»   »  ஊர் திரும்பிய நதியா வந்த வாய்ப்புகளையெல்லாம் தனது பந்தாவால் அளந்து பார்த்து வந்த நதியாவுக்கு இப்போது ஒரு படமும் கையில்இல்லாததால், வெறுப்படைந்து லண்டனுக்கே திரும்பப் போய் விட்டாராம்.நதியா, நதியா நைல் நதியா என்று கவிஞர்களை ஒரு காலத்தில் பாட்டு எழுத வைத்தவர் நதியா. தனது அழகால் ரசிகர்களைவசீகரித்த நதியா, நாயகியாக நடித்த காலத்திலேயே ஏகப்பட்ட பந்தாக்களுக்கு ஏகபோக ஓனராக இருந்தவர்.முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன், சின்னப் பசங்களுடன் தான் நடிப்பேன் என்று கண்டிஷன் போட்டு கலக்கியவர்.சுரேஷ், மோகன் என செகண்ட் ரேங்க் ஹீரோக்களுடன் அதிகம் நடித்தவர். ஒரு வழியாக நதியாவின் நாயகி காலம் முடிந்ததால்கல்யாணம் கட்டிக் கொண்டு லண்டனுக்குப் பறந்தார்.ரொம்ப காலத்திற்குப் பிறகு ஜெயம் ரவி குரூப், தங்களது எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமியில் நதியாவை கூட்டி வந்து ரவியின்அம்மாவாக நடிக்க வைத்தது. அம்மாவாக நடித்தாலும், நான் சும்மாயில்லை என்பது போல ஹீரோயின் ரேஞ்சுக்குநடித்திருந்தார் நதியா.அவரது அல்டாப் பந்தாக்களைப் சகித்துக் கொண்டு கேட்ட பணத்தையும் கொடுத்து நடிக்க வைத்து படத்தை முடித்தார்கள்.படம் ஓடி செம வசூல். போதாதா நதியாவுக்கு.. இனிமேல் என்னிடம் கதை கூறுபவர்கள், எனக்கு முக்கியத்துவம் தருகிறமாதிரியான கதைகளைத் தான் கூற வேண்டும். நான் ஷூட்டிங் வந்து போக ஆகும் செலவை முழுசாக தந்து விட வேண்டும். தங்கும் இடம் எனது விருப்பப்படி தான். கேரவன்கண்டிப்பாக வேண்டும் என்று ஏகப்பட்ட பந்தாக்களை, நிபந்தனைகளை போர்டில் எழுதி வைக்காத குறையாக சொல்லவே,தயாரிப்பாளர்கள் பீதியடைந்தனர்.ஹீரோயின் ரேஞ்சுக்கு கேட்கிறீர்களே என்று கொஞ்சம் போல தைரியம் படைத்த தயாரிப்பாளர்கள் நதியாவைக் கேட்க, நோ,நோ நான் படத்தில் வேணும்னா இதெல்லாம் செஞ்சுத் தான் ஆக வேண்டும் என்று ஒரே போடாக நதியா போட, அட போம்மாஎன்று தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவராக மெதுவாக ஜகா வாங்கத் தொடங்கினர்.இப்போ நதியா கையில் ஒரு படமும் இல்லை. எந்தத் தயாரிப்பாளர்களும் அவரைத் தேடுவதில்லை. வந்த வாய்ப்புகளை தனதுவாயால் விரட்டிய நதியா, படம் ஒன்றும் தேறாததால், வெறுத்துப் போனார்.சரி, லண்டனுக்கேப் போய் விடுவோம் என்ற முடிவுக்கு வந்து சென்னைக்குப் பேக்கப் சொல்லி விட்டு பறந்து விட்டார்.அம்மான்னாலே பந்தா தானோ..

ஊர் திரும்பிய நதியா வந்த வாய்ப்புகளையெல்லாம் தனது பந்தாவால் அளந்து பார்த்து வந்த நதியாவுக்கு இப்போது ஒரு படமும் கையில்இல்லாததால், வெறுப்படைந்து லண்டனுக்கே திரும்பப் போய் விட்டாராம்.நதியா, நதியா நைல் நதியா என்று கவிஞர்களை ஒரு காலத்தில் பாட்டு எழுத வைத்தவர் நதியா. தனது அழகால் ரசிகர்களைவசீகரித்த நதியா, நாயகியாக நடித்த காலத்திலேயே ஏகப்பட்ட பந்தாக்களுக்கு ஏகபோக ஓனராக இருந்தவர்.முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன், சின்னப் பசங்களுடன் தான் நடிப்பேன் என்று கண்டிஷன் போட்டு கலக்கியவர்.சுரேஷ், மோகன் என செகண்ட் ரேங்க் ஹீரோக்களுடன் அதிகம் நடித்தவர். ஒரு வழியாக நதியாவின் நாயகி காலம் முடிந்ததால்கல்யாணம் கட்டிக் கொண்டு லண்டனுக்குப் பறந்தார்.ரொம்ப காலத்திற்குப் பிறகு ஜெயம் ரவி குரூப், தங்களது எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமியில் நதியாவை கூட்டி வந்து ரவியின்அம்மாவாக நடிக்க வைத்தது. அம்மாவாக நடித்தாலும், நான் சும்மாயில்லை என்பது போல ஹீரோயின் ரேஞ்சுக்குநடித்திருந்தார் நதியா.அவரது அல்டாப் பந்தாக்களைப் சகித்துக் கொண்டு கேட்ட பணத்தையும் கொடுத்து நடிக்க வைத்து படத்தை முடித்தார்கள்.படம் ஓடி செம வசூல். போதாதா நதியாவுக்கு.. இனிமேல் என்னிடம் கதை கூறுபவர்கள், எனக்கு முக்கியத்துவம் தருகிறமாதிரியான கதைகளைத் தான் கூற வேண்டும். நான் ஷூட்டிங் வந்து போக ஆகும் செலவை முழுசாக தந்து விட வேண்டும். தங்கும் இடம் எனது விருப்பப்படி தான். கேரவன்கண்டிப்பாக வேண்டும் என்று ஏகப்பட்ட பந்தாக்களை, நிபந்தனைகளை போர்டில் எழுதி வைக்காத குறையாக சொல்லவே,தயாரிப்பாளர்கள் பீதியடைந்தனர்.ஹீரோயின் ரேஞ்சுக்கு கேட்கிறீர்களே என்று கொஞ்சம் போல தைரியம் படைத்த தயாரிப்பாளர்கள் நதியாவைக் கேட்க, நோ,நோ நான் படத்தில் வேணும்னா இதெல்லாம் செஞ்சுத் தான் ஆக வேண்டும் என்று ஒரே போடாக நதியா போட, அட போம்மாஎன்று தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவராக மெதுவாக ஜகா வாங்கத் தொடங்கினர்.இப்போ நதியா கையில் ஒரு படமும் இல்லை. எந்தத் தயாரிப்பாளர்களும் அவரைத் தேடுவதில்லை. வந்த வாய்ப்புகளை தனதுவாயால் விரட்டிய நதியா, படம் ஒன்றும் தேறாததால், வெறுத்துப் போனார்.சரி, லண்டனுக்கேப் போய் விடுவோம் என்ற முடிவுக்கு வந்து சென்னைக்குப் பேக்கப் சொல்லி விட்டு பறந்து விட்டார்.அம்மான்னாலே பந்தா தானோ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

வந்த வாய்ப்புகளையெல்லாம் தனது பந்தாவால் அளந்து பார்த்து வந்த நதியாவுக்கு இப்போது ஒரு படமும் கையில்இல்லாததால், வெறுப்படைந்து லண்டனுக்கே திரும்பப் போய் விட்டாராம்.

நதியா, நதியா நைல் நதியா என்று கவிஞர்களை ஒரு காலத்தில் பாட்டு எழுத வைத்தவர் நதியா. தனது அழகால் ரசிகர்களைவசீகரித்த நதியா, நாயகியாக நடித்த காலத்திலேயே ஏகப்பட்ட பந்தாக்களுக்கு ஏகபோக ஓனராக இருந்தவர்.

முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன், சின்னப் பசங்களுடன் தான் நடிப்பேன் என்று கண்டிஷன் போட்டு கலக்கியவர்.சுரேஷ், மோகன் என செகண்ட் ரேங்க் ஹீரோக்களுடன் அதிகம் நடித்தவர். ஒரு வழியாக நதியாவின் நாயகி காலம் முடிந்ததால்கல்யாணம் கட்டிக் கொண்டு லண்டனுக்குப் பறந்தார்.

ரொம்ப காலத்திற்குப் பிறகு ஜெயம் ரவி குரூப், தங்களது எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமியில் நதியாவை கூட்டி வந்து ரவியின்அம்மாவாக நடிக்க வைத்தது. அம்மாவாக நடித்தாலும், நான் சும்மாயில்லை என்பது போல ஹீரோயின் ரேஞ்சுக்குநடித்திருந்தார் நதியா.

அவரது அல்டாப் பந்தாக்களைப் சகித்துக் கொண்டு கேட்ட பணத்தையும் கொடுத்து நடிக்க வைத்து படத்தை முடித்தார்கள்.படம் ஓடி செம வசூல். போதாதா நதியாவுக்கு.. இனிமேல் என்னிடம் கதை கூறுபவர்கள், எனக்கு முக்கியத்துவம் தருகிறமாதிரியான கதைகளைத் தான் கூற வேண்டும்.

நான் ஷூட்டிங் வந்து போக ஆகும் செலவை முழுசாக தந்து விட வேண்டும். தங்கும் இடம் எனது விருப்பப்படி தான். கேரவன்கண்டிப்பாக வேண்டும் என்று ஏகப்பட்ட பந்தாக்களை, நிபந்தனைகளை போர்டில் எழுதி வைக்காத குறையாக சொல்லவே,தயாரிப்பாளர்கள் பீதியடைந்தனர்.

ஹீரோயின் ரேஞ்சுக்கு கேட்கிறீர்களே என்று கொஞ்சம் போல தைரியம் படைத்த தயாரிப்பாளர்கள் நதியாவைக் கேட்க, நோ,நோ நான் படத்தில் வேணும்னா இதெல்லாம் செஞ்சுத் தான் ஆக வேண்டும் என்று ஒரே போடாக நதியா போட, அட போம்மாஎன்று தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவராக மெதுவாக ஜகா வாங்கத் தொடங்கினர்.

இப்போ நதியா கையில் ஒரு படமும் இல்லை. எந்தத் தயாரிப்பாளர்களும் அவரைத் தேடுவதில்லை. வந்த வாய்ப்புகளை தனதுவாயால் விரட்டிய நதியா, படம் ஒன்றும் தேறாததால், வெறுத்துப் போனார்.

சரி, லண்டனுக்கேப் போய் விடுவோம் என்ற முடிவுக்கு வந்து சென்னைக்குப் பேக்கப் சொல்லி விட்டு பறந்து விட்டார்.

அம்மான்னாலே பந்தா தானோ..

Read more about: nathiya returns to london

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil