நந்தனா.. அபர்ணா.. அர்ச்சனா.. முதல் படம் போணியாகாவிட்டாலும் இப்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நந்தனா."சக்ஸஸ் என்ற உருப்படாத படத்தில் சிவாஜியின் பேரன் துஷ்யந்த்துடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் தான் இந்த கேரளத்துக் குட்டிநந்தனா. முதல் படமே போணியாகாததால் வெறுத்துப் போன நந்தனா, சிறிது காலம் கோலிவுட்டை சுற்றி சுற்றி வந்து பார்த்தார்.ஒன்றும் தேறவில்லை.இதனால் அடுத்த வண்டியைப் பிடித்து மலையாள மண்ணிலேயே சேபாக லேண்ட் ஆனார். அங்கு துக்கடா வேடங்கள் மட்டுமேகிடைத்தன.இதனால் கேரளத்தில் இருந்தபடியே சென்னையில் ஒரு மீடியேட்டரைப் போட்டு வாய்ப்பு பிடிக்கும் வேலையை ஆரம்பித்தார்.இந்த டெக்னிக் ரொம்பவே உதவிவிட்டது நந்தனாவுக்கு.அவரே எதிர்பாராதவிதமாக அடுத்தடுத்து படங்கள் புக்காகிவிட்டன.இப்போது ஒரே நேரத்தில் "கலிங்கா, "உன்னைக் கண்டேனடி, "ஏபிசிடி என 3 படங்களில் நடித்து வருகிறார்.கலிங்காவில் பாலாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஒரு ரெளடியின் வாழ்வில் குறுக்கிடும் பிளஸ் டூ மாணவியாக இவர் நடிக்கிறார்.புதுமுக இயக்குனரான ராம் பிரபா டைரக்ட் செய்யும் இந்தப் படத்திற்காக சென்னை காசி மேடு கடற்கரையில் பல லட்சம் மதிப்பில்செட் போட்டிருந்தார்கள்.ஆனால் அந்த செட்டை சுனாமி அடித்துக் கொண்டு போனதால் நீலாங்கரையில் மீண்டும் செட் போட்டு எடுத்துள்ளனர்."ஏபிசிடியில் ஷாமுடன் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நந்தனா தவிர ஸ்னேகா, அபர்ணா ஆகியோரும் உள்ளனர்.இந்தப் படத்தை சிட்டிசன் புகழ் ஷரவண சுப்பையா இயக்குகிறார்.அது என்ன "ஏபிசிடி என்று டைரக்டரிடம் கேட்டால், பெயரிலேயே ஒரு புதுமை இருக்கிறதல்லவா? அது படத்திலும் இருக்கும்என்று பொடி வைத்து பேசினார். காதல்.. ஒரு சுகமான அனுபவம். பலருக்கு பொழுதுபோக்கு. சிலருக்கு சுவாசம்.ஒருவருக்கு ஒருத்தி மீதும், ஒருத்திக்கு ஒருவர் மீதும் காதல் வரும் என்பது தான் எழுதப்படாத மரபு. ஆனால் இக்கதையின்நாயகன் மூன்று பெண்கள் மீது உயிருக்குயிராய் காதல் கொள்கிறான். மூன்று பெண்களும் நாயகனை மனதார காதலிக்கிறார்கள்.இவை நடைமுறைக்கு சாத்தியமா, இல்லையா என்பதை சுவையாக, ஜனரஞ்சகமாக, கலாச்சார, நாகரீக மரபுகள் மீறாமல்அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இயக்கி வருவதாக மூச்சு விடாமல் கூறி முடித்தார் இயக்குனர்.புதிய படங்கள் குறித்து நந்தனாவிடம் கேட்டபோது, இந்தப் படத்தில் பாரதி என்ற கேரக்டரில் நான் நடிக்கிறேன். அருமையானரோல் இது. நிச்சயம் நான் பேசப்படுவேன். அதேபோல "உன்னைக் கண்டேனடியில் இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். இதுவும்பிரமாதமாக பேசப்படும். "கலிங்காவிலும் எனக்கு நல்ல வேடம்தான்.என்னைப் பொருத்தவரை நல்ல ரோல்கள் கிடைக்க வேண்டும். அது கிளாமரா, ஹோம்லியா என்பது பிரச்சினையில்லை என்றார்.கூடவே, உங்களுக்குத் தெரியுமா? எனது உதடுகள்தான் ரொம்பக் கவர்ச்சியானவை என்று பலபேர் என்னிடம் கூறியுள்ளார்கள்.எனவே எனக்கும் எனது உதடுகள்தான் ரொம்பப் பிடிக்கும். ஐ லவ் மை லிப்ஸ்.. என்று அவராகவே கூறினார்.முதல் படத்தில் தமிழ் பேச முடியாமல் ததிங்கினத்தோம் போட்ட நந்தனா இப்போது நன்றாகவே தமிழ் பேசுகிறார்.அப்புறம் இன்னொரு விஷயம், நந்தனாவுக்கு, அபர்ணா, அர்ச்சனா என இரட்டை சகோதரிகள் உள்ளனராம். அவர்களும்விரைவில் சினிமாவுக்கு வர ஆர்வமாக உள்ளார்களாம். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்.

By Staff

முதல் படம் போணியாகாவிட்டாலும் இப்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நந்தனா.

"சக்ஸஸ் என்ற உருப்படாத படத்தில் சிவாஜியின் பேரன் துஷ்யந்த்துடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் தான் இந்த கேரளத்துக் குட்டிநந்தனா. முதல் படமே போணியாகாததால் வெறுத்துப் போன நந்தனா, சிறிது காலம் கோலிவுட்டை சுற்றி சுற்றி வந்து பார்த்தார்.ஒன்றும் தேறவில்லை.

இதனால் அடுத்த வண்டியைப் பிடித்து மலையாள மண்ணிலேயே சேபாக லேண்ட் ஆனார். அங்கு துக்கடா வேடங்கள் மட்டுமேகிடைத்தன.

இதனால் கேரளத்தில் இருந்தபடியே சென்னையில் ஒரு மீடியேட்டரைப் போட்டு வாய்ப்பு பிடிக்கும் வேலையை ஆரம்பித்தார்.இந்த டெக்னிக் ரொம்பவே உதவிவிட்டது நந்தனாவுக்கு.

அவரே எதிர்பாராதவிதமாக அடுத்தடுத்து படங்கள் புக்காகிவிட்டன.

இப்போது ஒரே நேரத்தில் "கலிங்கா, "உன்னைக் கண்டேனடி, "ஏபிசிடி என 3 படங்களில் நடித்து வருகிறார்.

கலிங்காவில் பாலாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஒரு ரெளடியின் வாழ்வில் குறுக்கிடும் பிளஸ் டூ மாணவியாக இவர் நடிக்கிறார்.புதுமுக இயக்குனரான ராம் பிரபா டைரக்ட் செய்யும் இந்தப் படத்திற்காக சென்னை காசி மேடு கடற்கரையில் பல லட்சம் மதிப்பில்செட் போட்டிருந்தார்கள்.

ஆனால் அந்த செட்டை சுனாமி அடித்துக் கொண்டு போனதால் நீலாங்கரையில் மீண்டும் செட் போட்டு எடுத்துள்ளனர்.

"ஏபிசிடியில் ஷாமுடன் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நந்தனா தவிர ஸ்னேகா, அபர்ணா ஆகியோரும் உள்ளனர்.இந்தப் படத்தை சிட்டிசன் புகழ் ஷரவண சுப்பையா இயக்குகிறார்.

அது என்ன "ஏபிசிடி என்று டைரக்டரிடம் கேட்டால், பெயரிலேயே ஒரு புதுமை இருக்கிறதல்லவா? அது படத்திலும் இருக்கும்என்று பொடி வைத்து பேசினார். காதல்.. ஒரு சுகமான அனுபவம். பலருக்கு பொழுதுபோக்கு. சிலருக்கு சுவாசம்.

ஒருவருக்கு ஒருத்தி மீதும், ஒருத்திக்கு ஒருவர் மீதும் காதல் வரும் என்பது தான் எழுதப்படாத மரபு. ஆனால் இக்கதையின்நாயகன் மூன்று பெண்கள் மீது உயிருக்குயிராய் காதல் கொள்கிறான். மூன்று பெண்களும் நாயகனை மனதார காதலிக்கிறார்கள்.

இவை நடைமுறைக்கு சாத்தியமா, இல்லையா என்பதை சுவையாக, ஜனரஞ்சகமாக, கலாச்சார, நாகரீக மரபுகள் மீறாமல்அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இயக்கி வருவதாக மூச்சு விடாமல் கூறி முடித்தார் இயக்குனர்.

புதிய படங்கள் குறித்து நந்தனாவிடம் கேட்டபோது, இந்தப் படத்தில் பாரதி என்ற கேரக்டரில் நான் நடிக்கிறேன். அருமையானரோல் இது. நிச்சயம் நான் பேசப்படுவேன். அதேபோல "உன்னைக் கண்டேனடியில் இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். இதுவும்பிரமாதமாக பேசப்படும். "கலிங்காவிலும் எனக்கு நல்ல வேடம்தான்.

என்னைப் பொருத்தவரை நல்ல ரோல்கள் கிடைக்க வேண்டும். அது கிளாமரா, ஹோம்லியா என்பது பிரச்சினையில்லை என்றார்.

கூடவே, உங்களுக்குத் தெரியுமா? எனது உதடுகள்தான் ரொம்பக் கவர்ச்சியானவை என்று பலபேர் என்னிடம் கூறியுள்ளார்கள்.எனவே எனக்கும் எனது உதடுகள்தான் ரொம்பப் பிடிக்கும். ஐ லவ் மை லிப்ஸ்.. என்று அவராகவே கூறினார்.

முதல் படத்தில் தமிழ் பேச முடியாமல் ததிங்கினத்தோம் போட்ட நந்தனா இப்போது நன்றாகவே தமிழ் பேசுகிறார்.

அப்புறம் இன்னொரு விஷயம், நந்தனாவுக்கு, அபர்ணா, அர்ச்சனா என இரட்டை சகோதரிகள் உள்ளனராம். அவர்களும்விரைவில் சினிமாவுக்கு வர ஆர்வமாக உள்ளார்களாம். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்.

More from Filmibeat

Read more about: act eager films nandhana twin sisters
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X