»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் கன்னடப் பக்கம் போய் கவர்ச்சி தரிசனம் அளித்து வருகிறார்.

கதாநாயகியாக அறிமுகமான மும்தாஜ் பெரிய ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், அவரது கிக் பார்வையும்,சிக் உடைகளும், நச் தாராளமும் அவரை கவர்ச்சி டொர்னேடோ ஆக்கிவிட்டன. மும்தாஜின் உடல் பருமனும், மதுரை கந்து வட்டிபோல எகிறிக் கொண்டு போகவே வாய்ப்புகள் மளமளவென குறைந்து போயின.

தன்னை நிலை நிறுத்த தனது மேனேஜரை பினாமியாகப் போட்டு மூன்று குட்டிகளையும் இழுத்துப் போட்டு தத்தி தாவுது மனசுஎன்ற படம் எடுத்தார். போலீஸ் வேடத்தில் மும்தாஜே கதாநாயகியாக நடித்த அந்தப் படத்தை ரிலீஸ் செய்து விட்டு வீடு திரும்பிவரும் முன்பாகவே படப் பெட்டிகளும் திரும்பி வந்து விட்டன.

அதில் ஏகத்துக்கும் நஷ்டம். இதையடுத்துசினிமா கலைஞர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளுக்கு போய் நடனம் ஆடி பொழுதுபோக்கிக் கொண்டிருந்தவர்க்கு, தனது மார்க்கெட் சரிந்ததற்கு உடல் பருமன்தான் காரணம் என்று லேட்டாக ஞானோதயம்பிறந்தது.

கடும் முயற்சி செய்து உடம்பை ஸ்லிம் ஆக்கிக் கொண்டு, கோடம்பாக்கம் ஸ்டுடியோக்கள் பக்கம் வலிய வந்து சான்ஸ் கேட்டுப்பார்த்தார். என்ன பிரயோஜனம்? இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு பாடல் கதாநாயகியர்களாக அபிநயாஸ்ரீ, ஜூனியர் சில்க்,தேஜாஸ்ரீ புகுந்து வாய்ப்புகளைப் பிடித்து விட நொந்து போனார் மும்தாஜ்.

விவேக்குடன் செல்லமே படத்தில் ஜோடியாக நடிக்க மட்டும் ஒரு ரோல் கிடைத்தது. இதனால் வேறு வழியின்றி,கோடம்பாக்கத்தால் கைவிடப்பட்டவர்களின் கடைசிப் புகலிடமான கர்நாடக சினிமாவுலகத்துக்கு சென்று வாய்ப்புத் தேடினார்.அங்கு, காண்டீ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் படத்தில் கதாநாயகன் முரளி (இது வேறமுரளி), நாயகி குத்து புகழ் திவ்யாஸ் பந்தனனாஸ் என்ற ரம்யா.

கன்னடத்தில் சம்பளம் வெகு குறைச்சல் என்பதால், அதை சாப்பிட்டே ஈடுகட்ட முடிவெடுத்திருக்கிறார் மும்தாஜ். சாப்பாட்டுக்குஒரு நட்சத்திர ஹோட்டலில் இருந்து இரண்டு தந்தூரி சிக்கன் (முழு கோழி) வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம்.தயாரிப்பாளரும் விதியே என்று வாங்கிக் கொடுக்கிறாராம்.

மறுபடியும் திருவாரூர் தேர் மாதிரி உடம்பு ஆகிடாம பார்த்துக்கோங்க மும்தாஜ்

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil