»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

பினாமியை வைத்து மும்தாஜே தயாரித்து வரும் தத்தித் தாவுது மனசு படத்தில் அவரது கேரக்டரின் பெயர் ஜர்தா பீடா ஜமுனா!

வாயில் எப்போதும் பீடா போட்டவண்ணம் படு செக்சியாக நடித்து வருகிறாராம் மும்தாஜ். அப்புறம் போட்ட காச எடுக்கணுமே.

இந்தப் படத்தில் தேவா போட்ட ஒரு மெட்டு எல்லோரையும் எழுந்து நின்ற ஆட வைக்குமாம். இந்தப் பாட்டுக்கு மும்தாஜ் போட்டுள்ளஆட்டம் தான் படத்தின் ஹை-லைட்டாம்.

விஜய்யின் 6-வது விரல்!

கீதை படத்தில் விஜய் 6 விரல்களோடு நடிக்கிறாராம்.

வசீகரா படம் முடிந்து ரிலீஸும் ஆகி விட்டது. அடுத்த படமான கீதையின் படப்பிடிப்பில் விஜய் சுறுசுறுப்பாகபங்கெடுத்து வருகிறார்.

இந்தப் படம் மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்டது என்கிறார்கள்.

விஜய்க்கு இதில் 6 விரல்களாம். இந்த ஆறாவது விரல்தான் படத்தில் திருப்புமுனையை உருவாக்குமாம்.

இதற்காக செயற்கையாக பொருத்தப்பட்ட 6-வது விரலோடு நடித்து வருகிறாம் விஜய்.

செளந்தர்யாவுக்கு கல்யாண ஆசை வந்துவிட்டதாம். விரைவில் டும் டும் கொட்டப் போகிறாராம்.

இதனால் புதிய படங்களில் நடிக்கக்கிடைக்கும் வாய்ப்புகளை தவிர்த்து வருகிறார்.

கிரணுடன் இப்போதெல்லாம் யாரோ ஒரு இளைஞர் துணைக்கு வருகிறார். அவரது உறவுக்காரராம்.

உடன் நடிக்கும் ஹீரோக்கள் அவரைஎரிச்சலுடன் பார்க்கின்றனர்.

மோணலின் மறைவையடுத்து எல்லோரிடமும் சண்டை போட்டுக் கொண்டு இருந்த வீட்டையும் விற்று விட்டு ஓடிய சிம்ரன் இப்போதுமீண்டும் சென்னையில் வீடு பார்த்துக் கொண்டிருக்கிறார். சில கோடிகள் ஆனாலும் பரவாயில்லையாம், பெரிய பங்களாவாகப் பார்த்துவருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil