2013ல் பாக்ஸ் ஆபீஸில் கில்லியாய் சொல்லி அடித்த படங்கள்

By Siva

சென்னை: 2013ம் ஆண்டில் பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடி வசூல் செய்த படங்களை பற்றி பார்ப்போம்.

2013ம் ஆண்டில் பல படங்கள் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. அதிலும் குறிப்பாக சொல்லப் போனால் ஒரு சில படங்கள் ரிலீஸான வேகத்தில் ரூ.100 கோடியை வசூலித்துவிட்டன.

அப்படி ரூ.100 கோடி வசூல் செய்த 20 படங்களை பார்ப்போம்.

ரேஸ் 2

ரேஸ் 2

சைப் அலி கான், தீபிகா படுகோனே நடித்த ரேஸ் 2 ரிலீஸான 14 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்தது. இந்த ஆண்டில் முதன்முதலாக ரூ.100 கோடி வசூல் செய்த படம் என்ற பெருமையை ரேஸ் 2 பெற்றது.

பாக் மில்கா பாக்

பாக் மில்கா பாக்

பிரபல ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் பாக் மில்கா பாக். ஃபர்ஹான் அக்தர், சோனம் கபூர் நடித்த இந்த படம் ரூ.103 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

ராஞ்ஹனா

ராஞ்ஹனா

தனுஷ் பாலிவுட்டில் ராஞ்ஹனா படம் மூலம் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்தார். தனுஷின் முதல் இந்தி படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது இந்தி ரசிகர்கள் மனதில் அவருக்கு ஒரு இடம் கிடைக்க வைத்தது.

யே ஜவானி ஹை தீவானி

யே ஜவானி ஹை தீவானி

முன்னாள் காதலர்களான ரன்பிர் கபூரும், தீபிகா படுகோனேவும் ஜோடி சேர்ந்த யே ஜவானி ஹை தீவானி படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளியது. படத்தின் வசூல் ரூ.189 கோடி ஆகும்.

சென்னை எக்ஸ்பிரஸ்

சென்னை எக்ஸ்பிரஸ்

ஷாருக்கான், தீபிகா, சத்யராஜ் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை விமர்சகர்கள் கிழி கிழி என்று கிழித்தனர். ஆனால் ரசிகர்களோ எந்த விமர்சனத்தையும் காதில் வாங்காமல் படம் பார்த்து ரூ.200 கோடி வசூல் அளித்தனர்.

க்ரிஷ் 3

க்ரிஷ் 3

ரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான க்ரிஷ் 3 படம் இந்தியா தவிர வெளிநாடுகளிலும் பாக்ஸ் ஆபீஸில் கில்லியாக வசூல் செய்தது. படம் ரிலீஸான வேகத்தில் ரூ.200 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.

ராம் லீலா

ராம் லீலா

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்படும் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடித்த ராம் லீலா படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

கிராண்ட் மஸ்தி

கிராண்ட் மஸ்தி

விவேக் ஓபராய், ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் வெளியான கிராண்ட் மஸ்தி படத்தில் வந்த காமெடி காட்சிகளை பார்த்து தியேட்டரில் விழுந்து விழுந்து சிரித்தே ஒரு வாலிபர் பலியானார். இப்படி மக்களின் வயிறு வலிக்க சிரிக்க வைத்த இந்த படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

ஆஷிகி 2

ஆஷிகி 2

ஆதித்யா ராய் கபூர், ஷ்ரத்தா கபூர் நடித்த ஆஷிகி 2 படம் காதலும், காமெடியும் கலந்தது. இந்த படம் ரூ.100 கோடி வசூல் செய்ததால் ஆதித்யா மற்றும் ஷ்ரத்தாவின் மார்க்கெட் எகிறிவிட்டது.

விஸ்வரூபம்

விஸ்வரூபம்

பெரும் சர்ச்சைகளுக்கு பிறகு ரிலீஸான கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் ரூ.100 கோடி வசூல் செய்தது.

ஆரம்பம்

ஆரம்பம்

அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படம் இந்தியா தவிர வெளிநாடுகளிலும் நல்ல வசூலை அள்ளியது. படம் ரூ.100 கோடி வசூல் செய்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X