ஆடி வருது .. ஓடும் படங்கள்!

By Staff

ஆடி மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்தால் உருப்படாது என்ற மூட நம்பிக்கை காரணமாக பல படங்கள் ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளிப் போயுள்ளதாம்.

சினிமாவுக்கும், மூட நம்பிக்கைக்கும் ரொம்ப பொருத்தம். எதைச் செய்தாலும் அது சரியாக வருமா, நேரம் நல்லாருக்கா என்றெல்லாம் சகுனம் பார்ப்பவர்கள் சினிமாவில் அதிகம்.

இந்த சகுனம் காரணமாக பிறக்கப் போகும் ஆடி மாதத்தில் வெளியாக வேண்டிய பல படங்கள் தள்ளிப் போடப்பட்டு ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளிப் போயுள்ளதாம்.

அஜீத்தின் கிரீடம், தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம், உற்சாகம், ஆர்யா, ஓரம்போ, வீராப்பு, சொல்லி அடிப்பேன், அம்முவாகிய நான் ஆகிய படங்கள் இந்த மாதத்தில் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் படங்கள் அனைத்தும் தள்ளிப் போய் விட்டன. என்ன காரணம் என்று விசாரித்தால், ஆடி மாதம் குறுக்கிடுவதே அதற்குக் காரணம் என்று தள்ளிப்போட்ட தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.

ஆடி மாதம் குறுக்கிடுவதால் எந்தப் படமும் ஆடி மாதம் முடியும் வரை ரிலீஸாகாது என்று தெரிகிறது. இதனால் தொடர்ந்து சிவாஜியே கோலோச்சும் நிலை உருவாகியுள்ளது.

இருப்பினும் கிரீடம் மட்டும் ஆடியைப் பொருட்படுத்தாமல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆடியை விட அஜீத் மற்றும் கதையை தயாரிப்பாளர் தரப்பு அதிகம் நம்புவதால் கிரீடம் வெளியாவது உறுதியாகியுள்ளது.

ஆடி முடிந்த பின்னர்தான் அதாவது ஆகஸ்ட் 20ம் தேதிக்குப் பிறகுதான் புதுப் படங்கள் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது.

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் ........

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X