»   »  நந்திதா ரகசிய கல்யாணம்!

நந்திதா ரகசிய கல்யாணம்!

Subscribe to Oneindia Tamil

ஈர நிலம் நந்திதா திடீரென காதலரை மணந்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

பாரதிராஜாவின் ராசிக் கரங்களால் சினிமாவுக்கு இழுத்து வரப்பட்டவர் நந்திதா. ஈர நிலம் படத்தின் நாயகி.பிரபல டான்ஸ் மாஸ்டர் சின்னாவின் சீமந்தப் புத்திரி.

ஈர நிலம் நந்திதாவின் கிளாமரை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்ட உதவியது. கிளாமரில் கில்லியாகநந்திதா இருந்தும் கூட அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்து விடவில்லை.

அப்படியும் இப்படியுமாக ஊசலாடி வந்த நந்திதா, லேட்டஸ்டாக நடித்துக் கலக்கிய படம் இம்சை அரசன் 23ம்புலிகேசி. இதில் கிளாமரான குத்துப் பாட்டுக்கு கோலாகலமாக ஆட்டம் போட்டிருந்தார் நந்திதா.

திரையுலக வாழ்க்கை ஊசலாட்டத்தில் இருந்தாலும் கூட சைடில், காதல் உலகில் கலக்கலாக நடை போடஆரம்பித்தார் நந்திதா. பிரபல ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரின் உதவியாளர் காசி என்பவருடன் நந்திதாவுக்குபாசப் பிணைப்பு ஏற்பட்டுப் போனது.

நீண்ட காலமாக ஒரு பக்கமாக ஓடிக் கொண்டிருந்த இந்தக் காதலுக்கு இரு தரப்பு குடும்பங்களிலும் கடும்எதிர்ப்பு களேபரமாக இருந்தது. இதனால் காதல் கை கூடுமா என்ற கவலையில் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார் நந்திதா.

இந்த நிலையில், இன்று திடீரென இருவரும் வடபழனி முருகன் கோவிலில் வைத்து ரகசியத் திருமணம் செய்துகொண்டனர். நந்திதா வீட்டை விட்டு வெளியேறி வந்து காசியை மணந்துள்ளாராம்.

கல்யாணத்தை முடித்தக் கையோடு, பதிவாளர் அலுவலகத்திற்குப் போய் திருமணத்தை பக்காவாக பதிவும்செய்து கொண்டு விட்டனர்.

கன்னட பிரசாத் களேபரம், ப்ரீத்தி வர்மா மாயம், தேவிப்பிரியா திருவிளையாடல் என குண்டக்க மண்டக்கவெளியான செய்திகளில் சோர்ந்து போய்க் கிடந்த கோலிவுட்டுக்கு நந்திதாவின் திருமணச் செய்தி கொஞ்சம்ஆறுதலாக இருக்கும் என நம்பலாம்!

Read more about: nandhitha marries secretly

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil