Don't Miss!
- News
வேலைவாய்ப்பு.. 5ஜி பயன்படுத்தி புது செயலிகள் உருவாக்க 100 நவீன லேப்கள்.. பட்ஜெட்டில் அறிவிப்பு!
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
Budget 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நமிதா குழந்தை மாதிரி.. சாக்லேட் திருடுவா - வளைகாப்பில் ஸ்ரீகாந்த் சொன்ன தகவல்
சென்னை: நடிகை நமிதாவின் வளைகாப்பு நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் திரை நட்சத்திரங்கள் பங்கேற்க சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் கலா மாஸ்டர், நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி, நடிகர் ஆரவ், இயக்குநர் பாக்கியராஜ் குடும்பத்தினர் எனப் பலர் கலந்து கொண்டு நமிதாவை வாழ்த்தினர்.

விஜே பார்வதி மேடையில் தொகுத்து வழங்க இந்நிகழ்ச்சி கலகலப்பாக நடைபெற்றது.
நமிதா குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் பேசுகையில், "நமிதாவைப் பல ஆண்டுகளாக எனக்கு தெரியும். அவளும், நானும் நிறைய படங்களில் பணியாற்றியிருக்கிறோம். நமிதா ஒரு குழந்தை மாதிரி. இப்போது அவளுக்கே ஒரு குழந்தை பிறக்கப் போகிறது. எல்லோரும் நமிதா ஒரு டாமினண்ட் பர்சன் என்று தான் நினைப்பார்கள். ஆனால் அவ ஒரு குழந்தை மாதிரி. அவ சாக்லேட் திருடி கூட நான் பார்த்திருக்கிறேன். ஒருமுறை லங்காவியில் ஒரு கிலோ சாக்லேட் வாங்கினாள். நமிதா என்ன இது ஒரு கிலோ சாக்லேட் ? என்று கேட்டேன். "ஆமா டா, சாப்பிட வேணும்ல?" என்று குழந்தை போல் சொன்னாள். அது தான் நமிதா" என ஸ்ரீகாந்த் தெரிவித்திருக்கிறார்.

ஆஜானுபாகுவான உயரம், அதற்கேற்ற வளைவு நெளிவோடு உடலமைப்பு என ஆரம்பக் காலங்களில் நமிதா சினிமாவில் அறிமுகமான போது, இளைஞர்களின் மனதை அப்படியே அலேக்காக அள்ளினார். ஒருகாலத்தில் சில்க் ஸ்மிதாவிற்காகவே ரசிகர்கள் படம் பார்க்க வந்தது போல், நமிதாவின் கவர்ச்சிக்காகவே ரசிகர்கள் படம் பார்க்க வரத் தொடங்கினர். 'ஏய்' திரைப்படத்தில் 'அர்ஜூனா.. அர்ஜூனா' பாடல் கவர்ச்சியின் உச்சம். அதுமட்டுமல்ல பொதுவெளிகளில் அனைவரையும், 'ஹாய் மச்சான்ஸ்' என குழந்தை போல் அவர் அழைப்பதும் டிரெண்ட் ஆனது அந்தக் காலத்தில். நமிதாவிற்கு கோயில் கட்டும் அளவிற்கும், அவரை கடத்திச் செல்லும் அளவிற்கும் அவரது ரசிகர்கள், வெறியர்களாக மாறினர்.

சாப்பாட்டுப் பிரியையான நமிதா, வகை வகையாக சாப்பிடக் கூடியவர். இதனால் அவரது உடல் எடை கூடத் தொடங்கியது. படங்களில் ஃபிட்டாக இருந்த நமிதா அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உப்பத் தொடங்கினார் என்றாலும், முதலில் அவரது உயரத்திற்கு அது அவ்வளவு விகாரமாய் தெரியவில்லை. அப்போதும் கவர்ச்சி அவருடன் ஒட்டிக் கொண்டே இருந்தது. ஆனால், தொடர்ந்து எடை கூடிக் கொண்டே போனார். ஒருகட்டத்தில், சரத்குமார், சத்யராஜ் போன்ற கட்டுமஸ்தான நடிகர்களே நமிதா பக்கத்தில் நின்றால் கோழிக்குஞ்சு போல் தெரியும் அளவிற்கு எடை போட்டார் நமிதா. விடாப்பிடியாக, சினிமாவும், அவரது கவர்ச்சிக்காகவே, போலீஸ் கதாப்பாத்திரம், வில்லி என கொடுத்துப் பார்த்தது. ஒருகட்டத்தில், நமிதாவின் மீதான கிரேஸ் ரசிகர்களிடத்தில் குறையவே அதோடு சினிமாவிலிருந்து விலகினார்.