அன்னை தெரசா படத்தில் கமல் அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. ரூ. 2,700 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப் படத்தை ஹாலிவுட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன், கமல்ஹாசன், மோகன்லால், மிதுன்சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். செக்கோஸ்லோவேகிாயவைச் சேர்ந்தவர் அன்னை தெரசா. அங்கிருந்து இந்தியாவுக்கு வந்து, கொல்கத்தாவில் தங்கி தனது இறுதி நாள் வரை ஏழை, எளிய மக்களுக்காக சேவை செய்து வந்தார். அமைதிக்கான நோபல் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னாவும் அளிக்கப்பட்டது. அந்தப் புனித அன்னையின் வாழ்க்கை வரலாறு இப்போது திரைப்படமாகிறது. மலையாள இயக்குனர் ராஜீவ் நாத் இப்படத்தை இயக்கவுள்ளார். அமெரிக்காவில் உள்ள திரைப்பட நிறுவனம் ஒன்று இப் படத்தை தயாரிக்கிறது. இதற்கான பட்ஜெட் ரூ. 2,700 கோடியாம். ராஜீவ் நாத் மலையாளத்தில் விருது பெற்ற படங்கள் பலவற்றை தயாரித்தவர். மோட்சம், ஜனனி ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. அன்னை தெரசா படம் குறித்து ராஜீவ்நாத் கூறுகையில், தெரசா வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்று தீவிரமாக ஆலோசனை செய்தோம். இறுதியில் ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டனை முடிவு செய்துள்ளோம். அவரிடம் இதுகுறித்துப் பேசி வருகிறோம். அவர் ஒப்புக் கொள்வார் என நம்புகிறேன். பாரிஸ் ஹில்டன் தவிர கமல்ஹாசன், மோகன்லால், மிதுன்சக்ரவர்த்தி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். சிதார் மேதை ரவிசங்கர் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஹாலிவுட்டைச் சேர்ந்த ஜான் பால் என்பவர் கதை, வசனத்தை கவனிக்கவுள்ளார். சந்தோஷ் சிவன் கேமராவைக் கையாளுவார். போப் ஆண்டவரின் ஆசியுடன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம் என்றார் ராஜீவ் நாத்.
அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. ரூ. 2,700 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப் படத்தை ஹாலிவுட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன், கமல்ஹாசன், மோகன்லால், மிதுன்சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
செக்கோஸ்லோவேகிாயவைச் சேர்ந்தவர் அன்னை தெரசா. அங்கிருந்து இந்தியாவுக்கு வந்து, கொல்கத்தாவில் தங்கி தனது இறுதி நாள் வரை ஏழை, எளிய மக்களுக்காக சேவை செய்து வந்தார். அமைதிக்கான நோபல் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னாவும் அளிக்கப்பட்டது.
அந்தப் புனித அன்னையின் வாழ்க்கை வரலாறு இப்போது திரைப்படமாகிறது. மலையாள இயக்குனர் ராஜீவ் நாத் இப்படத்தை இயக்கவுள்ளார். அமெரிக்காவில் உள்ள திரைப்பட நிறுவனம் ஒன்று இப் படத்தை தயாரிக்கிறது.
இதற்கான பட்ஜெட் ரூ. 2,700 கோடியாம். ராஜீவ் நாத் மலையாளத்தில் விருது பெற்ற படங்கள் பலவற்றை தயாரித்தவர். மோட்சம், ஜனனி ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை.
அன்னை தெரசா படம் குறித்து ராஜீவ்நாத் கூறுகையில், தெரசா வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்று தீவிரமாக ஆலோசனை செய்தோம். இறுதியில் ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டனை முடிவு செய்துள்ளோம்.
அவரிடம் இதுகுறித்துப் பேசி வருகிறோம். அவர் ஒப்புக் கொள்வார் என நம்புகிறேன்.
பாரிஸ் ஹில்டன் தவிர கமல்ஹாசன், மோகன்லால், மிதுன்சக்ரவர்த்தி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
சிதார் மேதை ரவிசங்கர் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஹாலிவுட்டைச் சேர்ந்த ஜான் பால் என்பவர் கதை, வசனத்தை கவனிக்கவுள்ளார். சந்தோஷ் சிவன் கேமராவைக் கையாளுவார். போப் ஆண்டவரின் ஆசியுடன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம் என்றார் ராஜீவ் நாத்.


Click it and Unblock the Notifications