»   »  போஜ்பூரி நக்மா பத்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரைப்பட ரசிகர்களை கிறங்கடித்த நக்மா தற்போது போஜ்பூரி மொழி திரைப் படங்களில் மிகபிஸியாகிவிட்டார்.தமிழ் திரைப்படங்களில் புதுமுக நடிகைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால் நக்மாவின் காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்துஅவர் அரசியலுக்கு சென்றார். அங்கு அவரால் ஏதும் பெரிதாக சாதிக்க முடியவில்லை.இடையே பல்வேறு தாவூத் இப்ராகிம் உள்ளிட்டவர்களுடன் தொடர்பு என பல பிரச்சினைகளிலும் சிக்கினார்.இந் நிலையில் இந்தித் திரையுலகமும் கைவிட்டுவிட்ட நிலையில், இப்போது நக்மா போஜ்பூரி மொழி திரைப் படங்களில் நடிக்கஆரம்பித்துள்ளார்.பிகாரின் மேற்கு பகுதி, உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பகுதி மற்றும் இந்த பகுதிகளை ஒட்டியுள்ள மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட்மாநிலங்களின் சில பகுதிகளிலும், நேபாளத்தின் ஒரு பகுதியிலும் வசிக்கும் மக்கள் பேசும் மொழி தான் போஜ்பூரி.இந்த மொழிப் படங்கள் அவ்வளவாக பாப்புலர் கிடையாது. இந்தி சினிமாவே வட மாநிலங்களை ஆளும் நிலையில் போஜ்பூரிமொழி திரைப்படங்களும் வெளியாகி சுமாராக ஓடுகின்றன.இந்தியில் வாய்ப்பில்லாதவர்கள் இந்த மொழிப் படங்களில் நடிப்பது வழக்கம். அந்த வகையில் தான் நக்மா போஜ்பூரிக்குப்போனார்.முன்னாள் பாலிவுட் கனவுக் கன்னி சாய்ரா பானுவும் அவரது கணவர் திலீப் குமாரும் இணைந்து தயாரித்த போஜ்பூரி படமான"பண்டிட்ஜி பட்டாய் நா பியா கப் ஹோய் என்ற படத்தில் தான் நக்மா முதலில் நடித்தார். அதில் ஏராளமான ஈரக் காட்சிகள்.அதில் முங்கி முத்தெடுக்க நக்மாவை போஜ்பூரி சினிமா அப்படியே அணைத்துக் கொண்டுவிட்டது. இதையடுத்து அதே போன்றபடு கிளர்ச்சியூட்டும் ரோல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் நக்மா.இந் நிலையில் தான் விரைவில் கல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டில் ஆகும் மூடில் இருக்கும் தங்கை ஜோதிகா, அக்காநக்மாவையும் விரைவில் திருமணத்துக்குத் தயாராகும்படி கேட்டுக் கொண்டிருக்கிறாராம். ஆனால், இப்போதைக்கு தனக்குகல்யாண திட்டமே இல்லை என்று கூறிவிட்டாராம் நக்மா.

போஜ்பூரி நக்மா பத்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரைப்பட ரசிகர்களை கிறங்கடித்த நக்மா தற்போது போஜ்பூரி மொழி திரைப் படங்களில் மிகபிஸியாகிவிட்டார்.தமிழ் திரைப்படங்களில் புதுமுக நடிகைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால் நக்மாவின் காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்துஅவர் அரசியலுக்கு சென்றார். அங்கு அவரால் ஏதும் பெரிதாக சாதிக்க முடியவில்லை.இடையே பல்வேறு தாவூத் இப்ராகிம் உள்ளிட்டவர்களுடன் தொடர்பு என பல பிரச்சினைகளிலும் சிக்கினார்.இந் நிலையில் இந்தித் திரையுலகமும் கைவிட்டுவிட்ட நிலையில், இப்போது நக்மா போஜ்பூரி மொழி திரைப் படங்களில் நடிக்கஆரம்பித்துள்ளார்.பிகாரின் மேற்கு பகுதி, உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பகுதி மற்றும் இந்த பகுதிகளை ஒட்டியுள்ள மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட்மாநிலங்களின் சில பகுதிகளிலும், நேபாளத்தின் ஒரு பகுதியிலும் வசிக்கும் மக்கள் பேசும் மொழி தான் போஜ்பூரி.இந்த மொழிப் படங்கள் அவ்வளவாக பாப்புலர் கிடையாது. இந்தி சினிமாவே வட மாநிலங்களை ஆளும் நிலையில் போஜ்பூரிமொழி திரைப்படங்களும் வெளியாகி சுமாராக ஓடுகின்றன.இந்தியில் வாய்ப்பில்லாதவர்கள் இந்த மொழிப் படங்களில் நடிப்பது வழக்கம். அந்த வகையில் தான் நக்மா போஜ்பூரிக்குப்போனார்.முன்னாள் பாலிவுட் கனவுக் கன்னி சாய்ரா பானுவும் அவரது கணவர் திலீப் குமாரும் இணைந்து தயாரித்த போஜ்பூரி படமான"பண்டிட்ஜி பட்டாய் நா பியா கப் ஹோய் என்ற படத்தில் தான் நக்மா முதலில் நடித்தார். அதில் ஏராளமான ஈரக் காட்சிகள்.அதில் முங்கி முத்தெடுக்க நக்மாவை போஜ்பூரி சினிமா அப்படியே அணைத்துக் கொண்டுவிட்டது. இதையடுத்து அதே போன்றபடு கிளர்ச்சியூட்டும் ரோல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் நக்மா.இந் நிலையில் தான் விரைவில் கல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டில் ஆகும் மூடில் இருக்கும் தங்கை ஜோதிகா, அக்காநக்மாவையும் விரைவில் திருமணத்துக்குத் தயாராகும்படி கேட்டுக் கொண்டிருக்கிறாராம். ஆனால், இப்போதைக்கு தனக்குகல்யாண திட்டமே இல்லை என்று கூறிவிட்டாராம் நக்மா.

Posted By:
Subscribe to Oneindia Tamil

பத்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரைப்பட ரசிகர்களை கிறங்கடித்த நக்மா தற்போது போஜ்பூரி மொழி திரைப் படங்களில் மிகபிஸியாகிவிட்டார்.

தமிழ் திரைப்படங்களில் புதுமுக நடிகைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால் நக்மாவின் காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்துஅவர் அரசியலுக்கு சென்றார். அங்கு அவரால் ஏதும் பெரிதாக சாதிக்க முடியவில்லை.

இடையே பல்வேறு தாவூத் இப்ராகிம் உள்ளிட்டவர்களுடன் தொடர்பு என பல பிரச்சினைகளிலும் சிக்கினார்.


இந் நிலையில் இந்தித் திரையுலகமும் கைவிட்டுவிட்ட நிலையில், இப்போது நக்மா போஜ்பூரி மொழி திரைப் படங்களில் நடிக்கஆரம்பித்துள்ளார்.

பிகாரின் மேற்கு பகுதி, உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பகுதி மற்றும் இந்த பகுதிகளை ஒட்டியுள்ள மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட்மாநிலங்களின் சில பகுதிகளிலும், நேபாளத்தின் ஒரு பகுதியிலும் வசிக்கும் மக்கள் பேசும் மொழி தான் போஜ்பூரி.

இந்த மொழிப் படங்கள் அவ்வளவாக பாப்புலர் கிடையாது. இந்தி சினிமாவே வட மாநிலங்களை ஆளும் நிலையில் போஜ்பூரிமொழி திரைப்படங்களும் வெளியாகி சுமாராக ஓடுகின்றன.


இந்தியில் வாய்ப்பில்லாதவர்கள் இந்த மொழிப் படங்களில் நடிப்பது வழக்கம். அந்த வகையில் தான் நக்மா போஜ்பூரிக்குப்போனார்.

முன்னாள் பாலிவுட் கனவுக் கன்னி சாய்ரா பானுவும் அவரது கணவர் திலீப் குமாரும் இணைந்து தயாரித்த போஜ்பூரி படமான"பண்டிட்ஜி பட்டாய் நா பியா கப் ஹோய் என்ற படத்தில் தான் நக்மா முதலில் நடித்தார். அதில் ஏராளமான ஈரக் காட்சிகள்.

அதில் முங்கி முத்தெடுக்க நக்மாவை போஜ்பூரி சினிமா அப்படியே அணைத்துக் கொண்டுவிட்டது. இதையடுத்து அதே போன்றபடு கிளர்ச்சியூட்டும் ரோல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் நக்மா.

இந் நிலையில் தான் விரைவில் கல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டில் ஆகும் மூடில் இருக்கும் தங்கை ஜோதிகா, அக்காநக்மாவையும் விரைவில் திருமணத்துக்குத் தயாராகும்படி கேட்டுக் கொண்டிருக்கிறாராம். ஆனால், இப்போதைக்கு தனக்குகல்யாண திட்டமே இல்லை என்று கூறிவிட்டாராம் நக்மா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil