என் படங்களில் நடிக்கும் ஹீரோக்களை 100 வருடங்கள் கழித்தும் ஞாபகம் வைத்திருப்பார்கள்... பாலா!
சென்னை : தரமான வித்தியாசமான கதைகளின் மூலம் தமிழ் சினிமாவில் அசத்தி கொண்டுள்ளவர் இயக்குனர் பாலா
ஒவ்வொரு படங்களும் உண்மைக்கு மிக அருகில் இருக்கின்றவாரு பாலா இயக்கி வரும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறுவதோடு விருதுகளையும் குவித்து வருகிறது
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலில் நேர்காணலில் என்னுடைய படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் 100 வருடங்கள் கழித்தும் பேச படுவார்கள் என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

ஹீரோயின்களை பளபளப்பாக காட்டாமல்
தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் பாலாவின் திரைப்படங்கள் என்றாலே தனி ரகமாக இருக்கும். ஹீரோக்கள் ஹீரோயின்களை பளபளப்பாக காட்டாமல் நிஜத்தில் எப்படி இருப்பார்களோ அந்த கதாப்பாத்திரம் போலவே ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்குவது இவரது சிறப்பு. அவ்வாறு பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் கமர்ஷியல் ஃபார்முலாவில் இல்லாமல் தனித்தன்மை வாய்ந்ததாக இன்றுவரை இருந்து வருகிறது.

எண்ணற்ற விருதுகளையும் குவித்தது
சேது மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பாலாவுக்கு அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில் அனைவராலும் கவனிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நந்தா,பிதாமகன், நான் கடவுள்,அவன் இவன், நாச்சியார் என பாலா இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. மேலும் இவரது இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் பாரபட்சம் பார்க்காமல் எண்ணற்ற விருதுகளையும் குவித்தது வருகிறது . தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற இவரது பல படங்கள் இந்திய அளவில் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது

நடிகர்களை முழுமையாக அர்ப்பணிக்க
ஒரு சாதாரண புது நடிகராக இருந்தாலும் கூட பாலாவின் இயக்கத்தில் படத்தில் நடித்து விட்டால் அவர் ஒரு மிகச்சிறந்த நடிகராக மாறி விடுவார் அந்த அளவிற்கு பாலாவின் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணிக்க வைத்துவிடுவார். அப்படி அர்ப்பணிக்கும் பட்சத்தில் அவரது கதாபாத்திரமும் நன்கு பேசப்படும் நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும். பாலா தன்னுடைய படங்களில் நடிக்கும் ஹீரோக்களை நிஜ கதாபாத்திரங்களுடன் ஒன்றி நடிக்க வைத்து விடுவார்.

100 வருடங்கள் கழித்தும் பேசப்படுவார்கள்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலில் நேர்காணலில் உங்க படங்களில் நடிகர்கள் ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்து பெயர் வாங்குகிறார்கள் சில நடிகர்கள் அதையெல்லாம் செய்யாமல் ஈசியாக பெயர் வாங்குகிறார்கள் என கேட்டதற்கு என் படங்களில் நடிக்கும் நடிகர்கள் 100 வருடங்கள் கழித்தும் பேசப்படுவார்கள் ஆனால் மற்றவர்களை 10 வருடங்களில் மறந்து விடுவார்கள் என பாலா அந்தப் நேர்காணலில் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











