 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். சினிமா பற்றி மட்டுமல்லாது, இசை, ஃபேஷன் என பல தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறார். பாலிவுட் நடிகை சமீரா ரெட்டிக்கு 4.4 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.

தனுஷ் & ஜீவா

தனுஷ் & ஜீவா

தனுஷ்சிற்கு டுவிட்டரில் 3.6 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். இவர் தன்னுடைய படங்களைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். நடிகர் ஜீவாவிற்கு 1.99 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.

ஷ்ரேயா சரண் & ஹன்சிகா

ஷ்ரேயா சரண் & ஹன்சிகா

நடிகை ஹன்சிகாவை 2.47 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர். அதேபோல நடிகை ஷ்ரேயா சரணுக்கு 1 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

டாப்ஸி & ரிச்சா கங்கோபாத்யா

டாப்ஸி & ரிச்சா கங்கோபாத்யா

நடிகை டாப்ஸிக்கு டுவிட்டரில் 2.3 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். அதேபோல் நடிகை ரிச்சா கங்கோபாத்யாவிற்கு 2.1 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X