தனுஷின் ‘லண்டன்’ பிறந்தநாள் கொண்டாட்டம்....
லண்டன்: தனுஷ் கடந்த மாதம் 28ம் தேதி தனது 30 வது பிறந்தநாளை லண்டனில் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
பொதுவாக நடிகர்கள் மற்றும் தலைவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களைக் காண ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அதனைக் கருத்தில் கொண்டு லண்டனில் தான் மகிழ்ச்சியாக நண்பர்களுடன் கொண்டாடிய பிறந்தநாள் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் தனுஷ்.
பிறந்தநாளிற்கு சில நாட்களுக்கு முன்னதாகத் தான் தனுஷ் பேஸ்புக்கில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமான், க்யுக்.....
சில பல படவேலைகள் பாக்கி இருந்ததால் அனிருத்தால் த்னுஷ் அண்ட் கோவுடன் சேர்ந்து லண்டன் செல்ல இயலவில்லையாம். எனவே, சீக்கிரம் வா என பேஸ் புக்கில் தூது அனுப்பிய தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் சிவா, அவர்கள் விமானத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

சுத்திப் போடுங்க பாஸூ....
தனுஷ் மட்டும் தனியாக லண்டன் வீதிகளில் ஸ்டைலாக நிற்பது போன்ற போட்டோ இது. மன்மதராசாவின் ரசிகர் பட்டாளம் லைக்குகளையும், கமெண்ட்களையும் வாரிக் குவித்துள்ளன இந்த போட்டோவைப் பார்த்து....

புது ஹீரோ உதயமாகிறான்...
அனிருத்தும், தனுஷும் ஸ்டைலாக போஸ் தரும் போட்டோ இது. விரைவில் அனிருத்தும் ஹீரோ அரிதாரம் பூச இருக்கிறார் என்பது பார்த்தாலே தெரிகிறது.

லோக்கல் பாய்ஸ்...
லண்டனில் நடுத் தெருவில் நண்பர்கள் கூட்டத்தோடு தனுஷ். அருகில் சிவகார்த்திக்கேயன், அனிருத் மற்றும் சிவா...

எதிர்நீச்சல் டீம்...
காரில் தனுஷ், சிவகார்த்திக்கேயன் மற்றும் அனிருத்... லண்டன்ல எங்கயோ வெளில போறாங்க போல.

பூமி என்ன சுத்துதே...
தனுஷ், சிவகார்த்திக்கேயன் மற்றும் அனிருத் மூவரின் பிண்ணனியில் நகரும் மேகங்கள். கவிதை போன்ற அழகான போட்டோவிற்கு, தனுஷ் ‘பூமி என்னை சுத்துதே...' என கமெண்ட் போட்டுள்ளார்.

சூப் பாய்ஸ்...
இது மொபைலில் எடுக்கப் பட்ட போட்டோவாம். தனுஷ் தான் எடுக்கிறார்.

குஞ்சிதபாதமும், குருவும்....
சிவகார்த்திக்கேயனும், தனுஷின் ஸ்கூல் பிரண்டான குருவும் நிற்கும் போட்டோ. இதற்கு ‘ எனது பள்ளித் தோழன் குருவுடன், குஞ்சிதபாதம்' என கமெண்ட் போட்டுள்ளார் தனுஷ். (குஞ்சித பாதம் என்பது எதிர்நீச்சலில் சிவகர்த்திக்க்கேயனது கேரக்டர் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது )

வாழ்த்த வந்த வானம்....
சரியாக 12 மணிக்கு நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டுகிறார் தனுஷ். லண்டன் பாலத்தில் வைத்து சிம்பிளாக கொண்டாடுகிறார்கள் இந்த நண்பர்கள். மழையும் கூட்டு சேர்ந்து விட சந்தோஷம் பொங்கி வழிகிறது அங்கு....

ஞாபகம் வருதே....
மொத்தத்தில், இந்த லண்டன் கொண்டாட்டங்கள் தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத 30வது பிறந்தநாள் கொண்டாட்டம் என கருத்துத் தெரிவித்துள்ளார் தனுஷ்.


Click it and Unblock the Notifications











