மரண மாஸ் மியூசிக் டைரக்டர் அனிருத்...பிறந்தநாள் ஸ்பெஷல்
சென்னை : தமிழ் சினிமாவின் மரண மாஸ் ஹிட் கொடுக்கும் இசையமைப்பாளர்களில் அனிருத்தும் ஒருவர். அனிருத் ஒரு படத்திற்கு இசை அமைக்கிறார் என்றாலே கண்டிப்பாக ஒரு பாடல் செம ஹிட் என்பதை படம் துவங்கும் முன்பே உறுதி செய்து விடலாம். அந்த அளவிற்கு தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டார் அனிருத்.
இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத், நடிகர் ரவி ராகவேந்தரின் மகனும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் உறவினரும் ஆவார். இதுவரை 2 ஃபிலிம்ஃபேர் விருதுகள், 9 சைமா விருதுகள், 6 எடிசன் விருதுகள், 5 விஜய் விருதுகளை பெற்றுள்ளார் அனிருத். இவர் இன்று தனது 31 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அனிருத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

முதல் பாடலே ஹிட்
இசை பரம்பரையில் வந்த அனிருத், பள்ளி படிக்கும் போதே பியானோ வாசிக்க பயின்றவர். லண்டன் இசை கல்லூரியில் Sound Engineering முடித்த அனிருத், விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஷோவில் டைட்டில் வென்றவர். ஆரம்பத்தில் குறும்படங்களுக்கு இசையமைத்து வந்த அனிருத், 2012 ல் ஐஸ்வர்யா தனுஷ், டைரக்டராக அறிமுகமான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழும், ஆங்கிலமும் கலந்து இவர் இசையமைத்த ஒய் திஸ் கொலவெறி பாடல் செம ஹிட் ஆனது.

பல மொழிகளில் பாப்புலர்
முதல் பாடலே உலகம் முழுவதும் பாப்புலர் ஆனதால், புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆகி விட்டார் அனிருத். இரண்டாவதாக சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்திற்கு அனிருத் இசையமைத்தார். இதைத் தொடர்ந்து இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் இசை அமைக்கும் வாய்ப்பை பெற்றார் அனிருத். மாரி போன்ற படங்களில் சில படங்களில் ஒரு பாடலுக்கு வந்து ஆடவும் செய்துள்ளார் அனிருத்.

9 ஆண்டு கால பயணம்
கடந்த 9 ஆண்டுகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், தனது சொந்த குரலில் 50 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டான், விஜய் நடிக்கும் பீஸ்ட், கமல் நடிக்கும் விக்ரம் மற்றும் இந்தியன் 2, தனுஷ் நடிக்கும் திருச்சிற்றலம்பலம் ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இவர் சமீபத்தில் இசையமைத்து முடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் அனிருத் இசையமைக்கும் 25 வது படமாகும்.
Recommended Video

ஒரு பாட்டாவது வேணும்
சினிமாக்களில் இசை அமைப்பதுடன் தனியாக மியூசிக் வீடியோக்களுக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். தங்கள் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டுமாவது அனிருத் இசையமைக்க வேண்டும் என தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் ஆசைப்படுவதால், சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் அனிருத் இசையமைத்துள்ளார்.

வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
தற்போது ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் வரும் முதல் பாலிவுட் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தாலும், அவருடன் சேர்ந்து அனிருத்தும் இசையமைத்துள்ளார். இந்திய அளவில் ஹிட் பாடல்கள் கொடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் பட்டியலில் அனிருத்தும் இடம்பிடித்துள்ளார். சினிமாவிற்கு வந்து 9 ஆண்டுகளிலேயே பல விருதுகளை பெற்று, டாப் இசையமைப்பாளராக வளர்ந்துள்ள அனிருத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்.

டிரெண்டிங்கில் அனிருத்
அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் HappyBirthdayAnirudh என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம், அனிருத்திற்காக சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











