மக்களின் மனதைத் தொட்ட தனுஷை பாராட்டிய இளையராஜா ... ஏன்,எதற்கு தெரியுமா?

சென்னை: இசைஞானி இளையராஜா அவர்கள் எப்போதும் போல படங்களுக்கு இசையமைப்பது மட்டுமல்லாமல் கச்சேரிகள், திரைத்துறை நண்பர்களை சந்திப்பது என இப்போதும் பிசியாகவே உள்ளார்.

அது மட்டுமின்றி, சமூக வலைதளத்திலும் தனது பதிவுகளை பகிர்ந்த வண்ணம் இருக்கிறார். சமீபத்தில் விக்ரம் வெற்றிக்காக கமல் ஹாசனையும், தெலுங்கு படத்தில் இயக்குநராக அறிமுகமாகும் வெங்கட் பிரபுவையும் வாழ்த்தியுள்ளார்.

மதுரையில் நாளை இசைஞானியின் கச்சேரி நடக்கவிருக்கிறது. அவரை மதுரைக்கு அன்புடன் அழைத்து கச்சேரியிலும் பங்கு கொள்கிறேன் என்று வைகைப் புயல் வடிவேலு ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதற்கு "மதுரையில் சந்திப்போம்" என்று ஆக்டிவாக ரிப்ளை செய்திருந்தார்.

வெங்கட் பிரபு படம்

வெங்கட் பிரபு படம்

தெலுங்கு மொழியில் வெங்கட் பிரபு முதன் முதலாக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். நாக சைத்தன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இந்தப் படத்தில் இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கின்றனர். முதன் முதலாக வெங்கட் பிரபுவுடன் கை கோர்க்கிறார் இசைஞானி. இந்தப் படத்தின் பூஜை கடந்த ஜூன் 23-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது.

ரசிகர்களுடன் உரையாடல்

ரசிகர்களுடன் உரையாடல்

சமூக வலைதளம் மூலம் ரசிகர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு இசைஞானி ஆர்வமாக பதிலளித்துள்ளார். அதில் ஒரு ரசிகர் கண்ணே கலைமானே பாடலைக் கேட்டாலே தனக்கு அழுகை வந்துவிடும் என்று சொல்ல, அந்தப் பாடல் வெறும் இரண்டு நிமிடங்களில் கம்போஸ் செய்தது. இயற்கையாக உருவான அந்தப் பாடல் மக்களின் மனதில் ஊடுருவியதில் எந்த ஆச்சர்யமும் இல்லை என்று பதிலளித்துள்ளார்.

தனுஷுக்கு பாராட்டுக்கள்

தனுஷுக்கு பாராட்டுக்கள்

இதற்கு முன்பு நடந்த ராக் வித் ராஜா இசைக் கச்சேரியில், நிலா அது வானத்து மேலே பாடல் மெட்டுக்கு தாலாட்டு பாடல் எழுதி அதனை அந்த மேடையில் தனுஷ் பாடி இருந்தார். இதை மையப்படுத்தி இன்னொரு ரசிகர் அந்தப் பாடலை சோலோவாக வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைக்க, ஒரு கலைப்படைப்பு உன்னதமாக இருந்தால்தான் மனதில் இடம் பிடிக்கும். உங்களின் மனதில் இடம் பிடித்த தனுஷின் அந்தப் பாடலுக்காக அவருக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் சீரிஸ்

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் சீரிஸ்

சமீபத்தில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் சீரிஸ் தமிழ் பத்திப்பின் புரமோஷனுக்கு இசைஞானி இசையமைத்திருந்தார். இதனை குறிப்பிட்டு, இதை நான் சற்றும் எதிர்ப்பார்க்காத கிராஸ் ஓவர் என்று ஒரு ரசிகர் சொல்ல, ஒவ்வொரு பாடலுமே எதிர்ப்பார்க்காததுதான். அப்படி இல்லை என்றால் அது ஃபன்னாக இருக்காது என்று மகிழ்ச்சியாக தெரிவித்தார். இவ்வாறு ரசிகர்களின் கேள்விகளுக்கு இசைஞானி ஆர்வமாக பதிலளித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X