ஸ்பெஷல்ஸ்
மீனா, முரளி நடிப்பதாக இருந்த நைல் நதியே படம் கைவிடப்பட்டு விட்டது.
அதற்குப் பதில் அதே பெயரில் அப்பாஸ், பிரதியுக்ஷா ஜோடி நடிக்க ஒரு படம் தயாராகிறது.
தயாரிப்பாளர் ஒருவரேதான். ஆனால் ஜோடியை மட்டும் மாற்றி விட்டார்.
முரளியின் சமீபகால படங்கள் சொதப்பலாக இருப்பதாலும், மீனா முதிர்ச்சியாகி விட்டதாலும் ஜோடியை மாற்றி விட்டார்களாம்.
பிரதியுக்ஷா நடித்த முதல் படமான கடல் பூக்களில் முரளிதான் அவருக்கு ஜோடி.
பிரதியுக்ஷா நல்ல நடிகை, அழகான நடிகை, நல்ல தெறமையுள்ள அவரை சரியாகப் பயன்படுத்தப் போவதாக நைல் நதியே தயாரிப்பாளர் ஜி.ஆர். எல்வோரிடமும்சொல்லி வருகிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications