Balakrishna Net Worth: 65 வயதிலும் ராஜா மாதிரி வாழும் பாலகிருஷ்ணா.. இத்தனை கோடி சொத்து இருக்கா?

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி. ராமராவின் மகனான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 65வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. காட் ஆஃப் மாஸஸ் என பாலகிருஷ்ணாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை வெளியான அகண்டா 2 டீசர் இணையத்தை அலற விட்டுக் கொண்டிருக்கிறது.

கிரைண்டர், மிக்ஸி என அகண்டா 2 டீசரில் கழுத்தில் சூலத்தை வைத்துக் கொண்டு எதிரிகளை கொன்று குவிக்கும் காட்சிகளை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

Nandamuri Balakrishna turns 65 today here we look about his Net Worth and Assets
Photo Credit:

65 வயதாகும் பாலகிருஷ்ணா கைவசம் உள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல்களும், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும் அவர் வைத்திருக்கும் தகவல் குறித்தும் இங்கே பார்க்கலாம் வாங்க..

சென்னையில் பிறந்தவர்: டோலிவுட் திரையுலகின் பல முன்னணி நடிகர்களும் சென்னையில் பிறந்துள்ளனர். அனைவருக்கும் தமிழ் மொழியும் நன்றாகவே தெரியும். அந்த காலத்தில் சென்னையில் தான் அதிகப்படியான படப்பிடிப்பு ஸ்டூடியோக்கள் இருந்த நிலையில், தெலுங்கு நடிகர்கள் சென்னையிலேயே அதிகம் வசித்துள்ளனர். என்.டி. ராமாராவுக்கு மகனாக 1960ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி பிறந்தார். இன்று தனது 65வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு நடிகர் அஜித் குமாருக்கும் பாலகிருஷ்ணாவுக்கும் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாலகிருஷ்ணா குடும்பம்: 1982ம் ஆண்டு வசுந்தரா தேவி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட பாலகிருஷ்ணாவுக்கு தேஜஸ்வினி நந்தமுரி, நரா பிராமினி மற்றும் மோக்‌ஷக்னா தேஜா என 3 குழந்தைகள் உள்ளனர். ஹைதராபாத்தின் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் மிகப்பெரிய மேன்சன் பாலகிருஷ்ணாவுக்கு சொந்தமாக உள்ளது. மேலும், பல இடங்களில் நிலங்களும், பண்ணை வீடுகளும் உள்ளன.

Nandamuri Balakrishna turns 65 today here we look about his Net Worth and Assets
Photo Credit:

பாலகிருஷ்ணா சம்பளம்: வீர சிம்ஹா ரெட்டி படத்துக்கு 12 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்த பாலகிருஷ்ணா அகண்டா 2 படத்துக்கு அதிகப்படியாக 30 கோடி ரூபாயாக தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். அகண்டா முதல் பாகம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இந்த ஆண்டு வெளியான தாகு மகராஜ் திரைப்படமும் அவருக்கு 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய படமாக அமைந்தது. இந்நிலையில், அதிரடியாக தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.

400 கோடி சொத்து: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் பாலையாவுக்கு ஒட்டுமொத்தமாக 430 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அவரிடம் 6 கிலோ அளவுக்கு தங்க நகைகளும், 156 கிலோ வெள்ளியும், 580 காரட் வைரமும் சொத்தாக இருப்பதாக தெலுங்கு மீடியாக்கள் தகவல் தெரிவித்துள்ளன.

குவியும் வாழ்த்துகள்: பாலகிருஷ்ணா மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்தாலும், அவருக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு தசராவுக்கு பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 தாண்டவம் தான் என்கின்றனர். ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்திலும் பாலகிருஷ்ணா நடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X