»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரும் டென்ஷனில் இருக்கிறார் மும்தாஜ். ஒரு பக்கம் சந்தோஷம், மறுபக்கம் முதல் முதலாக தயாரிக்கும் தத்தித்தாவுது மனசு படம்வெற்றியைப் பெற வேண்டுமே என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்து அவரை நகம் கடிக்க வைத்துள்ளது.

தத்தித் தாவுது மனசை பெரும் வெற்றியாக்குவதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்.

கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்கக்கூடாது என்பதற்காக தான் மட்டும் அல்லாது மேலும் 3 இளம் குட்டிகளை மும்பையில் இருந்து இழுத்து வந்துநடிக்க வைத்து வருகிறார்.

அத்தோடு லேட்டஸ்ட் கோலிவுட் கிரேஸான அபிநயஸ்ரீயையும் இந்தப் படத்தில் இழுத்துப் போட்டு விளையாட வைத்துள்ளார்.

சென்சார்காரர்கள் கடைசி நேரத்தில் கத்திரி போட்டு விடாமல் இருக்க வேண்டுமே என்று சாமியையும் வேண்டிக் கொள்கிறாராம். தத்தித்தாவுது மனசு ரிலீஸ் ஆன பின்னரே புதுப்படங்களில் நடிக்க முடிவு செய்து இப்போதைக்கு வேறு எந்தப் படத்திலும் கமிட் ஆகாமல்இருக்கிறார் மும்தாஜ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil