Akhil Akkineni Marriage: நாகார்ஜுனா வீட்ல விசேஷம்.. அண்ணனை தொடர்ந்து தம்பிக்கும் திருமணம்.. மணமகள் யார்?

ஹைதராபாத்: நடிகர் நாகார்ஜுனாவுக்கும் நடிகை அமலாவுக்கும் மகனாக பிறந்த அகில் அக்கினேனியின் திருமணம் இன்று ஹைதராபாத்தில் எளிமையான முறையில் நடைபெற்றது. டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் இந்த திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் திருமணம் நடைபெற்று சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஏற்பட்டது. அண்ணன் விவாகரத்து ஆகி தவித்து வரும் சூழலில் எப்படி நாம் திருமணம் செய்துக் கொள்வது என தனது காதலியுடன் பொறுமையாக காத்துக் கொண்டிருந்தார் அகில் அக்கினேனி.

Nagarjuna second son Akhil Akkineni ties the knot to her lover Zainab Ravdjee today
Photo Credit:

கடந்த ஆண்டு நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், நிச்சயம் செய்துக் கொண்ட அகில் அக்கினேனி தற்போது திருமணத்தையும் சந்தோஷமாக முடித்துக் கொண்டார்.

நாகார்ஜுனா வீட்டில் விசேஷம்: இந்திய சினிமாவில் ஷாருக்கான், ஹ்ரித்திக் ரோஷனுக்கு அடுத்தபடி சுமார் 4000 கோடிக்கும் அதிகமான சொத்துக்கு அதிபதியாக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா. லக்‌ஷ்மி டகுபதி என்பவரை 1984ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டு 6 ஆண்டுகள் வாழ்ந்து 1990ல் விவாகரத்து செய்து பிரிந்தார். லக்‌ஷ்மிக்கு மகனாக பிறந்தவர் தான் நாக சைதன்யா. அடுத்ததாக ஹீரோயின் அமலாவை 1992ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட நாகார்ஜுனாவுக்கு அகில் அக்கினேனி மகனாக பிறந்தார். அவரும் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், இன்று அவருக்கு ஹைதாராபாத்தில் திருமணம் நடைபெற்றது. நடிகர் நாகார்ஜுனா வீட்டில் கடந்த ஆண்டு கடைசியில் இருந்து தொடர்ந்து, நிச்சயதார்த்தம், திருமணம் என ஒரே விசேஷம் களைகட்டி வருகிறது.

Nagarjuna second son Akhil Akkineni ties the knot to her lover Zainab Ravdjee today
Photo Credit:

அகில் அக்கினேனி திருமணம்: நடிகர் நாகார்ஜுனாவுக்கும் அமலாவுக்கும் மகனாக பிறந்த அகில் அக்கினேனி 1995ம் ஆண்டே குழந்தை நட்சத்திரமாக சிசிந்த்ரி படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின்னர், ஹீரோவாக 2015ல் வெளியான அகில் படத்தில் அறிமுகமானார். ஹலோ, மிஸ்டர் மஞ்சு, மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் மற்றும் ஏஜென்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இன்று தனது 4 வருட காதலியான சைனாப் ராவ்த்ஜீ என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். பிரமாண்டமாக திருமணம் செய்துக் கொள்ளாமல், எளிமையான முறையிலேயே திருமணம் செய்தாலும், டோலிவுட்டின் முன்னணி பிரபலங்களான சிரஞ்சீவி, ராம் சரண், பிரசாந்த் நீல் உள்ளிட்ட பலர் திருமணத்தில் பங்கேற்றுள்ளனர்.

மணமகள் யாரு தெரியுமா?: நாகார்ஜுனா மகன் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சைனாப் ராவ்த்ஜீ மிகப்பெரிய தொழிலதிபரான ஜுல்ஃபீ ராவ்த்ஜீயின் மகள் ஆவார். கட்டுமானத் தொழில்துறையில் மிகப்பெரிய ஆளுமையாக அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரிய இடத்து வாரிசான அகில் அக்கினேனி பெரிய இடத்துப் பெண்ணான சைனாப்பை காதலித்த நிலையில், இன்று இந்து முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர்.

நாக சைதன்யா ஹேப்பி: அண்ணன் நாக சைதன்யா தனது மனைவி சோபிதா துலிபாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிநாட்டுக்குச் சென்று திரும்பிய நிலையில், தம்பி அகில் அக்கினேனியின் திருமணத்தில் சந்தோஷமாக பங்கேற்று விருந்தினர்களை உற்சாகமாக உபசரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அகில் அக்கினேனி அடுத்ததாக லெனின் எனும் படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு அந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X