»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சொந்தக் காசைப் போட்டு மும்தாஜ் எடுத்து முடித்த தத்தித் தாவுது மனசு படத்தை வாங்க ஆளில்லை, இதனால்படம் முடிக்கப்பட்டு பல மாதம் ஆகியும் பெட்டியில் படுத்து குறட்டை விட்டுக் கொண்டுள்ளது.

இந் நிலையில், நான் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி டான்ஸ் எல்லாம் ஆட மாட்டேன். ஒன்லி ஹீரோயின் ரோல் அல்லதுமுக்கியமான கேரக்டர் ரோல் தான் செய்வேன் என்று கூறி ஆட்டம் போட வந்த வாய்ப்புக்களை எல்லாம் உதறியமும்தாஜ் இப்போது தனது விதிகளைத் தளர்த்த ஆரம்பித்துள்ளார்.

எப்படிப்பட்ட ஆட்டமும் போடத் தயார் என்று இப்போது தனது பி.ஆர்.ஓ. மூலம் தயாரிப்பாளர்கள் மற்றும்இயக்குனர்களுக்கு ஓலை அனுப்ப ஆரம்பித்துள்ளார். அத்தோடு தானே சில இயக்குனர்களைத் தொடர்பு கொண்டுசிங்கிள் டான்சுக்கு சான்ஸ் கேட்டு வருகிறார்.

இதுவரை மும்தாஜின் முயற்சிகள் பலனளித்ததாகத் தெரியவில்லை.

மீண்டும் ஹீரோயினாகும் அபிதா

சேதுவில் அறிமுகமாகி பரபரப்பாக பேசப்பட்டு கடைசியில் அட்ரஸ் இல்லாமல் போய் விட்ட அபிதாவுக்குலிவிங்ஸ்டன் ஆதரவு கொடுத்துள்ளார்.

தான் ஹீரோவாக நடிக்கும் புடிடா புடிடா படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு அபிதாவை ரெகமன்ட் செய்துள்ளார்.தயாரிப்பாளரும் அதற்கு ஓ.கே. சொல்லி விட்டாராம். படத்தில் படு கிளாமர் காட்சிகள் உண்டாம்.

சேதுவுக்குப் பிறகு அபிதாவுக்குக் கிடைத்துள்ள முதல் ஹீரோயின் வாய்ப்பு இது.

Please Wait while comments are loading...