என் பையன் அது உன் மிஸ்டேக்பான்னு சொல்லிட்டான்.. நடிகர் விஜய் சேதுபதி வருத்தம்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தென்னிந்தியாவை தொடர்ந்து இப்போது பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ளார்

தென்மேற்கு பருவக்காற்று தர்மதுரை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படம் மிக விரைவிலேயே வெளியாக உள்ளது

இந்த நிலையில் தனியார் யூட்யூப் சேனல் நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதி என் பையன் அது உன் மிஸ்டேக்பா என எனக்கே அட்வைஸ் செய்கிறார் என கூறியுள்ளார்

சரிசமமான கதாபாத்திரம்

சரிசமமான கதாபாத்திரம்

வித்தியாசமான நடிப்பு படத்திற்கு படம் என பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் வில்லன் கதாபாத்திரங்களிலும் பட்டைய கிளப்பிக் கொண்டு உள்ளார் அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி என இருவருக்கும் மிக சரிசமமான கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார். ஹீரோவாக மட்டுமல்லாமல் முரட்டுத்தனமான வில்லனாகவும் நடிக்க முடியும் என நிரூபித்துக் காட்டிய விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி உள்ளிட்ட ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்

அடுத்ததாக மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி அடுத்து வரும் திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் தனது கலையுலக குருவான கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த படம் வரும் ஜூன் 3ம் தேதி மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் நரேன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. பரபரப்பான ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

மகன் தனக்கு அட்வைஸ்

மகன் தனக்கு அட்வைஸ்

தென் மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படம் மிக விரைவிலேயே திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதி மகன் தனக்கு அட்வைஸ் செய்தது குறித்து பகிர்ந்துள்ளார்.

அது உன் மிஸ்டேக்பா

அது உன் மிஸ்டேக்பா

ஒருநாள் விஜய் சேதுபதியின் மகன் கம்ப்யூட்டரில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தாராம் அப்போது அவரிடம் சாரி சொன்னேன் , சாரிடா உங்க அப்பன் காசு சம்பாதிச்சு வச்சிருக்கான் அதனால நீ இப்படி கெட்டு போற, ஆனா எங்க அப்பா அப்படி கிடையாது எங்க அப்பா காசு சேர்த்து வைக்கல இப்போ நான் காசு சேர்த்து வெச்சிருக்கேன் அதனால நீ கெட்டு போற என்ன பண்றதுன்னு தெரியல எப்படியாவது திருந்திடு எனக் கேட்டதற்கு, அது உன் மிஸ்டேக்பா நான் என்ன பண்ணட்டும் என கூலாக எனக்கே அட்வைஸ் பண்ணி விட்டான். என விஜய் சேதுபதி அந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X