பாடகி சைந்தவியை மணக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்

இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பின்னணிப் பாடகி சைந்தவியை அடுத்த ஆண்டு இறுதியில் மணக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன்தான் ஜி.வி.பிரகாஷ். ரஹ்மானின் இசையில் ஜென்டில்மேன் படத்தில் சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலே பாடலின் தொடக்க வரிகளைப் பாடியவர் இவர்தான்.
இவரது பள்ளிக்காலத் தோழிதான் சைந்தவி. தற்போது பின்னணிப் பாடகியாக இருக்கிறார். பிரகாஷ் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அந்நியன் படத்தில் அண்டங் காக்கா கொண்டைக்காரி பாடல் இவருக்குப் புகழைத் தேடித் தந்தது.
பிரகாஷும், சைந்தவியும் காதலிக்கிறார்கள் என்ற பேச்சு நீண்டகாலமாகவே கோலிவுட்டில் உலா வந்து கொண்டுள்ளது. இருப்பினும் இருவரும் இதுகுறித்து மீடியாக்களிடம் எதையும் பேசுவதைத் தவிர்த்து வந்தனர். தற்போது இந்தக் காதல் திருமணத்தில் முடியவுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த அண்டு இறுதியில் திருமணம் நடைபெறலாம் என்று கூறுகிறார்கள். இதுகுறித்து பிரகாஷிடம் கேட்டால், நானும், சைந்தவியும் நல்ல நண்பர்கள். அது தற்போதைய நிலைக்கு வந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை என்றார்.
தற்போது கை நிறையப் படங்களை வைத்துள்ளார் பிரகாஷ். சைந்தவியும் பிசியாக பாடி வருகிறார். இருவரும் தங்களை ரிலாக்ஸ் செய்து கொண்ட பின்னர் அடுத்த ஆண்டு இறுதியில் திருமணத்தை வைத்துக்கொள்ள தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











