விஜய்யின் ஃபேவரைட் சாங் இதுதான்.. இசையமைப்பாளர் தமன் சொன்ன தகவல்!
சென்னை : நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஆக்சன் கதை களத்தில் வெளியான பீஸ்ட் கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது
அடுத்ததாக பிரபல தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கத்தில் விஜய் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு விஜய் 66 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இசையமைப்பாளர் தமன் விஜய்யின் ஃபேவரைட் சாங் குறித்து பகிர்ந்துள்ளார்.

பீஸ்ட்
கோலமாவு கோகிலா, டாக்டர் என வித்தியாசமான படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குனராக இருந்த நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் பீஸ்ட். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் நிரம்பி எடுக்கப்பட்ட பீஸ்ட் பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

வம்சி இயக்கத்தில்
தென்னிந்திய அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் மற்ற மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தமிழ், மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகி வரும் நிலையில் அடுத்ததாக பிரபல தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

விஜய் 66
விஜய் 66 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. க்யூட் எக்ஸ்பிரஷன்கள் மூலம் இந்தியாவின் க்ரஷ் என அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ்,சரத்குமார், ஷாம்,யோகிபாபு, பிரபு,ஸ்ரீகாந்த், சங்கீதா கிரிஷ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகி வருகிறது. விஜய் 66 மூலம் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகிறார். இசையமைப்பாளர் எஸ்.தமன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது

விஜய்யின் ஃபேவரைட் சாங் இதுதான்
பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான தமன் இப்பொழுது தென்னிந்தியாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். குறிப்பாக தெலுங்கு படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். தமன் தமிழில் குறைந்த அளவிலேயே படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் விஜய் அடிக்கடி தன்னை சந்திக்கும் போது என்னுடைய பாடல்கள் குறித்து அதிகமாக பேசுவார். என்னுடைய பாடல்களை அவ்வளவு ரசிப்பார்.. விஜய் ஒரு இசைப் பிரியர். என்னுடைய இசையில் விஜய்க்கு மிகவும் பிடித்த பாடல் ரேஸ் குர்ரம் படத்தில் இடம்பெறும் சினிமா சூப்பிஸ்தவாமா. அதுமட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 20,30 பாடல்கள் என்னுடைய இசையில் விஜய்க்கு மிகவும் ஃபேவரைட் பாடல்களாக உள்ளது என எஸ் தமன் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











