twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நமீதா, ஷகீலா நிகழ்ச்சிக்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு! நெல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நமீதா, ஷகீலா உள்ளிட்ட கிளாமர்நடிகைகள் கலந்து கொள்ளும் இன்னிசை இரவு நிகழ்ச்சிக்கு பல்வேறு தமிழ்அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திருநெல்வேலி பேட்டையில் சி.என்.சவுந்திரராஜன் அறக்கட்டளை என்ற தன்னார்வஅமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்பில் பள்ளிக்கூடம்கட்ட திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஏற்கனவே அரை ஏக்கர் நிலம்வாங்கப்பட்டுள்ளது.கட்டடம் கட்டத் தேவையான நிதியைத் திரட்ட திரைப்பட நடிகர், நடிகைகளை வைத்துஇன்னிசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளனர். நாளை இரவு இந்த நிகழ்ச்சிநடைபெறவுள்ளது.இதில் கலந்துகொள்ள நமீதா, ஷகீலா, பாபிலோனா, அபிநயஸ்ரீ, ஷர்மிளி என கிளாமர்நடிகைகளும், பின்னணிப் பாடகிகள் பி.சுசீலா, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, மம்தா, சுபாஉள்ளிட்டோரும் கலந்து கொள்வர் என விளம்பரப் படுத்தியுள்ளனர்.பள்ளிக்கூட கட்டட நிதிக்காக கவர்ச்சி நடிகைகளை வைத்து இன்னிசை நிகழ்ச்சிநடத்துவதற்கு நெல்லையைச் சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும். மாநகர காவல்துறைஆணையர் அனுமதி தரக் கூடாது என்று கோரி ஆணையருக்கும், மாவட்ட ஆ ட்சித்தலைவருக்கும் தமிழ் சான்றோர் பேரவை உள்ளிட்ட 7 தமிழ் அமைப்புகளின்நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளனர்.மீறி அனுமதி தரப்பட்டால் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெறவும்திட்டமிடப்பட்டுள்ளது. இன்னிசை இரவுக்கு தடை வருவது ஒருபுறம் இருக்கட்டம்.நமீதா, ஒரு நல்ல காரியத்தை சமீபத்தில் செய்தார். சென்னையைச் சேர்ந்த கருணாலயா சுனாமியால் பாதித்த மக்களுக்காக பலஉதவிகளை செய்து வருகிறது.இந்த அமைப்பின் சார்பில் திருவொற்றியூரில் சுனாமி பாதித்த பலகை தொட்டிக்குப்பக்கத்தில் பெண்கள் மறறும் குழந்தைகளுக்காக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.இதன் திறப்பு விழாவில் நமீதா கலந்து கொண்டு கழிப்பறைகளை திறந்து வைத்தார்.பின்னர் அவர்அங்கு கூடியிருந்தவர்களிடையே பேசுகையில், கழிப்பறைகளைநீங்கள்சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மறுபடியும் வந்து நான் எப்படிவைத்திருக்கிறீர்கள் என்பதைப் பார்ப்பேன்,சரியா என்று கொச்சைத் தமிழில் பேசினாலும் கொஞ்சும் விதத்தில் பேசினார் நமீதா.பின்னர், அங்கிருந்த பெண்கள், நமீதாவை ஆசையுடன் தொட்டுத் தொட்டுப் பேசினர்.அவர்களிடமிருந்த குழந்தைகளை வாங்கிக் கொஞ்சினார் நமீதா.அவர் திக்கித் திக்கித் தமிழில் பேசியதைப் பார்த்த பெண்கள் சிரியோ சிரியென்றுசிரித்து மகிழ்ந்தனர். ஒரு மணி நேரம் குப்பத்து மக்களோடு சந்தோஷமாக பேசிமகிழ்ந்த நமீதா பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். நமீதா இருந்த அத்தனைநேரம் பெண்களும், குழந்தைகளும் மட்டும்தான் அவரை நெருங்கமுடிந்தது.ஆம்பளைங்க எல்லாம் தூரத்திலேயே தான் நிற்க வேண்டியதாப் போச்சு!

    By Staff
    |

    நெல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நமீதா, ஷகீலா உள்ளிட்ட கிளாமர்நடிகைகள் கலந்து கொள்ளும் இன்னிசை இரவு நிகழ்ச்சிக்கு பல்வேறு தமிழ்அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    திருநெல்வேலி பேட்டையில் சி.என்.சவுந்திரராஜன் அறக்கட்டளை என்ற தன்னார்வஅமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்பில் பள்ளிக்கூடம்கட்ட திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஏற்கனவே அரை ஏக்கர் நிலம்வாங்கப்பட்டுள்ளது.

    கட்டடம் கட்டத் தேவையான நிதியைத் திரட்ட திரைப்பட நடிகர், நடிகைகளை வைத்துஇன்னிசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளனர். நாளை இரவு இந்த நிகழ்ச்சிநடைபெறவுள்ளது.

    இதில் கலந்துகொள்ள நமீதா, ஷகீலா, பாபிலோனா, அபிநயஸ்ரீ, ஷர்மிளி என கிளாமர்நடிகைகளும், பின்னணிப் பாடகிகள் பி.சுசீலா, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, மம்தா, சுபாஉள்ளிட்டோரும் கலந்து கொள்வர் என விளம்பரப் படுத்தியுள்ளனர்.

    பள்ளிக்கூட கட்டட நிதிக்காக கவர்ச்சி நடிகைகளை வைத்து இன்னிசை நிகழ்ச்சிநடத்துவதற்கு நெல்லையைச் சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும். மாநகர காவல்துறைஆணையர் அனுமதி தரக் கூடாது என்று கோரி ஆணையருக்கும், மாவட்ட ஆ ட்சித்தலைவருக்கும் தமிழ் சான்றோர் பேரவை உள்ளிட்ட 7 தமிழ் அமைப்புகளின்நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

    மீறி அனுமதி தரப்பட்டால் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெறவும்திட்டமிடப்பட்டுள்ளது. இன்னிசை இரவுக்கு தடை வருவது ஒருபுறம் இருக்கட்டம்.நமீதா, ஒரு நல்ல காரியத்தை சமீபத்தில் செய்தார். சென்னையைச் சேர்ந்த கருணாலயா சுனாமியால் பாதித்த மக்களுக்காக பலஉதவிகளை செய்து வருகிறது.

    இந்த அமைப்பின் சார்பில் திருவொற்றியூரில் சுனாமி பாதித்த பலகை தொட்டிக்குப்பக்கத்தில் பெண்கள் மறறும் குழந்தைகளுக்காக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

    இதன் திறப்பு விழாவில் நமீதா கலந்து கொண்டு கழிப்பறைகளை திறந்து வைத்தார்.பின்னர் அவர்அங்கு கூடியிருந்தவர்களிடையே பேசுகையில், கழிப்பறைகளைநீங்கள்சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மறுபடியும் வந்து நான் எப்படிவைத்திருக்கிறீர்கள் என்பதைப் பார்ப்பேன்,

    சரியா என்று கொச்சைத் தமிழில் பேசினாலும் கொஞ்சும் விதத்தில் பேசினார் நமீதா.பின்னர், அங்கிருந்த பெண்கள், நமீதாவை ஆசையுடன் தொட்டுத் தொட்டுப் பேசினர்.அவர்களிடமிருந்த குழந்தைகளை வாங்கிக் கொஞ்சினார் நமீதா.

    அவர் திக்கித் திக்கித் தமிழில் பேசியதைப் பார்த்த பெண்கள் சிரியோ சிரியென்றுசிரித்து மகிழ்ந்தனர். ஒரு மணி நேரம் குப்பத்து மக்களோடு சந்தோஷமாக பேசிமகிழ்ந்த நமீதா பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். நமீதா இருந்த அத்தனைநேரம் பெண்களும், குழந்தைகளும் மட்டும்தான் அவரை நெருங்கமுடிந்தது.

    ஆம்பளைங்க எல்லாம் தூரத்திலேயே தான் நிற்க வேண்டியதாப் போச்சு!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X