தம்பி பொண்டாட்டியை எப்படி வரவேற்கிறாரு பாருங்க.. நாக சைதன்யா ட்விட்டரில் போட்ட பேமிலி போஸ்ட்!
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜுனா - அமலா தம்பதியரின் இளைய மகன் அகில் அக்கினேனிக்கு நேற்று அதாவது ஜூன் 6ஆம் தேதி ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அகில் அக்கினேனி , சைனாப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றதாக கூறப்பட்டாலும், பல கோடிகள் வரை செலவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களின் திருமணத்திற்கு தெலுங்கு திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இந்நிலையில் அகில் அக்கினேனியின் அண்ணன் நாக சைதன்யா தனது தம்பி மனைவியை மிகவும் பாசத்துடன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவரே தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்ட்டும் போட்டுள்ளார்.
நடிகர் நாகர்ஜுனா - நடிகை அமலா தம்பதியருக்கு இரண்டு மகன்கள். இருவரில் மூத்த மகன் நாக சைதன்யா. இவர் முதலில் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுமார் நான்கு ஆண்டு காலம் இருவரும் இணைந்து வாழ்ந்து, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அவர்களின் விவாகரத்தின் போது சுமார் 200 கோடிகளை ஜீவனாம்சமாக அளிக்க நாக சைதன்யா குடும்பம் முன் வந்தது. ஆனால் சமந்தா அதை மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல கோடிகள் ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வேகமாக பரவியது.

இந்நிலையில் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி. இவரும் சினிமாவில் நடிகர் என்றாலும், நாக சைதன்யா அளவிற்கு தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் அல்ல. சினிமா பிரபலங்களுக்கான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில் தெலுங்கு அணியின் கேப்டனாக அகில் அக்கினேனி செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் திருமணம்: அகில் அக்கினேனியின் திரைவாழ்க்கை குறித்து கூற வேண்டும் என்றால், அவர் கடந்த 1995ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக நடித்தார். சிசிந்த்ரி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2015 இல் வெளியான அகில் படத்தில் கதாநாயகனாக உருவெடுத்தார். இவரது நடிப்பில் ஹலோ, மிஸ்டர் மஞ்சு, மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் மற்றும் ஏஜென்ட் போன்ற படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளார். இவருக்கும் இவரது 4 வருட காதலியான சைனாப் ராவ்த்ஜீ என்பவருக்கும் திருமணம் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் எளிமையாக அவர்களது மண்டபத்திலேயே நடைபெற்றாலும், டோலிவுட்டின் முன்னணி பிரபலங்களான சிரஞ்சீவி, ராம் சரண், பிரசாந்த் நீல் உள்ளிட்ட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பாசத்தோடு வரவேற்பு: இந்நிலையில் தனது தம்பியின் காதல் மனைவி சைனாப் ராவ்த்ஜீ-யை தனது குடும்பத்திற்கு பேரன்போடு அழைத்துள்ளார் நாக சைதன்யா. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் மற்றும் அதன் கேப்ஷன் ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது, அவர் தனது எக்ஸ் பதிவில், " புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள். சைனாப் உன்னை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











