நான் நீண்ட முடி வளர்த்ததால் சந்தேகப்பட்டார் கார்த்தி.. நடிகர் சூர்யா!

சென்னை: வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இப்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் சூர்யா.

வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்ட படங்களிலும் சூர்யா நடித்து வருகிறார்.

இந்நிலையில் லாக்டவுனில் தான் நீண்ட முடி வளர்த்ததை பார்த்துவிட்டு கார்த்தி சந்தேகப்பட்டது குறித்து தனியார் யூடியூப் நேர்காணலில் சூர்யா சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்

வக்கீல் சந்துருவாக

வக்கீல் சந்துருவாக

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் கமர்சியல் ரீதியாக மட்டுமல்லாமல் விருதுகளையும் குவித்து வருகிறது .. அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் எதிர்த்துப் போராடும் வக்கீல் சந்துருவாக படத்தில் நடித்து கலக்கி இருந்தார் சூர்யா. இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் பல விருதுகளை வாங்கி குவித்தது. மேலும் ஜெய் பீம் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது

கஸ்டடியில் வைத்து துன்புறுத்தி சித்திரவதை

கஸ்டடியில் வைத்து துன்புறுத்தி சித்திரவதை

சூர்யா இதுவரை பல கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும் ஜெய்பீம் படத்தில் வக்கீலாக நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது.மேலும் இந்த படத்தில் லிஜோமொல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் மிகச் சிறப்பாக நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருப்பார்கள். சில காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்கள் மீது காட்டும் வன்முறைகள் குறித்தும் போலீஸ் ஸ்டேஷனில் சந்தேகத்தின் பெயரில் கூட்டிச் சென்று கஸ்டடியில் வைத்து துன்புறுத்தி சித்திரவதை செய்யும் அவலங்கள் குறித்து உண்மைக்கு மிக அருகில் சிரிக்கின்ற வாறு உருவான ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சந்தேகப்பட்டார் கார்த்தி

சந்தேகப்பட்டார் கார்த்தி

இந்த நிலையில் லாக்டவுனில் நடிகர் சூர்யா முடி வளர்த்ததை பார்த்துவிட்டு கார்த்தி நான்தான் பொன்னியின் செல்வன் படத்திற்காக நீண்ட முடி வளர்த்துக் கொண்டு உள்ளேன். நீ எதுக்கு முடி வளர்க்கிற என சூர்யாவை சந்தேகத்துடன் கேட்டுள்ளார். அதற்கு முடி அதிகமாக வைத்து ரொம்ப நாளாச்சு அதனால சும்மா வச்சி பாக்குறேன் என கூறியுள்ளார்.

நீண்ட முடி கெட்டப்

நீண்ட முடி கெட்டப்

அதன் பிறகு சூர்யாவின் இந்த நீண்ட முடி கெட்டப்பை பார்த்து விட்டு இயக்குநர் ஞானவேல் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்திற்கு பக்காவாக உள்ளது என சூர்யாவை ஜெய்பீம் படத்தில் ஒப்பந்தம் செய்ததாக நடிகர் சூர்யா தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் இந்த சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X