நமீதாவுக்கும் மன்றம்! திரிஷாவைத் தொடர்ந்து நமீதாவுக்கும் ரசிகர் மன்றம் ஆரம்பித்து விட்டார் தமிழ்ப்பெருங்குடி மக்கள்.ஒரு காலத்தில் குஷ்பு பைத்தியம் தமிழ் சினிமா ரசிகர்களை பிடித்து ஆட்டுஆட்டென்று ஆட்டியது. அவருக்குக் கோவில் கட்டும் அளவுக்கு ரசிகர்களின் ஆவல்எல்லை தாண்டி எகிறியது.குஷ்புவுக்குப் பிறகு தமிழ் நடிகைகள் யாருக்கும் பெரிய அளவில் கிரேஸ் இல்லை.சிம்ரனுக்கு ஒருவித ரசிகர் கூட்டம் இருந்தது. ஆனால் அது மிகப் பெரிய அளவில்விஸ்வரூபம் எடுப்பதற்குள் அவர் கல்யாணமாகி குழந்தையைப் பெற்றுக் கொண்டுசெட்டிலாகி விட்டார்.இப்போது திரிஷாவுக்கு ரசிகர்கள் கூட்டம், அதிலும் பெண்களிடையே கிரேஸ் ஜாஸ்திஉள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் சென்னையில் திரிஷாவுக்குரசிகைகள் சிலர் சேர்ந்து மன்றம் ஆரம்பித்துள்ளனர்.திரிஷாவின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடத்தி அசத்தி விட்டனர். இதைக்கேள்விப்பட்ட நமீதாவின் ரசிகர்களும் குஷியாக மன்றம் வைக்க ஆரம்பித்துள்ளனர்.முதல் கட்டமாக சென்னையில் நமீதாவிக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளனர்.இதன் தொடக்க விழாவுக்கு நமீதாவும் வந்து குத்துவிளக்கேற்றி மன்றத்தைத்தொடங்கி வைத்தார். இதேபோல தமிழகம் முழுவதும் 50 மன்றங்களை ஆரம்பிக்கப்போகிறார்களாம்.மன்றத் தொடக்க விழா முடிந்ததும் மயிலாப்பூரில் உள்ள அன்னை இல்லம் என்றஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்ற நமீதா, தனது கையால் தியோர்களுக்கு மதியஉணவைப் பரிமாறினார். அவர்களிடம் ஆசிர்வாதத்தையும் பெற்றுக் கொண்டார். சென்னையைத் தொடர்ந்து விரைவில் மற்ற ஊர்களிலும் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும்வேலையில் மன்ற நிர்வாகிகள் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு உதவியாக தனதுமேனேஜரையே நியமித்துள்ளார்.ரசிகர் மன்றத்தோடு நின்றால் நல்லது. குஷ்புவுக்குக் கட்டியது போல கோவில்கட்டாமல் இருந்தால் சரி!நமீதாவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைக் கேள்விப்பட்ட நடிகைமும்தாஜ், ஏற்கனவே தனக்கு ஆரம்பிக்கப்பட்ட ரசிகை மன்றத்தின் நடவடிக்கைகளைமுடுக்கி விட முடிவு செய்துள்ளாராம்.வழக்கமாக தனது பிறந்த நாளின்போது ரசிகர்கள், ரசிகைகளுக்கு பிரியாணி விருந்துஅளிப்பார் மும்தாஜ். இந்த ஆண்டு அதை பெரிய அளவில் நடத்திஅமர்க்களப்படுத்தப் போகிறாராம். நடிகருங்கோ ஜாக்கிரதை!

By Staff
திரிஷாவைத் தொடர்ந்து நமீதாவுக்கும் ரசிகர் மன்றம் ஆரம்பித்து விட்டார் தமிழ்ப்பெருங்குடி மக்கள்.

ஒரு காலத்தில் குஷ்பு பைத்தியம் தமிழ் சினிமா ரசிகர்களை பிடித்து ஆட்டுஆட்டென்று ஆட்டியது. அவருக்குக் கோவில் கட்டும் அளவுக்கு ரசிகர்களின் ஆவல்எல்லை தாண்டி எகிறியது.

குஷ்புவுக்குப் பிறகு தமிழ் நடிகைகள் யாருக்கும் பெரிய அளவில் கிரேஸ் இல்லை.சிம்ரனுக்கு ஒருவித ரசிகர் கூட்டம் இருந்தது. ஆனால் அது மிகப் பெரிய அளவில்விஸ்வரூபம் எடுப்பதற்குள் அவர் கல்யாணமாகி குழந்தையைப் பெற்றுக் கொண்டுசெட்டிலாகி விட்டார்.

இப்போது திரிஷாவுக்கு ரசிகர்கள் கூட்டம், அதிலும் பெண்களிடையே கிரேஸ் ஜாஸ்திஉள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் சென்னையில் திரிஷாவுக்குரசிகைகள் சிலர் சேர்ந்து மன்றம் ஆரம்பித்துள்ளனர்.

திரிஷாவின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடத்தி அசத்தி விட்டனர். இதைக்கேள்விப்பட்ட நமீதாவின் ரசிகர்களும் குஷியாக மன்றம் வைக்க ஆரம்பித்துள்ளனர்.முதல் கட்டமாக சென்னையில் நமீதாவிக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளனர்.

இதன் தொடக்க விழாவுக்கு நமீதாவும் வந்து குத்துவிளக்கேற்றி மன்றத்தைத்தொடங்கி வைத்தார். இதேபோல தமிழகம் முழுவதும் 50 மன்றங்களை ஆரம்பிக்கப்போகிறார்களாம்.

மன்றத் தொடக்க விழா முடிந்ததும் மயிலாப்பூரில் உள்ள அன்னை இல்லம் என்றஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்ற நமீதா, தனது கையால் தியோர்களுக்கு மதியஉணவைப் பரிமாறினார்.

அவர்களிடம் ஆசிர்வாதத்தையும் பெற்றுக் கொண்டார்.

சென்னையைத் தொடர்ந்து விரைவில் மற்ற ஊர்களிலும் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும்வேலையில் மன்ற நிர்வாகிகள் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு உதவியாக தனதுமேனேஜரையே நியமித்துள்ளார்.

ரசிகர் மன்றத்தோடு நின்றால் நல்லது. குஷ்புவுக்குக் கட்டியது போல கோவில்கட்டாமல் இருந்தால் சரி!

நமீதாவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைக் கேள்விப்பட்ட நடிகைமும்தாஜ், ஏற்கனவே தனக்கு ஆரம்பிக்கப்பட்ட ரசிகை மன்றத்தின் நடவடிக்கைகளைமுடுக்கி விட முடிவு செய்துள்ளாராம்.

வழக்கமாக தனது பிறந்த நாளின்போது ரசிகர்கள், ரசிகைகளுக்கு பிரியாணி விருந்துஅளிப்பார் மும்தாஜ். இந்த ஆண்டு அதை பெரிய அளவில் நடத்திஅமர்க்களப்படுத்தப் போகிறாராம்.

நடிகருங்கோ ஜாக்கிரதை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X