முனியாண்டி - விலங்கியல் மூன்றாமாண்டு

By Staff
Click here for more images
தமிழ்ப் படவுலகினர் டைட்டில் பிடிப்பதில் வர வர எங்கேயோ போய்க் கொண்டுள்ளனர். 'முனியாண்டி - விலங்கியல் மூன்றாமாண்டு' என்ற பெயரில் புதிதாக ஒரு படம் உருவாகவுள்ளது.

எம் மகன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்த சின்னத்திரை இயக்குநர் திருமுருகன், முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர்.

அந்தப் படத்திற்குப் பின்னர் அடுத்த கதைக்காக அமைதி காத்த திருமுருகன் தற்போது தனது 2வது படத்துக்குத் தயாராகி விட்டார். கிராமத்து வாலிபன், கல்லூரிக்கு படிக்கச் செல்கிறான். அங்கு அவன் சந்திக்கும் பிரச்சினைகளைத்தான் தனது பாணியில் முனியாண்டி - விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் சொல்லவுள்ளாராம் திருமுருகன்.

எம் மகனில் திருமுருகனின் நாயகனாக நடித்த பரத்தான் இந்தப் படத்திலும் நாயகனாக நடிக்கவுள்ளார். கிட்டத்தட்ட எம் மகன் யூனிட் அப்படியே இந்தப் படத்திலும் தொடரவுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த லூயிஸ் பைவ் ஸ்டார் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. திரு பிக்சர்ஸ் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றவுள்ளது.

படத்தின் நாயகி யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லையாம். நல்ல ஹீரோயினாக தேடிக் கொண்டிருக்கிறார்களாம். வித்யாசாகர் இசையமைக்கவுள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் படம் குறித்த முழு விவரங்களையும் சொல்வதாக கூறுகிறார் திருமுருகன்.

அசத்துங்கண்ணே!

Read more about: moonramaandu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X