»   »  நமீ கன்னத்தில் நச்!

நமீ கன்னத்தில் நச்!

Subscribe to Oneindia Tamil

ஆண்களை அசரடித்து வரும் நமீதாவைப் பார்த்து ஒரு பெண்ணே, உணர்ச்சி வேகத்தில் பலமான ஒரு இச்கொடுத்த நமீதாவுக்கு ஷாக் கொடுத்தார்.

சூரத் சுந்தரி நமீதாவின் மிரட்டல் அழகிலும், கலக்கல் கிளாமரிலும் தமிழ் சினிமா சொக்கிப் போய்க் கிடக்கிறது.

நமீதாவை வைத்து நல்லதா ஒரு படமும் எடுக்க முடியாத இக்கட்டான நிலை வேறு. நமீதாவின் கிளாமர்புயலில் சிக்கி ரசிகர்கள் சின்னாபின்னணாகிக் கொண்டுள்ள நிலையில் ஒரு பெண்ணையே அசரடித்து விட்டார்நமீதா.

மலேசிய அரசின் சார்பில், தமிழ் திரையுலகினருடன் ஒரு கலந்துரையாடலுக்கு சென்னையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் திரையுலகைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர். ஆனால் நடிகர், நடிகைகள்பெரிய அளவில் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் விழா தொடங்கிய சில நிமிடங்களில் நமீதா அங்கு வந்தார். ஓங்கு தாங்காக அரேபிய குதிரை போலநடந்து வந்த நமீதாவைப் பார்த்து வாசலில் வரவேற்க நின்றிருந்த மலேசியப் பெண்மணி வாய் பிளந்துஆச்ச>யப்பட்டார்.

பின்னர் சுதாரித்துக் கொண்டு நமீதாவை கைகுலுக்கி அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அவரை இருஇருக்கையில், அமர வைத்த அப்பெண்மணி, நமீதாவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டார். நமீதாவைப்பிடித்த கையை விடாமல் அவரையேப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தார்.

அப்புறம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சடாரென நமீதாவை நெருங்கிய அவர், நமீதாவின் கன்னத்தில்பளிச்சென ஒரு அழுத்தமான இச் கொடுத்தார். அப்படி ஒரு அழுத்தமான உம்மாவை நமீதா இதுவரைவாங்கியிருக்க மாட்டார் போல. மலங்க மலங்க விழித்த அவர் கன்னத்தைத் தடவிக் கொண்டு ஒரு வெட்கச்சிரிப்பை சிந்தி வைத்தார்.

வந்த காரியம் நிறைவேறிய திருப்தியில் அந்த மலாய் பெண்மணி நமீதாவை விட்டு அந்தாண்டை நகர்ந்தார்.

Read more about: namitha in malaysian meet
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil