நடிகரின் கண்ணீர் கதை: பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த அப்பா.. நொறுங்கிப்போன கரண்!
சென்னை: ஹீரோ, ஹீரோயின், நகைச்சுவை நடிகர்களுக்கும் சினிமாவில் இருக்கும் மவுசு துணை கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கு இருப்பதில்லை. ஆனால், இன்றைய காலகட்டத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கு என்று தனி மரியாதையே உருவாகி இருக்கிறது. ஆனால், அந்த காலகட்டத்திலேயே துணை கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகர் கரண்.
நடிகர் கரண் 1969 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவர், தமிழ்நாட்டுல் பிறந்து இருந்தாலும் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக எழுவதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமான நடித்துக் கொண்டிருந்த கரண், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். ஆனால், அந்த படத்தில் கடைசி சில காட்சிகளில் மட்டுமே வந்ததால் இவரின் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் அளவுக்கு அந்த படம் இல்லை. இதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களை நடிந்து வந்த கரணுக்கு கமல் நடித்த நம்மவர் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படமாகவே அமைந்தது. அந்த திரைப்படத்தில் கமலஹாசனுக்கு இணையாக அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் நடிகர் கரண்.

நடிகர் கரண்: அஜித்துடன் காதல் கோட்டை, விஜய்யுடன் லவ் டுடே, பிரசாத்துடன் கண்ணெதிரே தோன்றினாள் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நண்பனாக, இரண்டாவது ஹீரோவாக, வில்லனாக, குணசித்திர கதாபாத்திரம் என பல ரோலில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு கொக்கி என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார் நடிகர் கரண். அதைத்தொடர்ந்து கருப்பசாமி குத்தகைதாரர், காத்தவராயன், கனகவேல் காக்க, தம்பி வெட்டோத்தி சுந்தரம், கந்தா, உச்சத்துல சிவா போன்ற திரைப்படங்களில் அடுத்தடுத்து ஹீரோவாக நடித்து வந்தார். 2016 ஆம் ஆண்டு உச்சத்தில் சிவா என்கிற திரைப்படம் தான் கரண் நடித்த கடைசி திரைப்படம் ஆகும். அந்த திரைப்படத்திற்கு பிறகு கரணை சினிமாவில் பார்க்கவே முடியவில்லை.
அப்பாவின் மரணம்: இதனால், நடிகர் கரண் குறித்து பல விதமான சர்ச்சைகள் இணையத்தில் வலம் வந்தன, அதற்கு எல்லாம் பதில் எதுவும் அளிக்காமல் அமைதியாக இருந்த கரண் கடந்த சில ஆண்டுக்கு முன் பேட்டி அளித்து இருந்தார். அதில், தன்னுடைய அப்பாவின் மரணம் என்னை மிகவும் பாதித்து விட்டது . யாருக்கும் இப்படி ஒரு மரணம் வரக்கூடாது என்று கண்ணீர் மல்க பேசி இருந்தார். கோயம்பேட்டில் ஒரு வீட்டில் என்னுடைய அப்பா தனியாக வசித்து வந்தார். இரண்டு நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை, வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடைத்து அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தனர்.
அதன் பிறகு காவலர்கள் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கீழே விழுந்த நிலையில் அப்பா பிணமாக கிடத்துள்ளார். அதன் பிறகு தான் எனக்கு தகவல் கிடைத்தது. அப்பா அப்படி ஒருநிலையில் பார்த்த பிறகு நான் மிகவும் உடைந்துவிட்டேன். அப்பா எப்படி இருந்தார். மரணத்திற்கான காரணம் என்ன என இதுவரை எனக்கு தெரியவில்லை. மரணம் என்பது அனைவருக்கும் நிச்சயம், வரும் ஆனால், இப்படி ஒரு கொடூரமான மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடிவில்லை என மிகவும் வருத்தப்பட்டு அந்த பேட்டியில் கரண் பேசி இருந்தார். அதன் பிறகு நடிகர் கரண் எதற்கும் பேட்டி அளிக்கவில்லை. மொத்தமாகவே சினிமாவை விட்டு சென்றுவிட்டார்.


Click it and Unblock the Notifications











