Rashmika Mandanna: ராஷ்மிகா மந்தனா தான் எனது கிரஷ்.. சமந்தாவின் முன்னாள் மாமனார் இப்படி வழியுறாரேப்பா!
ஹைதராபாத்: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் 20ஆம் தேதி ரிலீஸ் ஆன குபேரா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாகி மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் வெற்றி விழா இன்று அதாவது ஜூன் 23ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் பேசிய நாகர்ஜுனா, நடிகை ராஷ்மிகாதான் தனது கிரஷ் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியாகும் முதல் படம் குபேரா என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக இயக்குநர் சேகர் கம்முலாவுடன் இவர் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு தெலுங்கு திரையுலகில் ஏற்பட்டது. அதேபோல் படத்தில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என பல ஸ்டார்களும் நடித்திருப்பதால் படத்தின் மீது தனி கவனம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
படத்தில் தனுஷ் பிச்சை எடுத்து வாழ்பவர் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார். தனுஷ்க்கு ஒரு இடத்தில் கூட மாஸ் காட்சிகள் வைக்கப்படவில்லை. கமர்ஷியலான காட்சிகள் எதுவும் இல்லை. டூயட் இல்லை ஆனால் படக்குழு படத்தை கூடுமானவரை உண்மைக்கு நெருக்கமாக காட்ட முயற்சித்து உள்ளார்கள் என்பது திரையில் தெரிகிறது. பாராட்டுகளைப் பெற்றாலும் படம் 3 மணி நேரம் 2 நிமிடங்கள் ஓடுவது என்பதே மைனஸான விஷயம் தான். திரைக்கதையிலும் ஆங்காங்கே சில ஓட்டைகள் உள்ளதையும் ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.

நாகர்ஜுனா: படம் வசூல் ரீதியாக முதல் மூன்று நாட்களிலேயே இந்தியாவில் மட்டும் ரூபாய் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது. படத்தின் வெற்றி விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் நாகர்ஜுனா ராஷ்மிகா மந்தனா குறித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், " ராஷ்மிகா மந்தனாவை பார்த்தால் எனக்கு சில நேரங்களில் நடிகை ஸ்ரீதேவி நியாபகம் வருகிறது. குபேரா படத்தின் பல ஷார்ட்களில் நான் அதை உணர்ந்தேன். புஷ்பா படத்திற்கு பின்னர் உங்களை நேஷனல் கிரஷ் எனக் கூறினார்கள். இப்போது ராஷ்மிகா மந்தனா நேஷனல் கிரஷ் மட்டும் அல்ல. அவர் என்னோட கிரஷ்ஷும் தான்" என பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு ராஷ்மிகாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் சமந்தாவின் முன்னாள் மாமனாருக்கு மனசோ மனசு தான் என பேசி வருகிறார்கள்.
தனுஷ்க்கு தேசிய விருது: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிரஞ்சீவி தனுஷ் குறித்து பாராட்டி பேசினார். குறிப்பாக அவர் பேசுகையில், "இந்த படத்தில் இந்தியாவிலேயே தனுஷ்ஷால் மட்டுமே நடிக்க முடியும். என்னிடம் இந்த படத்தின் கதையைச் சொல்லி இருந்தால் முடியாது எனக் கூறியிருப்பேன். இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்க வாழ்த்துகள்" என பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications











