»   »  கோழிக்கோட்டில் நந்தனா கல்யாணம்! இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜுக்கும், நடிகை நந்தனாவுக்கும் நவம்பர் 19ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் திருமணம் நடைபெறவுள்ளது.தாஜ்மஹால் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் மனோஜ். அதேபோல சக்ஸஸ் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நந்தனா. இருவரும் தனித்தனியாக சில படங்களில் நடித்துள்ளனர்.இருவரும் இணைந்து சாதுர்யன் என்ற படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்தது. திருமணம் செய்ய முடிவெடுத்தனர். முடிவை தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தபோது, இரு தரப்பிலுமே ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது.ஆனாலும் மனோஜும், நந்தனாவும் உறுதியாக இருந்ததால் இரு வீட்டாரும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டனர். இதையடுத்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது அடுத்த மாதம் 19ம் தேதி காலை 11 மணிக்கு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் இரு குடும்பத்தினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மனோஜ் தரப்பில் பாரதிராஜா, அவரது மனைவி சந்திரலீலா ஆகியோர் திருமண ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.

கோழிக்கோட்டில் நந்தனா கல்யாணம்! இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜுக்கும், நடிகை நந்தனாவுக்கும் நவம்பர் 19ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் திருமணம் நடைபெறவுள்ளது.தாஜ்மஹால் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் மனோஜ். அதேபோல சக்ஸஸ் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நந்தனா. இருவரும் தனித்தனியாக சில படங்களில் நடித்துள்ளனர்.இருவரும் இணைந்து சாதுர்யன் என்ற படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்தது. திருமணம் செய்ய முடிவெடுத்தனர். முடிவை தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தபோது, இரு தரப்பிலுமே ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது.ஆனாலும் மனோஜும், நந்தனாவும் உறுதியாக இருந்ததால் இரு வீட்டாரும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டனர். இதையடுத்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது அடுத்த மாதம் 19ம் தேதி காலை 11 மணிக்கு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் இரு குடும்பத்தினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மனோஜ் தரப்பில் பாரதிராஜா, அவரது மனைவி சந்திரலீலா ஆகியோர் திருமண ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜுக்கும், நடிகை நந்தனாவுக்கும் நவம்பர் 19ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் திருமணம் நடைபெறவுள்ளது.

தாஜ்மஹால் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் மனோஜ். அதேபோல சக்ஸஸ் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நந்தனா. இருவரும் தனித்தனியாக சில படங்களில் நடித்துள்ளனர்.

இருவரும் இணைந்து சாதுர்யன் என்ற படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்தது. திருமணம் செய்ய முடிவெடுத்தனர். முடிவை தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தபோது, இரு தரப்பிலுமே ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனாலும் மனோஜும், நந்தனாவும் உறுதியாக இருந்ததால் இரு வீட்டாரும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டனர். இதையடுத்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

தற்போது அடுத்த மாதம் 19ம் தேதி காலை 11 மணிக்கு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் இரு குடும்பத்தினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மனோஜ் தரப்பில் பாரதிராஜா, அவரது மனைவி சந்திரலீலா ஆகியோர் திருமண ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil