»   »  தாய் காவியத்தில் நதியா!

தாய் காவியத்தில் நதியா!

Subscribe to Oneindia Tamil


கலைஞர் கருணாநிதியின் தாய் காவியம் படத்தில் ராதிகாவைத் தொடர்ந்து தற்போது நதியாவும் நடிக்கவுள்ளார்.

Click here for more images

புகழ் பெற்ற மாக்ஸிம் கார்க்கியின் 'தி மதர்' நாவலை, முதல்வர் கருணாநிதி தாய் காவியம் என்ற பெயரில் தமிழில் வடித்துள்ளார். இந்த நாவல் தற்போது திரைப்படமாகிறது.

பாடலாசிரியர் பா.விஜய், இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். அவரது தாய் வேடத்தில் நடிகை ராதிகா நடிக்கவுள்ளார். கருணாநிதியே, ராதிகா நடிக்கலாம் என்று பரிந்துரைத்தாராம். இதனால் ராதிகா அந்த முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது இன்னொரு முன்னாள் முன்னணி நாயகியான நதியாவையும் முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க அணுகியுள்ளனராம்.

வருகிற 20ம் தேதி முதல்வர் கருணாநிதி, தனது கோபாலபுரம் இல்லத்தில் இப்படத்தின் படத்தை தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டது.

ஆனால் அதனால் பாதுகாப்பு பிரச்சினைகள் எழலாம் என்பதால் தற்போது படத் தொடக்க விழா ஏவி.எம். ஸ்டுடியோ வளாகத்தில் உள்ள ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டருக்கு மாற்றப்பட்டுள்ளது. 20ம் தேதி காலை 8.30 மணிக்கு படத் தொடக்க விழா நடைபெறுகிறது.

அன்றுதான் கவிஞர் பா.விஜய்க்கும் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் வங்காளத்தைச் சேர்ந்த சுதர்சனா என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். அவர் நாடகங்களில் நிறைய நடித்த அனுபவம் உள்ளவராம். மாடலிங்கும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil