»   »  அட்டாக் நமீதா!

அட்டாக் நமீதா!

Subscribe to Oneindia Tamil

அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றில் படு அனலாக நடிக்கப் போகிறார் நமீதா.

கிறக்கப் பார்ட்டி நமீதாவை வைத்து அலேக் படங்களைத்தான் தயாரிக்க முடியும்.அதைத்தான் இப்போது கோலிவுட்காரர்கள் தயாரித்துக் குவித்தும் வருகின்றனர்.

தடதடக்கும் தனது உடம்புக்கேற்ற கதாபாத்திரங்களைத்தான் தேடிப் பிடித்து நமீதாவும்நச்சென நடித்து வருகிறார். தமிழில் மட்டுமே அதகளம் பண்ணி வந்த அவர் அதைத்தாண்டி கன்னடத்திலும் இப்போது சதகளம் பண்ண ஆரம்பித்துள்ளார்.

நமீதாவுக்கு, நடிகை பூஜா குளோஸ் பிரண்டாம். சமீபத்தில் நமீதாவை சந்தித்துள்ளார்பூஜா. பொதுப்படையாக பேசிக் கொண்டிருந்த பூஜா, அப்படியே ஒரு மேட்டரைநமீதாவிடம் சொல்லியுள்ளார்.

பொறி படப்பிடிப்பின்போது ஒரு அடிதடிக் காட்சியில் பூஜா நடிக்கவேண்டியிருந்ததாம். அதைப் பார்த்து அசந்து போன இயக்குனர் சுப்பிரமணியம் சிவா,பரவாயில்லையே அடிதடிக் காட்சிகளிலும் அமர்க்களம் பண்றீங்களே, பேசாமஆக்ஷன் படத்தில் நடிக்கலாமே, என்னோட அசோசியேட் ஒருவர் நல்ல கதைவைத்துள்ளார், யோசியுங்க என்று கூறியுள்ளார்.

இதை நமீதாவிடம் சொல்லி சிலாகித்துள்ளார் பூஜா. அவர் சொன்னதை அப்படியகேப்சர் செய்து கொண்ட நமிதா, சிவாவின் அசோசியேட்டை உடனடியாக அப்ரோச்செய்து, நான் அந்தக் கதையில் நடிக்கிறேன் என்று கூற, அவரோ 100 கிலோ அல்வாஅப்படியே வந்து வாயில் விழுந்ததைப் போல விக்கித்துப் போய் விட்டாராம்.

சுப்பிரமணிய சிவாவிடம் இந்த மேட்டரை உடைத்துள்ளார் அசோசியேட். நான் இதைபூஜாவிடம்தானே சொன்னேன், இங்கே எப்படி நமீதா வந்தார் என்று அவர் மண்டைகுழம்பியுள்ளார். பிறகு பூஜாவிடம் கேட்க அவரோ, நான்தான் நமீதாவிடம்எதேச்சையாக சொன்னேன் என்று ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.

இருந்தாலும் நமீதாவே நடிக்கட்டும், எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை என்று கூறிபெருந்தன்மையாக நமீதாவுக்கு விட்டுக் கொடுத்தாராம் பூஜா.

இதையடுத்து நமீதாவை சந்தித்து முழுக் கதையையும் சொல்லியுள்ளார் அந்தஅசோசியேட். கதை பிடித்துப் போக உடனே கால்ஷீட் கொடுத்து விட்டாராம் நமீதா.கால்ஷீட்டை வாங்கிய கையோடு, உடம்பை எப்பாடு பட்டாவது கொஞ்சம் போலகுறைத்து விடுங்கள் என்றும் அன்புக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம்.

நமீதாவின் அதிரடி ஆக்ஷன் விரைவில் ஆரம்பிக்கிறது.

கும்முன்னு குமுறுங்க நமிதா!

Read more about: namitha to do action role
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil