twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தம்பி AR ரகுமான் என் பாட்ட வச்சிக்க மாட்டாருன்னு நெனச்சேன்... MSV-ஐ ஆச்சர்யப் பட வைத்த ARR

    |

    சென்னை: இசையமைப்பாளர்களில் முன்னோடியாக திகழ்ந்தவர் மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன் அவர்கள். 1950-களில் தொடங்கி 80-கள் வரை பிசியாக இருந்தவர்.

    MGR, சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று அப்போதைய முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து வந்தார். கவிஞர் கண்ணதாசனுடன் சேர்ந்து பல வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளார்.

    ஆரம்ப காலத்தில் இசையமைப்பாளர் இராமமூர்த்தி அவர்களுடன் சேர்ந்து திரைப்பயணத்தை தொடங்கியவர், பின்னர் தனித்து இசையமைத்து வெற்றிக் கொடி நாட்டினார்.

     அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிடும் விக்னேஷ் சிவன்.. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிடும் விக்னேஷ் சிவன்.. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?

    MS விஸ்வநாதன் - இளையராஜா

    MS விஸ்வநாதன் - இளையராஜா

    இளையராஜா அவர்களின் வருகைக்கு பின்னர், MS விஸ்வநாதன் அவர்களுக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இளையராஜா உச்சத்தில் இருந்தபோது, MS விஸ்வநாதனுடன் சேர்ந்து பணியாற்றினார். மெல்ல திறந்தது கதவு, இரும்பு பூக்கள், செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ்ச் செல்வன், விஷ்வ துளசி ஆகிய ஐந்து படங்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்து இசையமைத்துள்ளனர். தில்லு முல்லு படத்தின் ரீமேக்கில் யுவன் சங்கர் ராஜாவுடனும் பணிபுரிந்துள்ளார்.

    சங்கமத்தில் ARR-உடன் சங்கமம்

    சங்கமத்தில் ARR-உடன் சங்கமம்

    ராமமூர்த்தி, இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து இசையமைத்துள்ள MSV அவர்கள், இசையமைப்பாளர் AR ரகுமானின் இசையில் பாடியுள்ளார். MSV பாடல்களுக்கு கீபோர்ட் பிளேயராக பணியாற்றியுள்ள ரகுமான், மழைத்துளி பாடலை கம்போஸ் செய்ததும் MSV-ஐ பாட அழைத்துள்ளார். பாடலை சொல்லித் தரும்படி MSV கேட்க, உங்களுக்கு எப்படிண்ணே நா சொல்லித் தர்றது என்று ARR கூறியுள்ளார். பின்னர் MSV-யின் வேண்டுகோளுக்கு இணங்க, ரகுமான் பல விதமாக பாடச் சொல்லி ரெக்கார்ட் செய்துள்ளார்.

    ஆலாலகண்டா ஆடலுக்கு தகப்பா...

    ஆலாலகண்டா ஆடலுக்கு தகப்பா...

    பாடி முடித்ததும் போட்டுக் காண்பிக்க சொல்லியிருக்கிறார் MSV. அதற்கு இன்னும் எடிட்டிங் பணிகள் இருக்குண்ணே என்று சொல்லி நல்ல சம்பளத்தையும் கொடுத்து அனுப்பியுள்ளாராம் ரகுமான். MSV அவர்களுக்கோ, தான் பாடியது ரகுமானுக்கு பிடிக்கவில்லை போலும். அதனால்தான் போட்டுக் காட்டாமல், அதிக பணமும் கொடுத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டாராம். அதன் பின்னர் ஒரு நாள் ரேடியோவில் அந்தப் பாட்டைக் கேட்டதும், தான் பாடிய பாடலா என்று ஆச்சர்யப்பட்டாராம்.

    பாடகர் MSV

    பாடகர் MSV

    சங்கமம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அந்த "மழைத்துளி மழைத்துளி" பாடல் அப்போது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆண்டு விழாக்களில் மாணவர்களால் அதிகம் ஆடப்பட்ட பாடல் என்கிற பெருமையை பெற்றது. MSV அவர்கள், நடிகர் ரஜினிகாந்திற்கு மூன்று முடிச்சு திரைப்படத்தில் "வசந்த கால நதியினிலே" பாடலில் வில்லத்தனமாக பின்னணி பாடியிருப்பார் என்பது கூடுதல் தகவல்.

    English summary
    MSV didn’t believe that ARR have kept my song in Sangamam Movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X