»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எங்கள் அண்ணாவில் விஜய்காந்துடன் கிளாமரில் தென்றலாய் வீசிய நமீதா ஏய் படத்தில் புயலாகிமாறி கவர்ச்சியில் களியாட்டம் போட்டு வருகிறார்.

மலையாளியான நமீதா மும்பையில் வளர்ந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

அங்கு ஏகப்பட்ட போட்டிக்கிடையே நமீதா நடித்துக் கொண்டிருந்த நிலையில் மலையாள இயக்குரானசித்திக், தான் இயக்கிய எங்கள் அண்ணாவில் இவரை ஹீரோயினாக்கினார்.

விஜய்காந்துக்கு நமீதா தந்த ஒத்துழைப்பு குறித்து அறிந்த சரத்குமார் தனது ஏய் படத்தில் அவரையேபுக் செய்தார்.

கேட்டதைவிட கூடுதலாக சில லகரங்களும் தரப்பட்டன.சிம்ரன் வகையராக்கள் காலி செய்துள்ள நிலையில் தமிழில் ஒரு இடத்தைப் பிடித்துவிடுவதில்தீவிரமாகிவிட்ட நமீதாவுக்கு இந்த இரண்டாவது சான்ஸ் லட்டு மாதிரி வந்து விழுந்தது.


இதனால் சரத்குமாருடன் படு நெருக்கமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

நமீதாவின் இந்த குஜால் பாடல் காட்சிகளில் பல மடங்கு அதிகமாகியிருக்கிறது.

இத்தனைக்கும் இவருக்கு ஒரு காதலன் இருப்பதும் அவரது பெயர் ஸ்டீபன் கபூர் என்பதும்உங்களுக்குத் தெரிந்தது தான்.

அவ்வப்போது இவரும் சூட்டிங் ஸ்பாட்டில் ஆஜராகிவிடுகிறார்.

சமீபத்தில் நீர் வீழ்ச்சியில் நடந்த ஏய் படத்தின் பாடல் காட்சியில் அதீத கவர்ச்சி காட்டிசரத்குமாரோடு, யூனிட்டையும் சூடாக்கியிருக்கிறார் நமீதா.

இந்த சூட்டிங் முடிந்த பின் காதலன்ஸ்டீபன் கபூருடன் அதே நீரில் குதித்து ஆட்டம் போட்டாராம்.

மாய்ந்து மாய்ந்து சொல்கிறார்கள்கோடம்பாக்கம் குருவிகள்.


கவர்ச்சியாலேயே தமிழில் எப்படியும் காலூன்றிவிட முடியும் என்ற நம்பிக்கைக்கு வந்துவிட்டநமீதா, சமீபத்தில் ஹோட்டல் வாசத்துக்கு முடிவு கட்டிவிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒருவீட்டை வாடகைக்குப் பிடித்துக் குடியேறியிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil