நமீதாவின் இந்திப் படம் நம்ம நமீதா எப்போவா நடித்த இந்திப் படம் இப்போது வெளியாகப் போகிறதாம்.இந்திக்காரர்கள் ஒலக சினிமா எடுப்பவர்கள் ஆயிற்றே.. ஒரு படத்தை 4 வருசத்துக்காவது இழுத்து எடுத்து ரிலீஸ்செய்தால் தான் அங்கே டைரக்டருக்கு மரியாதை கிடைக்கும். சட் சடாரென படத்தை முடித்தால் அவரை மக்குமாதிரி தான் பார்ப்பார்கள்.ஆனால், தேசிய அளவில் மார்க்கெட் இருப்பதால் ரூ. 20 கோடியில் (இதான் சராசரி இந்திப்பட பட்ஜெட்)தயாராகும் படங்கள் 4 வருடம் கழித்து வந்தாலும் போட்ட காசை எடுத்துவிடுகின்றன.நாடு பூராவும் 2 வாரம் ஓடினாலே போட்ட காசைப் பார்த்துவிடலாம். இதனால் தான் கதை இருக்கிறதோஇல்லையோ, வெறும் சதையை வைத்தே ஏகத்துக்கும் படங்கள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. கிட்டத்தட்ட இதில் பாதி செலவில் தயாரிக்கப்படும் தமிழ், தெலுங்குப் படங்களுக்கு மார்க்கெட் சிறியது என்பதால்படம் 50 நாளாவது ஓடினால் தான் தயாரிப்பாளர் தலைக்கு குற்றலாலத் துண்டு விழுவது மிஞ்சும். இதனால்நம்மவர்கள் கதையிலும் தொழில்நுட்பத்திலும் வித்தியாசம் காட்ட விக்கித்துப் போகிறார்கள்.இப்போ எதுக்கு இவ்ளோ நீட்டமான பேக்கிரவுண்ட் இன்பர்மேசன் என்கிறீர்களா? விஷயம் இருக்கு.சுமார் 3 வருடங்களுக்கு முன் குஜராத்தில் மிஸ் மீரட் பட்டம் வென்ற கையோடு நமீதா சினிமாவில் வாய்ப்புத்தேடி மும்பைக்குப் போனார். அங்கு அவருக்கு பல அனுபவங்கள்.அதன் வாயிலாக கிடைத்தது ஒரு படம்.பியார் கா சக்கர்மே (காதலெனும் சிக்கலிலே மாதிரி- இது தான் நமக்குத் தெரிந்த மீனிங்) முகம் தெரியாத ஒரு மாடல் தான் ஹீரோ. இதில் முக்கிய வேடத்தல் ரிஷிகபூர் நடித்தார்.ஆனால், கதையில் நமீதாவுக்கு தான் முக்கிய வேலை தந்தார்கள். என்ன வேலை தருவார்கள், போதும் போதும்எனும் அளவுக்கு கவர்ச்சி விருந்து படைக்கும் வேலை தான். அதை திறம்பட செய்து முடித்தார் நமீதா.இத்தனைைக்கும் நமீதாவுக்கு இப்போது உள்ளதைப் போல அப்போது பாடி பில்ட் அப் கிடையாது.கொஞ்சம்போல ஒல்லி தான். ஆனாலும் அதிலேயே கலக்கி எடுத்தார் நமீதா.அதன் பிறகும் அந்தப் படத்தை எடுத்துக் கொண்டே இருந்தார்கள். முடிந்தபாடில்லை. இனிமேலும் பியார்காசக்கர்மேயிலேயே நடித்துக் கொண்டிருந்தால் அப்புறம் கிழவி ஆகிவிடுவோம் என்பதை உணர்ந்த நமீதா வேறுஇந்திப் படங்களில் வாய்ப்புத் தேடினார். எதுவும் சரிப்படாததால் தமிழ்ப் பக்கமாகக் கிளப்பி வந்துவிட்டார்.இந் நிலையில் பியார்கா சக்கர்மே படம் ஒருவழியாக எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதாம். இப்போது அந்தப் படம்ரீலீசுக்கு தயாராகிவிட்டது. தமிழ்நாட்டில் நமிதாவுக்கு உள்ள மவுசை அறிந்த தயாரிப்பாளர் இங்கும் அந்தப்படத்தை ரிலீஸ் செய்யப் போகிறாராம்.இது இப்படி என்றால் நமீதா நடித்த நீ வேணும்டா செல்லம் படம் மொத்தமே 47 நாட்களில் எடுத்துமுடிக்கப்பட்டதாம்.

By Staff

நம்ம நமீதா எப்போவா நடித்த இந்திப் படம் இப்போது வெளியாகப் போகிறதாம்.

இந்திக்காரர்கள் ஒலக சினிமா எடுப்பவர்கள் ஆயிற்றே.. ஒரு படத்தை 4 வருசத்துக்காவது இழுத்து எடுத்து ரிலீஸ்செய்தால் தான் அங்கே டைரக்டருக்கு மரியாதை கிடைக்கும். சட் சடாரென படத்தை முடித்தால் அவரை மக்குமாதிரி தான் பார்ப்பார்கள்.

ஆனால், தேசிய அளவில் மார்க்கெட் இருப்பதால் ரூ. 20 கோடியில் (இதான் சராசரி இந்திப்பட பட்ஜெட்)தயாராகும் படங்கள் 4 வருடம் கழித்து வந்தாலும் போட்ட காசை எடுத்துவிடுகின்றன.

நாடு பூராவும் 2 வாரம் ஓடினாலே போட்ட காசைப் பார்த்துவிடலாம். இதனால் தான் கதை இருக்கிறதோஇல்லையோ, வெறும் சதையை வைத்தே ஏகத்துக்கும் படங்கள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன.


கிட்டத்தட்ட இதில் பாதி செலவில் தயாரிக்கப்படும் தமிழ், தெலுங்குப் படங்களுக்கு மார்க்கெட் சிறியது என்பதால்படம் 50 நாளாவது ஓடினால் தான் தயாரிப்பாளர் தலைக்கு குற்றலாலத் துண்டு விழுவது மிஞ்சும். இதனால்நம்மவர்கள் கதையிலும் தொழில்நுட்பத்திலும் வித்தியாசம் காட்ட விக்கித்துப் போகிறார்கள்.

இப்போ எதுக்கு இவ்ளோ நீட்டமான பேக்கிரவுண்ட் இன்பர்மேசன் என்கிறீர்களா? விஷயம் இருக்கு.

சுமார் 3 வருடங்களுக்கு முன் குஜராத்தில் மிஸ் மீரட் பட்டம் வென்ற கையோடு நமீதா சினிமாவில் வாய்ப்புத்தேடி மும்பைக்குப் போனார். அங்கு அவருக்கு பல அனுபவங்கள்.

அதன் வாயிலாக கிடைத்தது ஒரு படம்.

பியார் கா சக்கர்மே (காதலெனும் சிக்கலிலே மாதிரி- இது தான் நமக்குத் தெரிந்த மீனிங்)


முகம் தெரியாத ஒரு மாடல் தான் ஹீரோ. இதில் முக்கிய வேடத்தல் ரிஷிகபூர் நடித்தார்.

ஆனால், கதையில் நமீதாவுக்கு தான் முக்கிய வேலை தந்தார்கள். என்ன வேலை தருவார்கள், போதும் போதும்எனும் அளவுக்கு கவர்ச்சி விருந்து படைக்கும் வேலை தான். அதை திறம்பட செய்து முடித்தார் நமீதா.

இத்தனைைக்கும் நமீதாவுக்கு இப்போது உள்ளதைப் போல அப்போது பாடி பில்ட் அப் கிடையாது.கொஞ்சம்போல ஒல்லி தான். ஆனாலும் அதிலேயே கலக்கி எடுத்தார் நமீதா.

அதன் பிறகும் அந்தப் படத்தை எடுத்துக் கொண்டே இருந்தார்கள். முடிந்தபாடில்லை. இனிமேலும் பியார்காசக்கர்மேயிலேயே நடித்துக் கொண்டிருந்தால் அப்புறம் கிழவி ஆகிவிடுவோம் என்பதை உணர்ந்த நமீதா வேறுஇந்திப் படங்களில் வாய்ப்புத் தேடினார்.


எதுவும் சரிப்படாததால் தமிழ்ப் பக்கமாகக் கிளப்பி வந்துவிட்டார்.

இந் நிலையில் பியார்கா சக்கர்மே படம் ஒருவழியாக எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதாம். இப்போது அந்தப் படம்ரீலீசுக்கு தயாராகிவிட்டது. தமிழ்நாட்டில் நமிதாவுக்கு உள்ள மவுசை அறிந்த தயாரிப்பாளர் இங்கும் அந்தப்படத்தை ரிலீஸ் செய்யப் போகிறாராம்.

இது இப்படி என்றால் நமீதா நடித்த நீ வேணும்டா செல்லம் படம் மொத்தமே 47 நாட்களில் எடுத்துமுடிக்கப்பட்டதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X