Don't Miss!
- Lifestyle
Shukra Gochar 2022: கும்பம் செல்லும் சுக்கிரனால் பிப்ரவரி 15 வரை இந்த ராசிகளுக்கு சூப்பரா இருக்கப் போகுது...
- News
புது வீடு கட்டி வீடியோ போட்ட யூடியூப் பிரபலம்..பார்த்துவிட்டு கொள்ளையடிக்க வந்த நபர்-கோவையில் திடுக்
- Finance
10 மாதம் தான் ஆச்சு.. அதற்குள்ள வேலை போச்சு.. என்ன செய்யுறது.. 60 நாட்களுக்குள் வேலை கிடைக்குமா?
- Sports
விராட் கோலிக்கு மீண்டும் ஒரு வீக்னஸ்.. தொடர்ச்சியாக ஒரே முறையில் அவுட்.. வசீம் ஜாஃபர் எச்சரிக்கை!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
மனைவி மேல் இருந்த கோபத்தை ஸ்பைடர்மேன் படத்தில் காட்டிய எம்.எஸ்.பாஸ்கர்
சென்னை: தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர்களில் மிக முக்கியமானவர் எம்.எஸ்.பாஸ்கர் அவர்கள்.
சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தாலும் அவர் பல ஆண்டு காலமாக சினிமா துறையில் இருப்பது பலருக்கும் தெரியாது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் கொடுத்துள்ள பேட்டியில் வீட்டில் தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக டப்பிங்கில் அதை வெளிப்படுத்தியது பற்றி சுவாரசியமாக கூறியிருக்கிறார்.
ரொம்ப
மனிதநேயம்
மிக்கவர்
அஜித்..
8
மணிநேரம்
நின்னுட்டே
பேசினார்..
பூரிப்பில்
எம்.
எஸ்.
பாஸ்கர்!

சினிமா குடும்பம்
விசு இயக்கிய திருமதி ஒரு வெகுமதி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த எம்.எஸ்.பாஸ்கர் பல படங்களில் டப்பிங் பேசியுள்ளார். நடிகர் அஜித் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த விளம்பர படம் ஒன்றில் கூட அவருக்காக டப்பிங் பேசியிருப்பார். எம் எஸ் பாஸ்கரின் சகோதரியும், மகளும் கூட டப்பிங் பேசுபவர்கள்தான். நடிகர் விஜயகாந்தின் எங்கள் அண்ணா படம் மூலம் சற்று பெரிய கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கியவர் தசாவதாரம், மொழி, உத்தம வில்லன் போன்ற படங்களில் சிறந்த குணச்சித்திர வேடங்களில் நடித்து பின்னர் 8 தோட்டாக்கள் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சின்ன பாப்பா பெரிய பாப்பா
அடிப்படையில் இவர் ஒரு டப்பிங் கலைஞர் என்பதால் எந்தக் கதாபாத்திரத்திலும் எளிதாக நடிக்கக் கூடியவர். சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் நகைச்சுவையில் பிரமாதமாக நடித்து, பின் ராதிகா நடித்த அரசி தொடரில் பயங்கர வில்லனாக நடித்திருப்பார். அதேபோல வட்டார வழக்குகள் பேசுவதிலும் கில்லாடி. பாபநாசம் திரைப்படத்தில் அந்த ஊர் வட்டார வழக்கை அற்புதமாக பேசி அசத்தியிருப்பார்.

ஸ்பைடர் மேன்
ஹாலிவுட் திரைப்படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்படும் பொழுது தமிழுக்கு ஏற்றார் போல வசனங்களை மாற்றி நகைச்சுவையாக எழுதுவார்கள். அந்த வகையில் ஸ்பைடர் மேன் படங்களில் வரும் ஸ்பைடர்மேனின் முதலாளி கதாபாத்திரத்திற்கு எம்.எஸ்.பாஸ்கர்தான் பேசியிருப்பார். ஸ்பைடர்மேனை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கும் அந்தக் கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர்கள் உண்டு. ஒருமுறை அதற்கு டப்பிங் பேசுவதற்கு முன்னால் வீட்டில் தனது மனைவியுடன் ஏதோ சண்டை போட்டுள்ளார். அதே கோபத்துடன் டப்பிங்கும் பேசச் சென்றிருக்கிறார்.

மொசைக் கல்
ஒரு காட்சியில் அந்த முதலாளி கதாபாத்திரத்திற்கு வரும் ஃபோன் காலை அவரது அசிஸ்டன்ட் எடுத்து பேசிவிட்டு முதலாளியிடம்,"சார் உங்க வீட்ல போட்டிருக்க புது மொசைக் கல் நல்லா இல்லன்னு உங்க வைஃப் சொல்றாங்க" என்று அந்த நபர் கூற, முதலாளி கதாபாத்திரம் இதெல்லாம் ஒரு விசயமா என்பதுபோல் ரியாட் செய்வாராம். அந்த இடத்தில்,"நல்லா இல்லன்னா அவ மூஞ்ச வச்சு தேய்க்க சொல்லு" என்ற வசனத்தை இவராகவே பேசினாராம். உடனே டப்பிங் வசனங்களை எழுதிய நபர்," என்ன பாஸ்கர் வீட்ல சண்டை போட்டு வந்தியா" என்று நகைச்சுவையாக கேட்டதாக எம.எஸ்.பாஸ்கர் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.