மீண்டும் நதியா! சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் நதியா.அந்தக் கால அழகு நாயகிகளில் நதியாவும் ஒருவர். இவரது பெயரை வைத்துவளையல், ரிப்பன், பொட்டு, சேலை என ஏகப்பட்ட பொம்பளைங்க சமாச்சாரங்கள்வெளியாகி ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.படு பிசியாக இருந்த நதியா போகப் போக புதுமுகங்களின் வரவால், வாய்ப்பிழந்தார்.அதே சூட்டோடு, கல்யாணம் பண்ணிக் கொண்டு அமெரிக்காவுக்குப் போய்செட்டிலாகி விட்டார்.அதன் பின்னர் அவர் சினிமா பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. தானுண்டு, குடும்பம்உண்டு என்று இருந்த அவரை எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமிக்காக மீண்டும்கோலிவுட்டுக்கு கூட்டி வந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்த நதியா,அப்படத்தில் ஜெயம் ரவியின் அம்மா வேடத்தில் வந்து போனார்.சிக்னெ இருந்த நதியாவை ரசிகர்கள் மறக்கவில்லை, மாறாக பழைய பாசத்துடன்ரசித்தனர். படம் சூப்பர் ஹிட் ஆனது. ஆனாலும் நதியா அடுத்தடுத்து புதியபடங்களில் நடிக்கவில்லை. இதற்குக் காரணம் தன்னைத் தேடி வந்ததயாரிப்பாளர்களுக்கு அவர் போட்ட குண்டக்க மண்டக்க கண்டிஷன்கள்தான்.இதனால் ஒரு படம் இல்லாமல் அமெரிக்காவுக்கேத் திரும்பிப் போனார் நதியா.சமீபத்தில் அவர் சென்னைக்கு வந்தபோது இயக்குநர் ஹரி, நதியாவை சந்தித்ததாமிரபரணி படத்தின் கதையைச் சொல்லி அதில் நீங்கள் கண்டிப்பாக நடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.தனது கேரக்டர் குறித்துக் கேட்ட நதியாவுக்கு அது பிடித்துப் போக உடனேயே ஓ.கே.சொல்லி விட்டார்.இப்போது தாமிரபரணியில் நதியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வெள்ளிக்கிழமைபடத்துக்குப் பூஜை போடப்பட்டது. ரஜினி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றிவைத்தார். பூஜைக்கு பளிச்சென வந்திருந்த நதியாவை ஓரம் கட்டி நிறைய கேப்விழுந்து விட்டதே என்று கேட்டபோது, அப்படியெல்லாம் இல்லை.நல்ல கதையாக இருந்தால்தான் நடிப்பது என்ற முடிவில் இருந்தேன். அதனால் தான்குமரனுக்குப் பிறகு நிறைய படங்களில் நடிக்க முடியவில்லை. இப்போதுதாமிரபரணியில் எனது கேரக்டர் நன்றாக அமைந்துள்ளது. அதனால்தான் நடிக்கவந்துள்ளேன்.தமிழ் சினிமா நிறைய மாறி விட்டது. அப்போது மாதிரி இப்போது இல்லை. நான்நடித்த காலத்தில் எல்லாம் கிளாமர் அதிகம் இருக்காது. அப்படியே இருந்தாலும் லேசாபாசாகத்தான் இருக்கும். இப்போது வரும் படங்களில் கிளாமர்தான் பிரதானமாகஇருக்கிறது.இப்போது உள்ள நடிகைகளும் கிளாமர் காட்டத் தயங்குவதில்லை. கிளாமர்இல்லாவிட்டால் அவர்களால் 2 படம் கூட நடிக்க முடியாத நிலை உள்ளது. கிளாமர்காட்டினால்தான் பிழைக்க முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. இது நல்லதா,கெட்டதா என்று எனக்குத் தெரியவில்லை.கிளாமர் காட்டுவதால் அவர்களை குறைத்து எடை போட்டு விடக் கூடாது. இன்றைக்குஉள்ள அத்தனை நாயகிகளும் நன்றாக நடிக்கிறார்கள், புத்திசாலிகளாக இருக்கிறார்கள்,திறமைசாலிகளாக உள்ளனர். நன்கு படித்தவர்களாகவும் இருக்கிறார்கள். எனது முதல் இன்னிங்ஸ் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அந்த நாட்களை என்னால்எப்போதுமே மறக்க முடியாது. நதியா சேலை, நதியா சீப்பு, நதியா தோடு என என்மீது அன்பு கொண்ட ரசிகர்கள் இருந்த காலத்தை எப்படி மறக்க முடியும்?அந்த சந்தோஷமே எனது இளமைக்கு முக்கியக் காரணம். அதை நினைத்தாலே எனதுவயது எனக்கு மறந்து போய் விடும் என்று புல்லரித்துச் சொன்னார் இன்னும் நல்லாஇருக்கும் நதியா.

By Staff
சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் நதியா.

அந்தக் கால அழகு நாயகிகளில் நதியாவும் ஒருவர். இவரது பெயரை வைத்துவளையல், ரிப்பன், பொட்டு, சேலை என ஏகப்பட்ட பொம்பளைங்க சமாச்சாரங்கள்வெளியாகி ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

படு பிசியாக இருந்த நதியா போகப் போக புதுமுகங்களின் வரவால், வாய்ப்பிழந்தார்.அதே சூட்டோடு, கல்யாணம் பண்ணிக் கொண்டு அமெரிக்காவுக்குப் போய்செட்டிலாகி விட்டார்.

அதன் பின்னர் அவர் சினிமா பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. தானுண்டு, குடும்பம்உண்டு என்று இருந்த அவரை எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமிக்காக மீண்டும்கோலிவுட்டுக்கு கூட்டி வந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்த நதியா,அப்படத்தில் ஜெயம் ரவியின் அம்மா வேடத்தில் வந்து போனார்.

சிக்னெ இருந்த நதியாவை ரசிகர்கள் மறக்கவில்லை, மாறாக பழைய பாசத்துடன்ரசித்தனர். படம் சூப்பர் ஹிட் ஆனது. ஆனாலும் நதியா அடுத்தடுத்து புதியபடங்களில் நடிக்கவில்லை. இதற்குக் காரணம் தன்னைத் தேடி வந்ததயாரிப்பாளர்களுக்கு அவர் போட்ட குண்டக்க மண்டக்க கண்டிஷன்கள்தான்.

இதனால் ஒரு படம் இல்லாமல் அமெரிக்காவுக்கேத் திரும்பிப் போனார் நதியா.சமீபத்தில் அவர் சென்னைக்கு வந்தபோது இயக்குநர் ஹரி, நதியாவை சந்தித்ததாமிரபரணி படத்தின் கதையைச் சொல்லி அதில் நீங்கள் கண்டிப்பாக நடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தனது கேரக்டர் குறித்துக் கேட்ட நதியாவுக்கு அது பிடித்துப் போக உடனேயே ஓ.கே.சொல்லி விட்டார்.

இப்போது தாமிரபரணியில் நதியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வெள்ளிக்கிழமைபடத்துக்குப் பூஜை போடப்பட்டது. ரஜினி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றிவைத்தார். பூஜைக்கு பளிச்சென வந்திருந்த நதியாவை ஓரம் கட்டி நிறைய கேப்விழுந்து விட்டதே என்று கேட்டபோது, அப்படியெல்லாம் இல்லை.

நல்ல கதையாக இருந்தால்தான் நடிப்பது என்ற முடிவில் இருந்தேன். அதனால் தான்குமரனுக்குப் பிறகு நிறைய படங்களில் நடிக்க முடியவில்லை. இப்போதுதாமிரபரணியில் எனது கேரக்டர் நன்றாக அமைந்துள்ளது. அதனால்தான் நடிக்கவந்துள்ளேன்.

தமிழ் சினிமா நிறைய மாறி விட்டது. அப்போது மாதிரி இப்போது இல்லை. நான்நடித்த காலத்தில் எல்லாம் கிளாமர் அதிகம் இருக்காது. அப்படியே இருந்தாலும் லேசாபாசாகத்தான் இருக்கும். இப்போது வரும் படங்களில் கிளாமர்தான் பிரதானமாகஇருக்கிறது.

இப்போது உள்ள நடிகைகளும் கிளாமர் காட்டத் தயங்குவதில்லை. கிளாமர்இல்லாவிட்டால் அவர்களால் 2 படம் கூட நடிக்க முடியாத நிலை உள்ளது. கிளாமர்காட்டினால்தான் பிழைக்க முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. இது நல்லதா,கெட்டதா என்று எனக்குத் தெரியவில்லை.

கிளாமர் காட்டுவதால் அவர்களை குறைத்து எடை போட்டு விடக் கூடாது. இன்றைக்குஉள்ள அத்தனை நாயகிகளும் நன்றாக நடிக்கிறார்கள், புத்திசாலிகளாக இருக்கிறார்கள்,திறமைசாலிகளாக உள்ளனர். நன்கு படித்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

எனது முதல் இன்னிங்ஸ் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அந்த நாட்களை என்னால்எப்போதுமே மறக்க முடியாது. நதியா சேலை, நதியா சீப்பு, நதியா தோடு என என்மீது அன்பு கொண்ட ரசிகர்கள் இருந்த காலத்தை எப்படி மறக்க முடியும்?

அந்த சந்தோஷமே எனது இளமைக்கு முக்கியக் காரணம். அதை நினைத்தாலே எனதுவயது எனக்கு மறந்து போய் விடும் என்று புல்லரித்துச் சொன்னார் இன்னும் நல்லாஇருக்கும் நதியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X