»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எங்கள் அண்ணா படத்தில் விஜய்காந்துடன் நடித்து வரும் நமிதா ஏகத்துக்கும் எக்ஸ்போஸ் செய்து வருகிறார்.

ஆந்திராவைச் சேர்ந்த இந்தப் பெண் பார்க்க, கேப்டனுக்கு மகள் போல் இருந்தாலும், அவருடன் நெருக்கமானகாட்சிகளில் புகுந்து விளையாடி கவர்ச்சியில் ரகளை செய்து கொண்டிருக்கிறார்.

நெடுநெடுவென உயரம் கொண்ட நமிதாவுக்கு தமிழில் தான் இது புதிய படம். தெலுங்கில் சில படங்களில்நடித்துவிட்ட இவர், அங்கு போட்டி அதிகம் என்பதால் தமிழையே பாதுகாப்பான இடமாக நினைக்கிறார்.

இதனால் இங்கு நிரந்தர இடம் பிடித்துவிடுவதில் தீவிரமாக இருக்கும் நமிதாவுக்கு எந்த உடையும் பிரச்சனையில்லையாம்,எப்படிப்பட்ட காட்சியும் விசனமில்லையாம்.

பெண் வாசனையே ஆகாத ஒரு நடு வயதுக்காரரை இளம் பெண் ஒருத்தி மடக்குவது தான் கதையாம். கிட்டத்தட்டபம்மல்.கே.

சம்பந்தம் போல இருந்தாலும் அண்ணன்-தங்கச்சி பாசம் வேறு இருக்கிறதாம்.

முழுக்க நகைச்சுவையும்,விஜய்காந்த் என்பதால் சமமான அளவில் ஆக்ஷனும் கலந்து எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.

கேரளாவில் நடந்த வெளிப்புறப் படப்பிடிப்பிலும் வெட்கம் காட்டாமல் நமிதா கவர்ச்சி காட்ட, அதைப் பார்க்கபெரும் கூட்டம் கூடியது தனிக் கதை.

மலையாள இயக்குனர் சித்திக் இயக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கேப்டனே தான்.

இதனால் அவருக்குநன்றாகவே ஒத்துழைப்பு வழங்கினாராம் நமிதா.

இதையறிந்த சரத்குமார் தனது அடுத்த படத்தில் இவரை புக்செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

எங்கள் அண்ணா படத்தில் பிரபுதேவாவும் இருக்கிறார். அவருக்கு ஜோடி சொர்ணமால்யா.

படத்தில் நமீதா எப்படிக் கலக்கியிருக்கிறார் என்பதற்கு இந்த ஸ்டில்களே சாட்சி.

இவர் நிச்சயம் தமிழில் ஒருரவுண்டு வருவார் என்கிறார்கள் இவரது திறமையை அறிந்துள்ள கோடம்பாக்கம் குருவிகள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil