அப்பா அம்மா ரொமான்ஸ் தாங்கல.. எப்பவுமே கொஞ்சல்ஸ் தான்.. குஷ்பு மகள் சொன்ன பேமிலி சீக்ரெட்!

சென்னை : குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிய இவர் நடிகை குஷ்பு, 1988ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை குஷ்பு.

வருஷம் 16, வெற்றி விழா, பாட்டுக்கு நான் அடிமை, கிழக்கு வாசல் என்று வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்தார் நடிகை குஷ்பு.

80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக சினிமாவை ஆண்டவர் நடிகை குஷ்பு. மைக்கேல் மதன காமராஜன், மன்னன், ரிக்ஷா மாமா, அண்ணாமலை போன்ற பல படங்கள் பேர் சொல்லும் அளவிற்கு நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு, சரத்குமார், சத்யராஜ் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இரட்டை ரோஜா, புருஷ லட்சணம், விரலுக்கேத்த வீக்கம், மனைவிக்கு மரியாதை, சுயம்வரம், வெற்றிவேல் சக்திவேல் போன்ற பல காமெடி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.

சுந்தர் சியுடன் திருமணம்

சுந்தர் சியுடன் திருமணம்

அதேபோல் 90களில் இருந்து இன்று வரை முன்னணி இயக்குநராக இருந்து கொண்டு இருப்பவர் சுந்தர் சி. இருவரும் காதலித்து 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நடிகர் பிரபுவுடன் இணைந்து நடிகை குஷ்பு பல படங்களில் நடித்து வந்ததாலும், அவர்கள் கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாக இருந்தாலும், இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் அந்த காலகட்டத்தில் வெளிவந்தது. ஆனால் அந்த கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு குஷ்பு இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார்.

இயக்கிய பெருமை

இயக்கிய பெருமை

சுந்தர் சி இயக்கிய படங்களில் சில படங்களில் குஷ்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில இயக்குநர்கள் மட்டுமே ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் பணியாற்றியுள்ளனர். அந்தப் பெருமை சுந்தர் சிக்கு எப்பொழுதும் சேரும். ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் படத்தையும், கமலஹாசன் நடித்த அன்பே சிவம் படத்தையும் இவர் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. குஷ்பு மற்றும் சுந்தர் சி இணைந்து பல படங்களை தயாரித்தும் உள்ளனர்.

ரொமான்ஸ் குறையவில்லை

ரொமான்ஸ் குறையவில்லை

குஷ்பூ சுந்தர் சி ஜோடிக்கு இப்போது அவந்திகா மற்றும் அனந்திகா என்ற 2 மகள்கள் உள்ளனர். சினிமா துறையில் பல காதல் ஜோடிகள் இருந்தாலும், சுந்தர்சி குஷ்புக்கென்று ஒரு தனி இடம் உண்டு. சமூக வலைத்தளத்தில் குஷ்பு வெளியிடும் பல புகைப்படங்கள் சுந்தர் சி எடுத்தது என்று அவர் கூறியதும் குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட திருமணமாகி 22 வருடங்கள் ஆனபிறகும் இருவருக்கும் இடையே பாசம் குறையவில்லை என்று குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா கூறியுள்ளார். இன்றும் இருவரும் லவ் பேர்ட்ஸ் என்றும், ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளாமல் தூங்க போவதே இல்லை என்று வீட்டு ரகசியங்கள் அனைத்தையும் கூறியுள்ளார் குஷ்புவின் மூத்த மகள்.

வீடியோ கால் பேசுவதே வேலை

வீடியோ கால் பேசுவதே வேலை

எங்கே சூட்டிங் சென்றாலும் அப்பா வீடு திரும்பி விடுவார் , அதே போல் எப்பொழுதும் இரவு சூட்டிங்கில் நான் பங்கேற்பதில்லை என்று சுந்தர் சி சொன்னதும் குறிப்பிடத்தக்கது. அப்படி வெளிநாட்டுக்கு சூட்டிங் சென்றிருந்தால் வீடியோ காலிலாவது பேசிக்கொள்வார்கள். ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேல் போன் செய்து இருவரும் பேசுவார்கள், இரவில் அப்பாவின் முகத்தைப் பார்க்காமல் அம்மாவிற்கு தூக்கமே வராது, ஒரு மணி நேரம் வீடியோ கால் பேசிய பிறகும் முதலில் நீங்கள் போனை கட் செய்யுங்கள் என்று மாற்றி மாற்றி அரைமணி நேரம் பேசிக் கொள்வார்களாம். கடைசியில் இருவரும் போனை வைக்காமல் மகள் தான் போனை கட் செய்வாராம். இவ்வாறு தன் அம்மா அப்பா காதலை பற்றி கூறியுள்ளார் அவந்திகா.

மறுபடியும் போன்

மறுபடியும் போன்

மீண்டும் குஷ்பு போன் செய்து நான் போனை கட் செய்யவில்லை. அவந்திகா தான் கட் செய்தார். இதை சொல்லவே நான் போன் செய்தேன், சரி நீங்கள் முதலில் வையுங்கள் என்று பேச தொடங்குவாராம் குஷ்பு, இதுபோல் பல சுவாரஸ்யமான விஷயங்கள் வீட்டில் நடக்கும் என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார் அவந்திகா. குஷ்பு மகள் பகிர்ந்த இந்த விஷயங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X