»   »  ஒரு படமும் 9 மாம்பழமும் ஒரு மல்கோவா மாம்பழம் கையில் கிடைத்தாலே நம்ம ஆட்களுக்கு வாயில் எச்சில் ஊறும், அதே கையில் 9 மாம்பழத்தைத்திணித்து நன்னா சாப்பிடுங்கோன்னு சொன்னா எப்படி இருக்கும்?அந்தக் கதைதான் ஒரு நடிகையின் டைரிக் குறிப்பு என்ற படத்தில் நடக்கப் போகிறது. ஒரு நமீதாவே, கோலிவுட்டைகிறங்கடித்து வரும் வேளையில், ஒரு நடிகையின் டைரிக் குறிப்பு படத்தில் நமீதா 9 கலக்கலான வேடங்களில் வந்து ரசிகர்களைகவர்ச்சி கடலில் மூழ்கடிக்கப் போகிறாராம்.ரசிர்களுக்கு இந்த இனிய விருந்தை கொடுக்கப் போவது இயக்குனர் பாபுகணேஷ். இவர் இயக்கி வெளியான படங்களை விடபூஜை போட்டு பாதியிலேயே கிடப்பில் போடப்பட்ட படங்களின் எண்ணிக்கைதான் அதிகம். அந்த அளவுக்கு படு பிசியானஇயக்குனர் பாபு கணேஷ்.ஊதுவத்தி, பூ, பழம்.. கூடவே ஒரு குத்துவிளக்கும், தீப்பெட்டியும் இருந்தால் போதும் ஒரு படத்துக்கு பூஜையைப்போட்டுவிடுவார்.பல படங்களுக்கு பூஜை போட்டுள்ள பாபு கணேஷ், முன்பு மும்தாஜ் படு பிசியாக இருந்தபோது அவரை வைத்து ஒரு படத்திற்குப்பூஜை போட்டார். படப்பிடிப்பும் சில நாட்கள் நடந்தது. ஆனால் பாபு கணேஷின் லொள்ளு தாங்க முடியாததால் மும்தாஜ்பாதியிலேயே கழன்று கொண்டார். அத்தோடு காலி அந்தப் படம். மும்தாஜ் கொடுத்த கடுக்காயால் கடுப்பாகிப் போன பாபு கணேஷ், துண்டு துக்கடா, நீல வண்ண படங்களில் நடித்து வந்த ஒருஅழகியைக் கூட்டி வந்து அவருக்கு கும்மென கும்தாஜ் என பெயரிட்டு களத்தில் இறக்கினார்.மும்தாஜ் அளவுக்கு உடம்பு இருந்ததே ஒழிய மும்தாஜின் கட்டழகுக்கு பக்கத்தில் கூட வர முடியாததால் கும்தாஜ், காற்றுப் போனபலூனாக புஸ் ஆனார்.இப்படி தமிழ் சினிமாவுக்காக பல வகையிலும் பாடுபட்டு வரும் பாபு கணேஷ், பிளஸ் கூட்டணி என்ற பெயரில் ஒரு படத்தைத்தயாரித்துள்ளார். இதிலும் கும்தாஜ் உள்ளார். அத்தோடு ரஜினி, கமல், டி.ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற பிரபலங்களின் உருவஒற்றுமை உள்ளவர்களைப் போட்டு மசாலா பால் கணக்காக படத்தைத் தயாரித்துள்ளார்.இந்தப் படத்தைத் தொடர்ந்து நமீதாவை வைத்து ஒரு நடிகையின் டைரிக் குறிப்பு என்ற புதிய படத்திற்குப் பூஜை போடுகிறார்பாபு கணேஷ். இதில் பெரிய விசேஷம் என்னவென்றால், நமீதா 9 வேடங்களில் வருகிறாராம். நமீதாவை மையமாக வைத்துஇந்தப் படம் தயாராகிறது.நடிகையாக நமீதா நடிக்கிறார். அவர் சந்திக்கும் போராட்டங்கள், சவால்களை சித்தரிக்கும் விதமாக கதையைஅமைத்திருக்கிறாராம் பாபு கணேஷ். நடிகை வேடம் என்பதால் 9 விதமான கேரக்டர்களில் அசத்தப் போகிறாராம் நமீதா.ஒவ்வொரு நமீதாவுக்கும் இன்னொரு நமீதாவுடன் கிளாமர் போட்டி நடக்கப் போகிறதாம்.நமீதா கிளாமராக, 9 வேடம் என்ன, 9,000 வேடத்தில் நடித்தாலும் ரசிகர்களுக்கு திகட்டவே திகட்டாது. எனவே அவர் எத்தனைவேடத்தில் நடிக்கிறார் என்பது மேட்டரே இல்லை, அவர் இருக்கிறார் என்பதுதான் அந்தப் படத்தின் பிளஸ் பாயிண்ட் என்கிறார்ஒரு குசும்பு தயாரிப்பாளர்.ஒரு வேளை இந்தப் படம் முழுமையாக எடுக்கப்பட்டு, திரைக்கு வந்து விட்டால், அதிகபட்ச வேடங்களில் நடித்த ஒரே நடிகைஎன்ற பெருமை நமீதாவுக்குக் கிடைக்கும். சொன்ன படத்தை சொன்னபடி எடுத்த பெருமை பாபு கணேஷுக்கும் கிடைக்கும்.ஒரே படத்தில் 9 நமீதா, நினைச்சாலே கிக்குதே...

ஒரு படமும் 9 மாம்பழமும் ஒரு மல்கோவா மாம்பழம் கையில் கிடைத்தாலே நம்ம ஆட்களுக்கு வாயில் எச்சில் ஊறும், அதே கையில் 9 மாம்பழத்தைத்திணித்து நன்னா சாப்பிடுங்கோன்னு சொன்னா எப்படி இருக்கும்?அந்தக் கதைதான் ஒரு நடிகையின் டைரிக் குறிப்பு என்ற படத்தில் நடக்கப் போகிறது. ஒரு நமீதாவே, கோலிவுட்டைகிறங்கடித்து வரும் வேளையில், ஒரு நடிகையின் டைரிக் குறிப்பு படத்தில் நமீதா 9 கலக்கலான வேடங்களில் வந்து ரசிகர்களைகவர்ச்சி கடலில் மூழ்கடிக்கப் போகிறாராம்.ரசிர்களுக்கு இந்த இனிய விருந்தை கொடுக்கப் போவது இயக்குனர் பாபுகணேஷ். இவர் இயக்கி வெளியான படங்களை விடபூஜை போட்டு பாதியிலேயே கிடப்பில் போடப்பட்ட படங்களின் எண்ணிக்கைதான் அதிகம். அந்த அளவுக்கு படு பிசியானஇயக்குனர் பாபு கணேஷ்.ஊதுவத்தி, பூ, பழம்.. கூடவே ஒரு குத்துவிளக்கும், தீப்பெட்டியும் இருந்தால் போதும் ஒரு படத்துக்கு பூஜையைப்போட்டுவிடுவார்.பல படங்களுக்கு பூஜை போட்டுள்ள பாபு கணேஷ், முன்பு மும்தாஜ் படு பிசியாக இருந்தபோது அவரை வைத்து ஒரு படத்திற்குப்பூஜை போட்டார். படப்பிடிப்பும் சில நாட்கள் நடந்தது. ஆனால் பாபு கணேஷின் லொள்ளு தாங்க முடியாததால் மும்தாஜ்பாதியிலேயே கழன்று கொண்டார். அத்தோடு காலி அந்தப் படம். மும்தாஜ் கொடுத்த கடுக்காயால் கடுப்பாகிப் போன பாபு கணேஷ், துண்டு துக்கடா, நீல வண்ண படங்களில் நடித்து வந்த ஒருஅழகியைக் கூட்டி வந்து அவருக்கு கும்மென கும்தாஜ் என பெயரிட்டு களத்தில் இறக்கினார்.மும்தாஜ் அளவுக்கு உடம்பு இருந்ததே ஒழிய மும்தாஜின் கட்டழகுக்கு பக்கத்தில் கூட வர முடியாததால் கும்தாஜ், காற்றுப் போனபலூனாக புஸ் ஆனார்.இப்படி தமிழ் சினிமாவுக்காக பல வகையிலும் பாடுபட்டு வரும் பாபு கணேஷ், பிளஸ் கூட்டணி என்ற பெயரில் ஒரு படத்தைத்தயாரித்துள்ளார். இதிலும் கும்தாஜ் உள்ளார். அத்தோடு ரஜினி, கமல், டி.ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற பிரபலங்களின் உருவஒற்றுமை உள்ளவர்களைப் போட்டு மசாலா பால் கணக்காக படத்தைத் தயாரித்துள்ளார்.இந்தப் படத்தைத் தொடர்ந்து நமீதாவை வைத்து ஒரு நடிகையின் டைரிக் குறிப்பு என்ற புதிய படத்திற்குப் பூஜை போடுகிறார்பாபு கணேஷ். இதில் பெரிய விசேஷம் என்னவென்றால், நமீதா 9 வேடங்களில் வருகிறாராம். நமீதாவை மையமாக வைத்துஇந்தப் படம் தயாராகிறது.நடிகையாக நமீதா நடிக்கிறார். அவர் சந்திக்கும் போராட்டங்கள், சவால்களை சித்தரிக்கும் விதமாக கதையைஅமைத்திருக்கிறாராம் பாபு கணேஷ். நடிகை வேடம் என்பதால் 9 விதமான கேரக்டர்களில் அசத்தப் போகிறாராம் நமீதா.ஒவ்வொரு நமீதாவுக்கும் இன்னொரு நமீதாவுடன் கிளாமர் போட்டி நடக்கப் போகிறதாம்.நமீதா கிளாமராக, 9 வேடம் என்ன, 9,000 வேடத்தில் நடித்தாலும் ரசிகர்களுக்கு திகட்டவே திகட்டாது. எனவே அவர் எத்தனைவேடத்தில் நடிக்கிறார் என்பது மேட்டரே இல்லை, அவர் இருக்கிறார் என்பதுதான் அந்தப் படத்தின் பிளஸ் பாயிண்ட் என்கிறார்ஒரு குசும்பு தயாரிப்பாளர்.ஒரு வேளை இந்தப் படம் முழுமையாக எடுக்கப்பட்டு, திரைக்கு வந்து விட்டால், அதிகபட்ச வேடங்களில் நடித்த ஒரே நடிகைஎன்ற பெருமை நமீதாவுக்குக் கிடைக்கும். சொன்ன படத்தை சொன்னபடி எடுத்த பெருமை பாபு கணேஷுக்கும் கிடைக்கும்.ஒரே படத்தில் 9 நமீதா, நினைச்சாலே கிக்குதே...

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு மல்கோவா மாம்பழம் கையில் கிடைத்தாலே நம்ம ஆட்களுக்கு வாயில் எச்சில் ஊறும், அதே கையில் 9 மாம்பழத்தைத்திணித்து நன்னா சாப்பிடுங்கோன்னு சொன்னா எப்படி இருக்கும்?

அந்தக் கதைதான் ஒரு நடிகையின் டைரிக் குறிப்பு என்ற படத்தில் நடக்கப் போகிறது. ஒரு நமீதாவே, கோலிவுட்டைகிறங்கடித்து வரும் வேளையில், ஒரு நடிகையின் டைரிக் குறிப்பு படத்தில் நமீதா 9 கலக்கலான வேடங்களில் வந்து ரசிகர்களைகவர்ச்சி கடலில் மூழ்கடிக்கப் போகிறாராம்.

ரசிர்களுக்கு இந்த இனிய விருந்தை கொடுக்கப் போவது இயக்குனர் பாபுகணேஷ். இவர் இயக்கி வெளியான படங்களை விடபூஜை போட்டு பாதியிலேயே கிடப்பில் போடப்பட்ட படங்களின் எண்ணிக்கைதான் அதிகம். அந்த அளவுக்கு படு பிசியானஇயக்குனர் பாபு கணேஷ்.


ஊதுவத்தி, பூ, பழம்.. கூடவே ஒரு குத்துவிளக்கும், தீப்பெட்டியும் இருந்தால் போதும் ஒரு படத்துக்கு பூஜையைப்போட்டுவிடுவார்.

பல படங்களுக்கு பூஜை போட்டுள்ள பாபு கணேஷ், முன்பு மும்தாஜ் படு பிசியாக இருந்தபோது அவரை வைத்து ஒரு படத்திற்குப்பூஜை போட்டார். படப்பிடிப்பும் சில நாட்கள் நடந்தது. ஆனால் பாபு கணேஷின் லொள்ளு தாங்க முடியாததால் மும்தாஜ்பாதியிலேயே கழன்று கொண்டார். அத்தோடு காலி அந்தப் படம்.

மும்தாஜ் கொடுத்த கடுக்காயால் கடுப்பாகிப் போன பாபு கணேஷ், துண்டு துக்கடா, நீல வண்ண படங்களில் நடித்து வந்த ஒருஅழகியைக் கூட்டி வந்து அவருக்கு கும்மென கும்தாஜ் என பெயரிட்டு களத்தில் இறக்கினார்.


மும்தாஜ் அளவுக்கு உடம்பு இருந்ததே ஒழிய மும்தாஜின் கட்டழகுக்கு பக்கத்தில் கூட வர முடியாததால் கும்தாஜ், காற்றுப் போனபலூனாக புஸ் ஆனார்.

இப்படி தமிழ் சினிமாவுக்காக பல வகையிலும் பாடுபட்டு வரும் பாபு கணேஷ், பிளஸ் கூட்டணி என்ற பெயரில் ஒரு படத்தைத்தயாரித்துள்ளார். இதிலும் கும்தாஜ் உள்ளார். அத்தோடு ரஜினி, கமல், டி.ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற பிரபலங்களின் உருவஒற்றுமை உள்ளவர்களைப் போட்டு மசாலா பால் கணக்காக படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நமீதாவை வைத்து ஒரு நடிகையின் டைரிக் குறிப்பு என்ற புதிய படத்திற்குப் பூஜை போடுகிறார்பாபு கணேஷ். இதில் பெரிய விசேஷம் என்னவென்றால், நமீதா 9 வேடங்களில் வருகிறாராம். நமீதாவை மையமாக வைத்துஇந்தப் படம் தயாராகிறது.


நடிகையாக நமீதா நடிக்கிறார். அவர் சந்திக்கும் போராட்டங்கள், சவால்களை சித்தரிக்கும் விதமாக கதையைஅமைத்திருக்கிறாராம் பாபு கணேஷ். நடிகை வேடம் என்பதால் 9 விதமான கேரக்டர்களில் அசத்தப் போகிறாராம் நமீதா.

ஒவ்வொரு நமீதாவுக்கும் இன்னொரு நமீதாவுடன் கிளாமர் போட்டி நடக்கப் போகிறதாம்.

நமீதா கிளாமராக, 9 வேடம் என்ன, 9,000 வேடத்தில் நடித்தாலும் ரசிகர்களுக்கு திகட்டவே திகட்டாது. எனவே அவர் எத்தனைவேடத்தில் நடிக்கிறார் என்பது மேட்டரே இல்லை, அவர் இருக்கிறார் என்பதுதான் அந்தப் படத்தின் பிளஸ் பாயிண்ட் என்கிறார்ஒரு குசும்பு தயாரிப்பாளர்.


ஒரு வேளை இந்தப் படம் முழுமையாக எடுக்கப்பட்டு, திரைக்கு வந்து விட்டால், அதிகபட்ச வேடங்களில் நடித்த ஒரே நடிகைஎன்ற பெருமை நமீதாவுக்குக் கிடைக்கும். சொன்ன படத்தை சொன்னபடி எடுத்த பெருமை பாபு கணேஷுக்கும் கிடைக்கும்.

ஒரே படத்தில் 9 நமீதா, நினைச்சாலே கிக்குதே...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil