நமீதாவின் கன்னட கலக்கல்
நெடுந் தொடை அழகி நமீதாவின் கவர்ச்சி அலையில் சிக்கி மலைத்துப்போய்நெடுஞ்சாண் கிடையாக விழுந்து விட்டார்கள் கன்னட ரசிகர்கள்.
தமிழ் ரசிகர்களை தனது கவர்ச்சி அலையால் கலங்கடித்து வந்த நமீதா இப்போதுகன்னடக் கரையிலும் தனது காலை வைத்துள்ளார். திமுதிமுவென பெருகும்நமீதாவின் கவர்ச்சிப் பொங்கலில் சிக்கி கன்னட ரசிகர்கள் திக்குமுக்காடிப்போயிருக்கிறார்களாம்.கன்னடத்தில் நமீதாவின் நச் கிளாமர் மற்றும் கலக்கல் கவர்ச்சியில் உருவாகியுள்ளமுதல் படம் நீலகண்டா. கிரேஸி ஸ்டார் என்று கன்னட ரசிகர்களால் அழைக்கப்படும்ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார் நமீதா.
நீலகண்டா தயாரிப்பில் இருந்தபோதே படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. காரணம்நமீதா அதில் நடிப்பதால். அது மட்டுமல்ல, ரவிச்சந்திரன் படங்களில் ஹீரோயின்களைபடு அழகாக காட்டுவார். நமீதாவோ கவர்ச்சி கடல் குதிரை என்பதால் அவரைஎப்படியெல்லாம் துள்ள வைத்து நம்மைத் துவட்டி எடுக்கப் போகிறாரோ என்றகூடுதல் எதிர்பார்ப்பு கிளம்பி விட்டது.
சமீபத்தில் நீலகண்டா வெளியானது. படம் எதிர்பார்த்தது போல சூப்பர் ஹிட். வசூலைஅள்ளிக் குவித்து வருகிறதாம். தியேட்டர்களில் இளவட்டங்களின் கூட்டம் அலைமோதுகிறது. நமீதாவின் முழு நீள கவர்ச்சியை கண் கொட்டாமல், ரசித்து லயித்துப்போயுள்ளனர் கன்னட ரசிகர்கள்.
படத்தின் தயாரிப்பாளர் பால முத்தையா கல்லாக் கட்டும் வேகத்தைப் பார்த்துசந்தோஷமாக இருக்கிறார். இப்படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்தை விட சிறப்பானவரவேற்பு கிடைத்துள்ளது. நமீதாவின் கிளாமருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்புகொடுத்துள்ளனர். கிளாமரோடு நடிப்பையும் அழகாக வழங்கியிருக்கிறார் நமீதா.
கன்னட ரசிகர்களை தனது முதல் படத்திலேயே இழுத்து விட்டார் நமீதா. அடுத்தடுத்துஅவர் நிறைய கன்னடப் படங்களில் நடித்தால் நிச்சயம் முன்னணி நாயகியாகிவிடுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் பா.முத்தையா.
தமிழ் ரசிகர்களை தூங்க விடாமல்துவம்சம் செய்த நமீதா இப்போது கன்னடரசிகர்களை கண்டம் பண்ணக் கிளம்பியுள்ளார். நமீதாவின் அடுத்த குறி எதுவோ?


Click it and Unblock the Notifications