எங்க குடும்பம் அதிர்ஷ்டம் படைத்த குடும்பம்... நடிகர் விஜயகுமார் பெருமிதம்!

சென்னை : தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக உள்ள விஜயகுமாரை தொடர்ந்து அவரது மகன் அருண் விஜய் இப்பொழுது ஆக்ஷன் ஹீரோவாக கலக்கிக் கொண்டு உள்ளார்

அருண் விஜய்யின் மகன் அர்ணவ் ஓ மை டாக் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்

ஓ மை டாக் படத்தில் மூன்று தலைமுறை நடிகர்களும் ஒரே படத்தில் நடித்துள்ளதை அடுத்து எங்கள் குடும்பம் அதிர்ஷ்டம் படைத்த குடும்பம் என நடிகர் விஜயகுமார் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பெருமிதமாக பேசியுள்ளார்.

திருப்புமுனை படமாக

திருப்புமுனை படமாக

மூத்த நடிகராக உள்ள நடிகர் விஜயகுமார் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கொண்டுள்ளார். விஜயக்குமாரை தொடர்ந்து அவரது மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவில் இப்பொழுது ஆக்சன் ஹீரோவாக வெற்றி வலம் வந்து கொண்டுள்ளார். ஆரம்பத்தில் அருண் விஜய் நடித்த படங்கள் சரியாக ஓடாததால் நடிப்பில் இருந்து வெளியேற முடிவு செய்திருந்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் குமாரின் மிரட்டலான நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய் மிரட்டலான வில்லனாக நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார்..

அருண் விஜய்யின் மகன் அர்ணவ்

அருண் விஜய்யின் மகன் அர்ணவ்

என்னை அறிந்தால் கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகளும் அருண் விஜய்க்கு கிடைக்க தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். அருண்விஜய் இப்பொழுது தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து மிகச் சிறந்த நடிகராகவும் ஆக்சன் கதா நாயகனாகவும் வலம் வந்து கொண்டிருந்தார். விஜயகுமார்,அருண் விஜய்யை தொடர்ந்து அருண் விஜய்யின் மகன் அர்ணவ்வும் இப்பொழுது குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்

ஓ மை டாக்

ஓ மை டாக்

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியான ஓ மை டாக் படத்தில் அருண் விஜய், விஜயகுமார் மற்றும் அர்ணவ் ஆகிய மூவரும் இணைந்து நடித்து இருந்தார்கள். கண் பார்வையற்ற நாய் மீது வைத்துள்ள பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றது.

எங்க குடும்பம் அதிர்ஷ்டம் படைத்த குடும்பம்

எங்க குடும்பம் அதிர்ஷ்டம் படைத்த குடும்பம்

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த விஜயகுமார் அதில் அருண் விஜய் மிகப் பெரிய ஹீரோவாக வருவார் என்று தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரமாக கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் மேலே வருவார் என எதிர்பார்க்கவில்லை அது எங்களுக்கு லக்கி தான். அதேபோல அருண் விஜய்யின் மகன் அர்ணவ் உடன் இவ்வளவு சீக்கிரம் இணைந்து நடிப்பேன் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. மூவரும் இணைந்து ஒரே படத்தில் படைத்துள்ளது எங்கள் குடும்பத்தின் அதிர்ஷ்டம் நாங்க ஒரு அதிர்ஷ்டம் குடும்பம் என விஜயகுமார் பெருமிதமாக அந்த பேட்டியில் பேசியுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X